திரைப்படப் பாடல்களில் தென்படும் இலக்கியச் சாயல்கள். http://tamilagam52.blogspot.com/2019/12/blog-post_16.html
திரையிசைப் பாடல்களில் சில இலக்கியக் கூறுகள்.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்களில் எனக்குத்
தென்பட்ட சில இலக்கியக் கூறுகளை எடுத்தியம்ப விழைகிறேன்.
இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையன்று. மேலும் கவிஞரின் அனைத்துத்
திரைப் பாடல்களையும் நான் படித்திலேன். நான் படித்த மற்றும்
கேட்டு இரசித்த சிற்சில பாடல்களில் எனக்குத் தென்பட்ட இலக்கியத்
தன்மைகளைத் தெரிவித்துள்ளேன்.
தொன்மைமிகு தமிழ்மொழி மிகப் பெரிய அளவில் இலக்கிய வளம்
படைத்தது. எத்தனையோ புலவர்கள் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.
அவ்வப்பொழுது தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளனர். எத்தனையோ
விதமான கற்பனைகள், உவமை, உருவகம் ,சொல்லணி, பொருளணி
நயங்களைக் கையாண்டு இலக்கியம் படைத்துள்ளனர். இவர்களுக்குப் பின்
வரும் அடுத்த தலைமுறையினர் இலக்கியம் படைக்கும் போது முன் தலை
முறையினர் கையாண்ட வழிமுறைகளை ஆங்காங்கே எடுத்தாள்வது மிக
இயல்பானதே. இதைத் தவிர்க்கவே இயலாது. எடுத்துக் காட்டாகக் கம்பர் தம்
இராமாயணத்தில் தமக்கு முன்பிருந்த சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்
தக்கதேவரின் கற்பனை, சொல்லாடல்கள், உவமை உருவக நயங்கள் முத
லியவைகளில் சிலவற்றை ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளார். இதைப் போல
வே கம்பருக்குப் பின்வந்த இலக்கியவாதிகள் கம்பரின் வழிமுறைகளை
எடுத்தாண்டுள்ளனர். இதைப் போலவே கவிஞர் கண்ணதாசனின் திரையிசைப்
பாடல்களிலும் முந்திய தலைமுறைப் புலவர்களின் கற்பனைநயம், சொல்நயம்
முதலானவை ஆங்காங்கே தென்படுகின்றன. ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.
தனிப்பாடல் திரட்டு நூலில் இடைக்காலப் புலவர் ஒருவர் பாடிய பாடல் தென்படுகிறது:
"மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக்
காவுறங்கின இன்னம்என்மகள் கண்ணுறங்கிலள்" என்னும்
வரிகளையும், தாயுமானவர் பாடிய
"மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளவெல் லாமுறங்கும்
கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே" என்னும்
வரிகளும், கம்பர் இயற்றிய
"நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்"
பாடலில் பயின்று வரும் வரிகளும் கவிஞர் கண்ணதாசனின்
"காட்டில் மரமுறங்கும் கழனியிலே நெல்லுறங்கும்
பாட்டில் பொருளுறங்கும் பாற்கடலில் மீனுறங்கும்
காதல் இருவருக்கும் கண்ணுறங்காது அதில்
காதலன் பிரிந்துவிட்டால் பெண்ணுறங்காது"
என்னும் பாடலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது நன்கு
தெரிகின்றது.(படம்: மாலையிட்ட மங்கை).
மற்றொரு எடுத்துக்காட்டாகக் கம்பர் இயற்றிய கீழ்க்கண்ட
பாடலைப் பார்ப்போம்:
"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவ துண்டோ?
மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ண லேநின்
கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன் ".
விசுவாமித்திரர் இராமனைப் புகழ்ந்து கூறியவை: "தாடகைக்கு எதி
ரான போரில் இராமா! உன் கைவண்ணத்தைக் கண்டேன். தற்பொழுது
உன் பாதம் பட்டவுடன் கல்லாக உருமாறியிருந்த அகலிகை மீண்டும்
பெண்ணுருவம் அடைந்ததன் வாயிலாக உன் கால்வண்ணத்தைக்
கண்டேன்" என்றார். இப்பாடலில் 'வண்ணம்' என்ற சொல் எட்டுமுறை
பயின்றுவந்துள்ளது. இந்தப் பாடலின் சாயல் கண்ணதாசனின் பாசம்
என்ற திரைப் படத்தில் வரும் கீழ்க்கண்ட பாட்டில் தென்படுகிறது:
"பால்வண்ணம் பருவங்கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு
மால்வண்ணம் நான்கண்டு வாடுகிறேன் " எனக் கதாநாயகன்
பாடக் கதாநாயகி பதிலிறுக்கும் விதமாகக் கீழ்க்கண்டவாறு
பாடுகிறாள்.
"கண்வண்ணம் அங்கே கண்டேன்; கைவண்ணம் இங்கே கண்டேன்;
பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன்". இந்தப் பாடலில்
இன்னும் பல வரிகள் உள்ளன. மொத்தமாகப் பன்னிரண்டு முறை
வண்ணம் என்ற சொல் பயின்றுவந்துள்ளது.
இனி, வேறொரு பாடலைப் பார்ப்போம்:
"இருந்தவளைப் போனவளை என்னை அவளைப்
பொருந்த வளைபறித்துப் போனான்--பெருந்தவளை
பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து".
தனிப்பாடல்திரட்டில் காணப்படும் கம்பரின் பாடல்.
பெண் ஒருத்தியின் கூற்று:
மாத்தத்தன் சோழநாட்டில் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசன்.
அவன் தன் பகுதியிலுள்ள தெருக்களில் உலா வரும்போது
அவன் சிறப்பையறிந்த மக்கள் அவனை வாழ்த்தி வரவேற்
கின்றனர். அக் கூட்டத்திலேயுள்ள கன்னிப் பெண்கள் அவன்
பால் மனத்தைப் பறிகொடுத்துக் கைவளையல்களை நெகிழ
விட்டனர். இது மன்னர்களையும் சிற்றரசர்களையும் அகப்
பொருள் துறையில் புகழ்ந்து பாடுவதற்காக உலா என்னும்
சிற்றிலக்கியம் படைக்கப் புலவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை.
வழக்கம் போலக் கம்பனைப் பெரிதும் பின்பற்றும் கவிஞர்
கண்ணதாசன் புதிய பூமி என்ற திரைப்படத்தில்
"சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு;
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு"
என்ற பாடலில் வளை என்ற சொல் பலமுறை வருமாறு
இயற்றியுள்ளார்.
இனி, அனைவரும் நன்கு அறிந்த பட்டினத்தார் பாடல்:
"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலம் மேல்வைத் தழும்மைந் தரும்சுடு காடுமட்டே;
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே".
இந்தப் பாடலின் சாயல் பாத காணிக்கை என்னும்
படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய
"வீடுவரை உறவு; வீதிவரை மனைவி;
காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?"
என்ற திரைப் பாடலில் தென்படுகின்றது.
புறநானூற்றையும் கவிஞர் விட்டுவைக்கவில்லை.
"அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே".
பாரிமகளிர் பாடிய இப்பாட்டில் "கடந்த திங்களில்
வெண்ணிலவு காய்ந்த பொழுது எம் தந்தை எம்
முடன் இருந்தார். எங்கள் குன்றும்(பறம்பு மலை)
எம்வசம் இருந்தது. இந்த மாதத்தில் வெண்ணிலவு
காயும் பொழுது எம் தந்தை எம்முடன் இலர்(மூவேந்
தர்களால் கொல்லப்பட்டார்). எம் குன்றும் எம்வசம்
இல்லை(எம் குன்றைக் கைப்பற்றிக் கொண்டனர்).
இப் பாடலிலுள்ள வரிகளின் சாயல் நாடோடி படத்தில்
கவிஞர் இயற்றிய
"அன்றொருநாள் அதே நிலவில் அவர்இருந்தார் என்
அருகே; நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை;
நீ அறிவாயே வெண்ணிலவே" என்றதிரையிசைப்
பாடலில் தென்படுகின்றது.
இராமச்சந்திர கவிராயர் இயற்றிய கீழ்க்கண்ட பாடல்
மிகப் புகழ்பெற்றது:
"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான் ஐயோ! எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான் பண்ணி னானே."
இந்தப் பாடலால் கவரப்பட்ட கவிஞர் கண்ணதாசன்
பாவமன்னிப்பு என்ற படத்தில் " அத்தான், என்னத்தான்,
அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி" என்ற
திரைப்படப் பாடலை இயற்றினார்.
இனி, திருக்குறளில் பயின்றுவரும் கீழ்க்கண்ட பாடல்
எவ்வாறு கவிஞர்க்கு உதவியது என்பதைப் பார்ப்போம்:
"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்".(குறள்:1094). இப்பாடலின்
கருத்தை வாழ்க்கைப் படகு என்னும் திரைப்படத்தில்
அவர் இயற்றிய "நேற்றுவரை நீயாரோ நான் யாரோ?
இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ?
காணும்வரை நீ எங்கே நான் எங்கே?
கண்டவுடன் நீ அங்கே நான் இங்கே
உன்னைநான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே;
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே."
என்ற திரையிசைப் பாடலில் திருக்குறள் கருத்து பதியப்
பட்டிருக்கும்.
இன்னும் ஆராய்ந்தால் பாடல்கள் கிடைக்கும். ஏன்
என்றால் நம் இலக்கியம் மிக மிகச் செழுமையானது.
திரையிசைப் பாடல் இயற்றும் கவிஞர்கள் அனைவருமே
இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். கவிஞர் கண்ண
தாசன் தமிழ் இலக்கியத்தில் ஊறித் திளைத்தவர்.. அதிலும்
குறிப்பாகக் கம்பர் மீது மிகுந்த ஈடுபாடுடையவர். எனவே
திரையிசைப் பாடல்களில் இலக்கியக் கூறுகள்தென்
படுவதில் வியப்பேதும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு
மேலான இலக்கியத் தொன்மை கொண்ட நம் மொழியில் கூறப்
படாத கருத்தோ கற்பனையோ இல்லை. அதனால் எவர் கவிதை
படைத்தாலும் முந்திய இலக்கியக் கூறுபாடுகள் தென்படுவதில்
தவறேதும் இல்லை. எந்தக் கவிஞரையும் குறை சொல்லவே
இயலாது.

No comments:
Post a Comment