Friday 13 January 2023

பார்த்தேன்

 https://news7tamil.live/a-collection-of-film-songs-with-literary-style.html

காதலால் கட்டுண்ட இருவரில், காதலி தன்னை பார்க்காமல் செல்வதால் மன நோய் உண்டாவதாக கூறும் காதலன். மறுகணம் அவள் தன்னை பார்த்ததால், தனது நோய் போய்விட்டது என கூறுகிறான். இந்த உணர்வை, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு, நோய்நோக்கொன் றந்நோய் மருந்து” என்கிறார் திருவள்ளுவர்.

மையூட்டப்பட்ட அந்தப்பெண்ணின் கண்களுக்கு இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது என விளக்கம் தருகிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா. திருவள்ளுவர் கூறிய அந்த வரிகளை ஒற்றை வரியில் தருகிறார் கவியரசர் கண்ணதாசன்.

18 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அபிராமி அந்தாதியில், “குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து மறித்தேன்” அன அன்னை அபிராமியை போற்றுகிறார் அபிராமி பட்டர். இந்த கருத்தை உள்வாங்கிய கவியரசு கண்ணதாசன், வீர அபிமன்யு திரைப்படத்தில், ”பார்த்தேன், சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன், அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்” என 87 இடங்களில் தேன் என்ற வார்த்தை இடம் பெறும் வகையில் பாடலை அமைத்தார். தேன் சிந்தும் கவிதைக்கு ஏற்ற ராகத்தைத் தேர்ந்தெடுத்து, மெல்லிய வீணையின் இசையில், இனிக்கும் இசையை தந்திருப்பார் கே.வி. மகாதேவன்.

No comments:

Post a Comment