Tuesday 10 January 2023

யூதர்கள் சில விசித்திரமான வழக்கங்கள்

 யூதர்கள் சில விசித்திரமான வழக்கங்கள் இருக்கின்றன.

உதாரணமாக கடவுளின் சந்நிதியில், “ஐயோ, நான் ஒன்றுமில்லாத குப்பை" என்று சொல்லிக்கொண்டு மாரில் அடித்துக் கொள்வார்கள்.
அகங்காரம் வரக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என்று அவர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
இப்படித்தான் ஒரு நாள் யூதர்களின் மதகுருவும் ஆலய அதிகாரி ஒருவரும் யூதர்களின் ஆலயம் ஒன்றில் அமர்ந்து "நான் குப்பை" நான் குப்பை” என்று கத்தியபடி மார்பில் அடித்துக் கொண்டிருந்தார்கள். "
அப்போது அந்த ஆலயத்தின் காவலாளி அவர்களைப் பார்த்தான். அவனும் வந்து அவர்கள் அருகே அமர்ந்து 'நான் குப்பை' என்று சொல்லியபடி தனது மார்பில் அடித்துக் கொள்ள ஆரம்பித்தான்.
இப்போது அந்த ஆலய அதிகாரி ஓரக்கண்ணால் மதகுருவைப் பார்த்தார்.
"காலம் கெட்டுவிட்டது, குருவே. அங்கே பாருங்கள் நமது கோயில் காவல்காரன் நம்மைப் போல் 'நான் குப்பை' என்று சொல்லி மார்பில் அடித்துக் கொண்டிருக்கிறான். யார் எதைச் செய்வது என்று ஒரு விவஸ்தை வேண்டாம்?'
கேவலம், ஒரு காவல்காரன், இறைவன் சந்நிதியில் 'நான் குப்பை' என்று சொல்லுவதா? 'நான் குப்பை' என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு குறைந்த பட்சத் தகுதி வேண்டாம்?
இப்போது புரிகிறதா இவர்களின் அகந்தையும்,முட்டாள்தனமும்?
உண்மையை உணராத உங்கள் நம்பிக்கைகள், மத பழக்கவழக்கங்கள் உங்களை மேலும் பந்தப்படுத்தும். அவை உங்கள் விடுதலைப் பாதையின் பெரிய தடைக்கற்களாகவே இருக்கும். அந்த நம்பிக்கைகள் புதிய அடிமை விலங்குகளை உருவாக்கும்.
அந்த அடிமை விலங்குகள் பார்க்க அழகாக, பளபளப்பாக இருக்கலாம். என்றாலும் அவை அடிமை விலங்குகள் தான். பொன்னால் செய்த விலங்கு என்றாலும், அது நம்மைக் கட்டுப்படுத்தத்தானே செய்கிறது?
அப்போது தான் திருமணமாகியிருந்தது அந்த கிராமத்துப் பெண்ணுக்கு. 'தாம்பத்தியத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத அப்பாவியாக வளர்ந்து விட்டிருந்தாள் அந்த பெண்.
அவளுடைய தாய் அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்கே சேவல் ஒன்று பெட்டைக் கோழியைப் புணர்வதைக் காட்டினாள்.
இன்று உனக்கு முதலிரவு. ஏறக்குறைய இதைப்போல ஏதோ நடக்கும் எதற்கும் தயாராக இரு." என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள் தாய்.
அன்று இரவு அவளுடைய கணவன் ஆசையுடன் முதலிரவு அறைக்குள் நுழைந்தான். அவள் இருந்த கோலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டான்.
உடம்பில் பொட்டுத் துணி இல்லாமல் படுக்கையில் இருந்தாள் புது மணப்பெண். ஆனால் அவளது தலையில் ஓர் இரும்புச் சட்டியை கட்டிக் கொண்டிருந்தாள்.
பயந்தபடியே கேட்டான் கணவன்.ஏன் இந்தக் கோலம்..."
"இங்கே பாருங்கள். என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.
ஆனால் தலையில் கொத்தும் வேலை மட்டும் வேண்டாம். ஆமாம் சொல்லி விட்டேன்.”
தானாகப் புரிந்து கொள்ளாமல் அடுத்தவரிடம் கடன் வாங்கும் அறிவு அது போன்ற ஒரு நிலையைத்தான் உங்களுக்குக் கொடுக்கும்.
நீங்கள் ஏசுநாதர் சொன்னதைக் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லலாம். இல்லை,
கிருஷ்ணர் சொன்ன கீதை சுலோகங்களை மனப்பாடமாக ஒப்புவிக்கலாம்.
இல்லை மோசஸ், லா ட்சூ சொன்னதைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அவை உங்களுக்கு எந்த விதத்திலும் உதவாது.
ஞானம் பெற்ற மகான்களின் வாழ்க்கை உங்களை உற்சாகப்படுத்தி உங்கள் வழியில் நடக்கவைக்கலாம். ஆனால் கண்ணை மூடிக் கொண்டு அவர்கள் சொன்னதையே சொல்வதால் உங்களுக்கு எந்த பயனும் உண்டாகாது.
உங்களுக்குள்ளே ஒரு பெரிய பொக்கிஷம் இருக்கிறது. இந்த உலகத்தையெல்லாம் பிரகாசமாக வைக்கக்கூடிய ஓர் ஒளிஇருக்கிறது.
ஆனால் நீங்கள் கடன் வாங்கிய அறிவைக் கட்டிப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதை விட்டொழித்து விட்டு உங்களுடைய மையத்துக்குச் செல்லுங்கள். அங்கே கொட்டிக் கிடக்கும் பொக்கிஷத்தின் உரிமையைக் கோருங்கள்.
நீங்கள் உங்கள் பணம், வீடு, கார் முதலியவற்றைத் துறக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவற்றால் எந்த பிரச்சினையும் இல்லை.
உங்கள் மனதை, துறங்கள். அங்கேதான் பிரச்சினையே இருக்கிறது. உங்கள் அறிவு தான் உங்கள் பாதையில் இருக்கும் மிகப் பெரிய தடைக்கல். உங்களை உங்கள் மையத்துக்குப் போகவிடாமல் தடுப்பது உங்கள் மனம்தான்.
வார்த்தைகள், சாஸ்திரங்கள், புனிதநூல்கள், நம்பிக்கைகள், அறிவு இவை எல்லாம் உங்களைக் கட்டிப் போட்டிருக்கும் விலங்குகள்.
தானாக உணராமல், கடன் வாங்கிய விலங்குகளை உடைத்து வீசுங்கள். உங்கள் உள்ளே செல்லுங்கள்.
புத்தர் தன்னுடைய மையத்தை தேடி அடைந்தார். உங்களுடையதை அல்ல.
நீங்களும் உங்கள் மையத்தை தேடி அடையவேண்டும்.புத்தருடையதை அல்ல.
__ஓஷோ.
1 நபர் மற்றும் வானம் இன் படமாக இருக்கக்கூடும்
289
21 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
அனுப்பு

21 கருத்துகள்

முதன்மை கருத்துகள்

  • Muthu Pandian
    1)மையம் கண்டறியமுடியாமல் மக்கள் தவிக்க, எப்படி புரியும்?. 2) நம்பிக்கை எப்படி கடிப்போடும், அவை தான் மை யித்திருக்கு செல்ல உதவும் கடத்தி. 3) புத்தர், கிருஷ்ணா சொ

No comments:

Post a Comment