Tuesday 10 January 2023

ஒரு பெண் கூடவா புத்தரைப் போல், மகாவீரரைப் போல் ஞானியாகவில்லை?

 ஓஷோவிடம் கேள்வி.

நீங்கள் பல ஞானிகளைப் பற்றி எங்களுக்குச் சொல்லி யிருக்கிறீர்கள். ஆனால் எல்லாருமே ஆணாக இருப்பதன் மர்மம் என்ன? ஒரு பெண் கூடவா புத்தரைப் போல், மகாவீரரைப் போல் ஞானியாகவில்லை?"
பெண்களோடு நெருங்கிப் பழகும் எல்லா ஆண்களுக்கும், பெண்கள் வித்தியாசமானவர்கள் என்ற அடிப்படை உண்மை புரிந்திருக்கும்.
ஒரு பெண்ணோடு தர்க்கரீதியாக விவாதம் செய்ய முடியாது. அதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள். புரிந்து கொள்ள முடியாது.
அவளது போக்கைப் பார்க்கும் அவள் வேறு கிரகத்தைச் சேர்ந்தவளோ என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.
அதே போல் தான் ஒரு பெண்ணின் நிலையும்.
எப்போது பார்த்தாலும் அறிவின் மூலமாகவே உலகத்தை உணர முயன்று கொண்டிருக்கும் முட்டாள்கள் என்று தான் ஆண்களைப் பற்றி அவர்கள் நினைப்பார்கள்.
உணர்வு சம்பந்தப்பட்ட எதையும் புரிந்து கொள்ள லாயக்கில்லாதவர்கள் ஆண்கள் என்றுதான் பெண்கள் நினைக்கிறார்கள்.
ஆண் வாதம் செய்கிறான். தர்க்கரீதியாக உண்மையைப் புரிய வைக்க முயற்சி செய்கிறான். ஆனால் அதை பெண்ணின் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. அது அவளுடைய வழியில்லை. தர்க்கத்திற்கும், பெண்ணிற்கும் சம்பந்தமேயில்லை.
தன் மனைவியோடு பல மணிநேரம் செய்யும் வாதத்தைவிட ஒரு சிறிய ரோஜாப்பூ அதிக மதிப்புடையது என்பதைப் பல கணவர்கள் புரிந்து கொள்வதில்லை.
ஒரு மணி நேரம் வாய்கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள்.
நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள்.உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது.
ஒரு சிறிய ரோஜா மலரைக் கொண்டு போய், "நான் உன்னைக் காதலிக்கிறேன்." என்று மென்மையாகச் சொல்லுங்கள். அவள் புரிந்து கொள்வாள்.
பெண் உணர்ச்சிமிக்கவள். உணர்வு பூர்வமானவள். ஓர் ஆணால் ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவள் சொல்வது, செய்வது எல்லாமே காரண-காரிய அறிவுக்குப் புறம்பானதாக இருக்கும்.
கணவன் மனைவியிடம் எதையும் தர்க்க ரீதியில் பேசி புரியவைக்க முடியாது.
அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கணவர்கள் மௌனமாகிவிடுகிறார்கள். பின் செவிடுகளாகிவிடுகிறார்கள்.
பெண்களை பேச விடுகிறார்கள். அவள் “ என்ன அபத்தத்தை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும். நாம் ஏன் அதைக் கவனிக்க வேண்டும்?” என்ற மனோபாவத்துக்கு வந்துவிடுவார்கள்.
கடவுள் ஏன் முதலில் ஆணைப் படைத்து, சிறிது நேரம் கழித்துப் பெண்ணைப் படைத்தார் தெரியுமா?
பாவம், ஆண் அந்த நேரம் நிம்மதியாகப் இருக்கட்டுமே என்றுதான்.
ஆண்கள் ஏன் பெண்டாட்டி தாசர்களாக, ஆமாம்சாமிகளாக இருக்கிறார்கள்? ஏறக்குறைய எல்லா ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும்.
எவ்வளவு நேரம் தான் மனைவியோடு வாதம் செய்ய முடியும் சொல்லுங்கள். மனைவியோடு வாதம் செய்வதில் பயனேயில்லை.
அப்படி வாதம் செய்யும் போது நீங்கள் முட்டாளைப் போல் காட்சியளிப்பீர்கள். மனைவியோடு வாதிடுவதற்குப் பதிலாக சுவரோடு வாதிடலாம்.
நீங்கள் வாதம் செய்வீர்கள். உங்கள் மனைவி பெருங்குர லெடுத்து அழுவாள். உங்களுக்கு என்ன செய்வது என்று தெரி யாது.
நீங்கள் அவளிடம், "அமைதி, அமைதி. நாம் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாமே!" என்று அவளிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் போது அவள் சாமான்களைத் தூக்கியெறிய ஆரம்பிப்பாள். பாத்திரங்களைப் போட்டு உடைப்பாள். கதவை டமால் என்ற பெருஞ்சத்தத்துடன் சாத்துவாள்.
அவளோடு பேசி என்ன பயன் என்று விரக்தி வந்துவிடும் உங்களுக்கு. அவளோடு எப்படித் தொடர்பு கொள்வது? அவளை எப்படிப் புரிந்து கொள்ளச் செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பீர்கள்.
அவள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வீண் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
அதன் பின் பெண்டாட்டி தாசனாகிவிடுவீர்கள். அவளைப் பொறுத்த மட்டில் உங்கள் வாத-பிரதிவாதங்கள் எல்லாம் கவைக்கு உதவாத குப்பை.
“நான் என் மனைவியை விவாகரத்து செய்யப்போகிறேன்." என்றான் ஒருவன்.
'அதற்கு வலுவான காரணம் வேண்டும்." என்று அவனது வக்கீல் சொன்னார்.
'அவள் சதா எதையாவது தைத்துக் கொண்டேயிருக்கிறாள்.” “ '
அது ஒரு காரணமா? நிறையப் பெண்கள் தைக்கிறார்களே!"...
நாங்கள் உடலுறவு கொள்ளும் போது கூட அவள் தைத்துக் கொண்டிருக்கிறாள்.” "என்றான் கணவன்.
ஆண்மை நிர்மலமாக இருக்கிறது, பெண்மை கலங்கலாக இருக்கிறது
ஆண்மை செயல்பாட்டுடன் இருக்கிறது. பெண்மை செயலற்ற நிலையாகப் பரிமளிக்கிறது.
அதனுடைய வேராக இருக்கும் சாரத்திலிருந்து வெளிப்படும் இறைமை,பிரபஞ்சத்தில் உள்ள கடைசிப் பொருள் வரை ஊடுருவிப் பாய்கிறது. அதுதான் வானத்தையும், பூமியையும், இரண்டுக்கும் இடைப்பட்ட எல்லா பொருள்களையும் அளித்துக் காக்கிறது.
நிர்மலமான தெளிவே தெளிவற்ற கலங்கலை உருவாக்குகிறது.
அசைவுதான் அசைவற்ற இருப்புநிலையை உருவாக்குகிறது.
புத்தர்கள் எப்போதும் ஆண்களாகத்தான் இருப்பார்கள்.
ஞானத்தை அடைய, இறைவனை அடைய ஒரு பெண்ணின் அணுகுமுறை அடிப்படையில் மாறுபட்டதாக இருக்கும்.
அதனால் தான் புத்தர்களில் பெண்பாலார் இருக்க மாட்டார்கள். '
ஞானம் பெற்ற பெண்கள் பக்த மீராவாக, மேக்டலீனாக, லல்லாவாக, ரபியாவாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் புத்தர்களாக இருக்க மாட்டார்கள்.
அவர்கள் அணுகுமுறை வேறுபட்டதாகத்தான் இருக்கும். மீரா அறிவுஜீவித்தனமாகப் பேசமாட்டாள். பக்தி ரசம் சொட்டச் சொட்டப் பாடுவாள்.
புத்தரைப் போல் மீரா உபதேசங்கள் செய்ததாக வரலாறு இல்லை. மீராவின் பாட்டும் நடனமும் முற்றிலும் வேறு வகையைச் சேர்ந்தது.
மீரா வாத-பிரதிவாதங்களில் கலந்து கொள்ள மாட்டாள். அது பெண்மையின் வழியல்ல. அவளுடைய வாதம் எல்லாம் அவளுடைய அழகு நடனம் தான்.
பரவசம் பொங்கும் நடனம்தான் அவள் நம் முன் வைக்கும் வலுவான வாதம்.
உங்களால் அவளுடைய நடனத்தைப் பார்க்க முடிந்தால், அதில் பொதிந்திருக்கும் பரவசத்தை உணர முடிந்தால் நீங்கள் ஞானம் பெற்றவர்களாகிவிடுவீர்கள்.
ஆண்கள் அறிவுபூர்வமானவர்கள்.
பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள்.
இருவரும் ஞானமடையலாம் வெவ்வேறு வழிகளில்.
__ஓஷோ.
2 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
109
13 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
அனுப்பு

13 கருத்துகள்

முதன்மை கருத்துகள்


No comments:

Post a Comment