Tuesday 10 January 2023

28/12/2022 கவியுள்ளம்

 28/12/2022 கவியுள்ளம்

1953 இல் நடிகர் ராஜ்கபூர் தயாரித்த 'ஆஹ்' காதல் சித்திரம் ;அவன்' ஆக மொழி மாறி வந்தது. ராஜ்கபூர் நர்கீஸுடன் விஜயலக்ஷ்மியும் நடித்த படமிது.சங்கர் -ஜெய்கிஷனின் இசையில் ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் பாடிய அத்தனை பாடல்களுமே கற்கண்டாய் இனித்தன. தமிழ்ப் பாடல் வரிகளின் சொந்தக்காரர் கம்பதாசன்
அன்பே வா அழைக்கின்ற எந்தன் மூச்சே
கண்ணீர் துன்பம் போச்சே கறை சேர்த்திடல் காதற்கே அன்பே வா அழைக்கின்ற எந்தன் மூச்சே
நல்ல ஹிந்திப்பாடல் மெட்டுகளுக்கு உயிரோட்டமான , கவிதை நயமிக்க வரிகளை எழுதியவர் கம்பதாசன்.AAH [1953 ] என்ற ஹிந்திப்படம் தமிழில் அவன் [1953 ] என்று மொழியாக்கம் செய்யப்பட்டது.அந்த படத்தின் அத்தனை பாடலகளையும் எழுதியவர் கம்பதாசன்.
கண் காணாததும் மனம் கண்டு விடும் [ A.M.ராஜா + ஜிக்கி ]
ஏகாந்தமாம் இம்மாலையில் என்னை வாட்டுது உன் நினைவே [ ஜிக்கி ]
அன்பே வா அழைக்கின்ற எந்தன் மூச்சே [ A.M.ராஜா + ஜிக்கி ]
காரிருள் நேரம் சாலையோ தூரம் கண்ணீர் பாரம் நெஞ்சிலே [ A.M.ராஜா ]
காலத்தை வென்று நிற்கின்ற , அமரத்துவம் மிக்க , மெல்லிசையில் தன்னிகரற்ற பாடல்களாக இன்றும் அவை விளங்குகின்றன.நல்ல பாடல்களைக் கொண்ட திரைப்படங்களை மொழி மாற்றம் செய்யும் போது விளைகின்ற நன்மைகளில் இதுவும் ஒன்றாகும்.அது மட்டுமல்ல திரும்பவும் ரீ மேக் [remake] செய்யப்படும் போதும் அதே நல்ல பாடல்கள் பயன் பட்டு வெற்றி பெறுகின்றன.

No comments:

Post a Comment