அன்பின் அவதாரம் இசை நாடகம்
(அரங்கத்தின் பிற்பகுதியில், உயர்ந்த மேடையிலே, முதுகை பின்புறம் காட்டியவண்ணம் ஒருவர் அமர்ந்திருப்பார், அவரின் தோற்றம் படைப்பாளியை மனதில் தோற்றுவிக்கவேண்டும், அவரை இருவர் கறுப்பு துணியால் மறைத்திருப்பார் (Just temoporary black sieance) ஒன்பது நடனகலைஞர்கள் மேடைக்குள் பிரவேசிக்க தயாராக இருப்பார்கள். அப்பொழுது அரங்கம் முழுவதும் இருட்டு பரவுகின்றது. எடுத்துரைஞன் அறிமுக பாடலுடன் மேடைக்கு வருகின்றான்)
குழுவினரின் பின்னனி கோரஸ், ஆ,,,ஆ,,,,,,ஆ,,,,,ஆ இசையோடு பாடப்படவேண்டும்.
எடுத்துரைஞன்: (ராகத்தோடு)
மானுடம் பிறந்தவாற்றை மக்களுக்குரைக்கவந்தேன் ! மானுட வரலாறிங்கே மாபெரும் வரலாறாகும் மானுடம் மீட்க வந்த மாபரன் மீட்பரின் கதையும் இங்கே மாபெரும் கதையாய் மாறும்!
(வசன நடையில்)
சபையோரே! கவனமாய் பாருங்கள் பிரபஞ்சம் இருக்கும், அதிலே சூரியன் வருவான் அந்த சூரியன துண்டுகளாய் சிதறி பரவுவான் அந்த தூண்டுகள் ஒன்றாய் இணைந்து பூமியாய் மாறும் அந்த பூமியிலே மனிதன் தோன்றுவான் அந்த மனிதன் சந்தோசமாய் ஆடிப்பாடி மகிழ்வாய் இருப்பான். இதனை சகித்துக்கொள்ளாத சாத்தான் மனிதனை வஞ்சித்து துன்பத்தில் வீழ்த்துவான் அந்த மனிதனை மீட்க மீட்பர் இயேசு அன்பின் அவதாராமாக பிறப்பார்.
ஆம் நாடகத்தின் பெயரும் அதுவே அதனை இசையோடு கதையாய் ஆடல் பாடலோடு உங்களுக்கு சொல்ல வருகின்றோம்! அதோ வருகின்றான் சூரியதேவன்
(ஒளித்தண்டுகளுடன் மேடையில் ஒன்பது கலைஞர்கள், பிரவேசித்து ஒரு வட்டாமாய் சுழலுகின்றனர்)
பின்னனி
ஆயிரம் கரங்கள் நீட்டி அனைக்கின்ற ஞாயிரே போற்றி போற்றி! அருள் பொங்கும் முகத்தை காட்டி இருள் நீக்கும் பகலவா போற்றி போற்றி
தாயினும் பரிந்து சலரைஅனைப்பாய் போற்றி போற்றி அனைத்தும் ஓர் உயிர்க்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி தூயவர் இதயம் போல, துலங்கிடும் ஒளியே போற்றி,
தூரத்தே நெருப்பை வைத்து, அண்டத்தின் வெளிப்பரப்பில் ஆகய வெளியில் நின்று வெந்தழல் பரிதி வேகமாய் சுழலலனான் வேகமாய் சுழலலனான் (இந்த வசனம் பலதடவை Repeat ஆகவேண்டும்)
(அகன்ற வட்டத்தில் சுற்றியவர்கள் படிப்படியாக சிறிய வட்டமாக சுற்றுகின்றனர். )
எடுத்துரைஞன் (ராகத்தோடு)
சுழன்று வந்த சூரியனின் துண்டுகள் சிதறிப்பறந்தனவே! (இந்தவேளை வெடிச்சத்தம் அதிரும்)
(சுற்றியவர்கள் இப்போது பாய்ந்து தனித்தனியே குறுகிய வட்டத்தில் மூவர் மூவராக, நிற்கின்றனர்)பின்னனி குரல் ஆ,,,,,ஆ,,,,,,,ஆ
எடுத்துரைஞன்: துண்டுகளின் சுழற்ச்சியிலே தொடர்ந்து குளிர்ந்ததுவே
( இப்போது படிப்படியாக வேகம் குறைந்து சுற்றுகின்றனர்)
எடுத்துரைஞன்: குளிர்ந்து குளிர்ந்து அது குவலயம் ஆனதுவே ( இந்த வசனம் தேவைக்கு ஏற்ப பலதடவை பாடாலம் , இறுதியில் மெல்லிய குரலோடு முடிக்கவேண்டும்)
(பின்னணி இசையில், தண்ணீர் சலசலக்கும் சத்தம், பறவைகள் ஊர்வனவுகலின் ஓசை கேட்கும், ஊர்வன, பறப்பன,நகர்வனவாக இந்த ஒன்பது கலைஞர்களும், பாவனை செய்வார்கள்)
இசை ராகத்தில், ஊர்வனவும்,,,,,,,,,,
பறப்பனவும்,,,,,,,,
நடப்பனவும்,,,,,,,,
(இடையில் சப்தங்கள், பறவைகளின் சத்தங்கள் கேட்கவேண்டும்)
கதிரவனும்,,,,,,,,,
கலைமதியும்,,,,,,
மானினமும்,,,,,,,,
மீனினமும்,,,,,,,,,,,,
ஆட்கொல் கனியும்,,,,,
கதிர்கொள் மனியும்,,,,,,,
கடவுள் கரத்தில்,,,,,,,,,,,,,
கலையுருவம் பெற்றன,,,,,,,,,,
(வசன நடையில்) இறுதியாக படைப்பின் சிகரமாய்,,,,
பரமனின் சாயலாக மனிதன் மண்ணாலே ஆக்கப்பட்டான்.
(இப்பொழுது கலைஞர்கள் குழு இரண்டு குழுவாக பிரிந்து, வலதும் இடதுமாகா, வட்டமாக குனிந்து நிற்பர்)
ஆதாம்,,,, ஆதாம்,,,,, ஆதாம்,,,,,
( வலப்புற வட்டக்குழுவுக்குள் இருந்து ஆதாம் எழும்புவார்)
ஏவாள்,,,,,, ஏவாள்,,,, ஏவாள்,,,,
(இடபுற வட்டக்குழுவில் இருந்து ஏவாள் எழும்புவாள்)
(Haunting இசைப்பாணியில்)
Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,
Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,
Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,
இன்பமும் சிறப்பும் நிறைந்த,,,,,,
சிங்காரத்தோப்பினிலே,,,,,,,,,
மண்ணிலே கண்குளிரும்,,,,,
இயர்கையுடன் இணைந்து,,,,,,,
சகரிகமா ,,,,ரிமகரிகா,,,,,நிகா,,,
இன்பமும் சிறப்பும் நிறைந்த,,,,,,
சிங்காரத்தோப்பினிலே,,,,,,,,,
மண்ணிலே கண்குளிரும்,,,,,
இயர்கையுடன் இணைந்து,,,,,,
சகரிகமா ,,,,ரிமகரிகா,,,,,நிகா,,,
சகரிகமா ,,,,ரிமகரிகா,,,,,நிகா,,,
மாநிதநிசா,,, தசநிதமா,,,, மாபமகரிசா,,,
மாநிதநிசா,,, தசநிதமா,,,, மாபமகரிசா,,,
விண்ணிலே,,,எண்ணிறைந்த,,,
தூதருடன் இணைந்து,,,,,
வாநிரைய வணங்குகின்றன,,,,,,
Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,
Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,
Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,Chஏ,,,,,
(சர்ப்பம் ஏவாளுக்கு கனி கொடுக்கும் காட்சி இசையுடன்)
ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,
ஆஹஹா,,ஆஹஹா,,ஆஹஹா,,
ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,
ஆஹஹா,,ஆஹஹா,,ஆஹஹா,,
ஆண்டவன் போல் வாழ ஒரு மனமோ?,,,
ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,
ஆஹஹா,,ஆஹஹா,,ஆஹஹா,,
மாண்டழியாதிருக்க நாளும் இரு மனமோ?
ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,
ஆஹஹா,,ஆஹஹா,,ஆஹஹா,,
பொய்யும்,, மெய்யும் ,,,,,,,,
தெளிவாகும் ஒரு மனமோ?
ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,
ஆஹஹா,,ஆஹஹா,,ஆஹஹா,,
உய்கின்ற கனியுண்பாய் பெருமகளே,,,,
ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,
ஆஹஹா,,ஆஹஹா,,ஆஹஹா,,
தத்தித்திரிகிட ,,, தித்தித்ரிகிடவே
தத்தித்திரிகிட ,,, தித்தித்ரிகிடவே
தத்தித்திரிகிட ,,, தித்தித்ரிகிடவே
தத்தித்திரிகிட ,,, தித்தித்ரிகிடவே
கொட்டும் இடியொலி,,,சொட்டும் எரிதனல் ,,,,
பட்டும் பாரடியே,,,,,,,,
கொட்டும் இடியொலி,,,சொட்டும் எரிதனல் ,,,,
பட்டும் பாரடியே,,,,,,,,
பட்டும் பாரடியே,,,,,,,,
தத்தித்திரிகிட ,,, தித்தித்ரிகிடவே
தத்தித்திரிகிட ,,, தித்தித்ரிகிடவே
தத்தித்திரிகிட ,,, தித்தித்ரிகிடவே
தத்தித்திரிகிட ,,, தித்தித்ரிகிடவே
ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,
ஆஹஹா,,ஆஹஹா,,ஆஹஹா,,
ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,ஓஹோஓ,,,,
ஆஹஹா,,ஆஹஹா,,ஆஹஹா,,
(பாடல்) கருணைக்கடலே நீ வரவேண்டும்,,,,,
கதியற்ற எம்மை,,
இருளில் இருந்து,, ஒளிக்கும்,,,
பொய்யில் இருந்து மெய்க்கும்
தாழ்வில் இருந்து வாழ்விக்கும், இட்டு செல்லா,,
வானம்க் விட்டு புவிதனில் வாராய்,,,
புவிதனில் வாராய்,,,,,,
(வசனம்) ஆன்டவன் கட்டளையை மீறிய ஆதிதாய் தந்தையருக்கு,
அவர் அளித்த கருணை மொழி, பெண்ணுக்கும்
உனக்கும் இன்றுமுதல் பகை விளைவிப்போம்!
அவளது கால்குதி உன் தலையை நசுக்கும்! என்ற
உறுதிமொழி, மனுக்குலத்தின் மாறுபட்ட ஓட்டத்தில்
மறைந்துவிடாது. தெளிவான விளக்கம் பெற்று
முன் அறிகுறிகளாலே துளக்கப்படுகின்றது.
(பாடல்) அன்பே தெய்வம், அவ்வன்பு அன்பின் ஆழத்தை
முன் அறிவிக்கின்றதே!
ஆழத்தை முன் அறிவிக்கின்றதே!
அன்பே தெய்வம், அத்தெய்வ அன்பே
அவதாரம் எடுக்கின்றதே!
மாபரன் மனித அவதாரம் தரிக்கும்
மாபெரும் அன்பே, மாபெரும் அன்பே,
ஆராரிராரிரோ ஆராரிராரிரோ
------ சுபம்---
No comments:
Post a Comment