Tuesday, 18 October 2022

பேர்கன் தமிழ் சங்கம் மீண்டும் துளிர்விடுகின்றதா?

 பேர்கன் தமிழ் சங்கம் மீண்டும் துளிர்விடுகின்றதா?

மிக மிக நீண்ட காலத்தின் பின்னர், அதாவது கிட்டதட்ட 5 வருடங்களு க்குப்பின்னர் ஒரு பொதுக்கூட்டத்தை, பல போராட்டங்கள் கோரிக்கைகள் வைத்தபின்னர் தமிழ் சங்கம் பொதுக்கூட்டம் வைப்பதற்கு முன்வந்துள்ளா ர்கள். இதற்கு முன்னரும்  நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களை பொதுக்கூட் டம் என்று சொல்லமுடியாது, குறைந்த பட்டசம் எட்டு அங்கத்தவர்களே கலந்து கொள்வார்கள். அதே தலைவர் நிர்வாக அங்கத்தவர்கள், புளித்து ப்போய் விட்டது. வினைதிறன் நிர்வாக திறன் அற்றவர்களே இதுவரையும் நிர்வாகிகளாக இருந்துள்ளார்கள் என்பதற்கு பட்டுப்போன தமிழ் சங்கம் ஒரு ஆதா ரம்! புதியவர்களை இணையுங்கள், ஆர்வமுள்ளவர்களிடம் சங்கத்தை ஒப்படையுங்கள் இதுவே  எமது தாழ்மையான கோரிக்கை. ஈழத்தமிழர் போராட் டத்தில் நோர்வேயின் வகிபாகம் எவ்வளவு முக்கிய த்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம், அதிலே நோர்வே தமிழ் புலம் பெயர்ந்தவர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை யும் நீங்கள் அறிவீர்கள்! எனவே கலை இலக்கிய அரசியல் இவைகளில் தமிழ் சங்கம் ஆர்வமாக செயல்படவேண்டும். எனவே இதுவரையும் நிர்வாகிகளாக இருந்தவர்கள், சமூக நன்மை கருதி விலகிச்செல்லுங்கள் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிவிடுங்கள்! வருகின்ற பொதுக்கூட்டத்தில் பழையவர்கள் விலகி புதியவர்களுக்கு வழிவிடுங்கள் நன்றி



No comments:

Post a Comment