Friday 22 April 2022

Haikers

 அநாமதேயமானது ஒரு பரவலாக்கப்பட்ட சர்வதேச ஆர்வலர் மற்றும் ஹேக்டிவிஸ்ட் கூட்டு மற்றும் இயக்கம் முதன்மையாக பல அரசாங்கங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் சர்ச் ஆஃப் சைண்டாலஜிக்கு எதிரான பல்வேறு சைபர் தாக்குதல்களுக்கு அறியப்படுகிறது. விக்கிபீடியா

நிறுவனர்: கிறிஸ்டோபர் பூல்
நிறுவப்பட்டது: 2003
பொன்மொழி: நாங்கள் அநாமதேயர்கள். நாங்கள் படையணி. நாங்கள் மன்னிக்க மாட்டோ ம். நாம் மறக்கவில்லை. எங்களை எதிர்பார்க்க.
நோக்கம்: சைபர்-கண்காணிப்பு எதிர்ப்பு; சைபர்-தணிக்கை எதிர்ப்பு; இணைய செயல்பாடு; இணைய விழிப்புணர்வு
பரிந்துரைகள்: சிறந்த செயல்பாட்டிற்கான ஷார்ட்டி விருது

Saturday 16 April 2022

SLMC கௌரவ தேசிய தலைவரின் கவனத்திற்கு

 SLMC கௌரவ தேசிய தலைவரின் கவனத்திற்கு

-------------------------
இவர்கள் தேச துரோகிகள். கட்சி தலைமை மக்களின் நம்பிக்கை அனைத்தையும் காசிக்காக விற்ற பச்ச துரோகிகள். 20க்கு கைதூக்கி இந்த நாடும்,மக்களும் நாசமாக போவதற்கும், 20நாள் குழந்தையை எரிப்பதற்கும், மக்கள் உண்ண உணவில்லாமல் நடு வீதியில் இறங்கி போராடுவதற்கும் இந்த நாய்கள்தான் காரணம்! இவர்களை மீண்டும் கட்சியில் இணைத்தால் நீங்கள் தான் 20 க்கு கை உயர்த்த சொன்ன என்று இவர்கள் சொன்னது 100% உண்மையாகிவிடும். சர்வதேசத்திலும்,எமது நாட்டிலும் அனைத்து இன மக்களும் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை மரியாதை அனைத்தும் ( 0 ) ஆகிவிடும். எமது நாடு அழிவதற்கு நீங்கள்தான் முதல் காரணம் என்று எமது நாட்டு மக்கள் தேச துரோகிகள் பட்டியலில் உங்களை முதலிடத்தில் வைப்பது உறுதி. காசிக்கு..... தின்னும் இந்த நம்பிக்கை துரோகிகளுக்காக உங்களை நம்பி உங்கள்மீது அன்புவைத்திருக்கும் கட்சி போராளிகள், ஆதரவாளர்கள், நாட்டு மக்களையும் உங்கள் மரியாதையையும் அழித்துவிட வேண்டாம். எதிரியை நம்பலாம் இவர்கள் நயவஞ்சகம் செய்யும் துரோகிகள் எமக்கு வேண்டாம். இப்படிக்கு உங்கள் போராளி F.A. Kuthoos.

ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கியது: யுக்ரேன் தாக்கியதா? இந்த பிரம்மாண்ட கப்பலின் பலம் என்ன?

 

ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கியது: யுக்ரேன் தாக்கியதா? இந்த பிரம்மாண்ட கப்பலின் பலம் என்ன?

Image shows Moskva ship

பட மூலாதாரம்,MAX DELANY/AFP

படக்குறிப்பு,

மத்தியத் தரைக்கடலில் சிரியா அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மோஸ்க்வா

புதன்கிழமை ஏற்பட்ட வெடிப்பால் சேதமடைந்த ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று கடலில் மூழ்கிவிட்டது என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோஸ்க்வா என்றப் பெயருள்ள இந்தக் கப்பல் கருங்கடல் பகுதியில் உள்ள ரஷ்யக் கடற்படைக் கப்பல் தொகுப்பின் கொடிதாங்கிக் கப்பல்.

சேதமடைந்த நிலையில் இந்தக் கப்பலை துறைமுகத்துக்கு இழுத்து வந்தபோது கடல் கொந்தளிப்பாக இருந்த காரணத்தால் அது மூழ்கிவிட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவ பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த இந்தக் கப்பல் யுக்ரேன் மீதான கடற்படைத் தாக்குதலை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தது. 510 பணியாளர்களோடு இயங்கிவந்த கப்பல் இது.

யுக்ரேன் தாக்குதலா?

தங்களுடைய ஏவுகணையே இந்தக் கப்பலைத் தாக்கியதாக யுக்ரேன் கூறுகிறது. ஆனால், தாக்குதல் ஏதும் நடக்கவில்லை என்றும், தீப்பற்றி எரிந்தே கப்பல் மூழ்கியதாகவும் கூறுகிறது ரஷ்யா.

இந்த தீ பரவியதால்தான் கப்பலில் இருந்த வெடிபொருள்கள் வெடித்ததாகவும், உடனடியாக அருகில் இருந்த ரஷ்ய கப்பல்கள் உதவியோடு சேதமடைந்த கப்பலின் பணியாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் ரஷ்யா குறிப்பிடுகிறது. மேற்கொண்டு வேறு தகவல்கள் எதையும் ரஷ்யா கூறவில்லை.

"வெடிபொருள்கள் வெடித்ததால் கப்பலின் வெளிக்கட்டமைப்பில் ஏற்பட்ட சேதத்தாலும், கடல் கொந்தளிப்பாலும், துறைமுகத்துக்கு இழுத்துச் செல்லப்படும்போது சமநிலை தவறி கப்பல் மூழ்கியது," என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனமான டாஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

line

ஆனால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெப்டியூன் ஏவுகணைகளைக் கொண்டு தாங்கள்தான் மோஸ்க்வா கப்பலைத் தாக்கியதாக யுக்ரேன் ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

The Moskva missile cruiser. File photo

பட மூலாதாரம்,REUTERS

2014ல் கிரைமியாவை ரஷ்யா பலவந்தமாக இணைந்துக்கொண்ட பிறகு கருங்கடல் பகுதியில் யுக்ரேனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்த நிலையில் இந்த ஏவுகணையை உருவாக்கியது யுக்ரேன். தாக்குதல் நடந்தபோது இந்த கப்பலில் 510 பேர் இருந்திருக்கலாம் என்று மூத்த யுக்ரேன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பலின் பலம் என்ன?

பிப்ரவரி 24ம் தேதி யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியபோது கருங்கடலில் உள்ள பாம்புத் தீவில் இருந்த சிறிய யுக்ரேனிய எல்லைப் பாதுகாப்பு வீரர்களை சரணடையுமாறு உத்தரவிட்டது இந்தக் கப்பல்தான். அதற்கு மறுத்து அவர்கள் அனுப்பிய செய்தி பிரபலமாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.

சோவியத் யூனியன் காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் 1980களில் கடற்படைப் பணியில் சேர்ந்தது. யுக்ரேனின் தெற்கத்திய நகரமான மைகோலைவ் நகருக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த சில நாள்களில் இந்த நகரம் மிக மோசமான ரஷ்ய குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.

வழிநடத்தவல்ல ஏவுகணைகளை ஏவும் திறன் படைத்த இந்தக்கப்பல் சிரியாவில் நடந்த மோதலில் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது. சிரியாவில் இருந்த ரஷ்யப் படையினருக்கு கடல் சார்ந்த பாதுகாப்பை இந்தக் கப்பல் வழங்கிவந்ததது.

கப்பல்களைத் தாக்குதல் வல்கன் ஏவுகணைகள் பதினாறும், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் ஆயுதங்களும், நீருக்கடியில் வெடிக்கும் ஆயுதங்களும் இந்தக் கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தக் கப்பலின் எடை 12,490 டன். யுக்ரேன் தாக்குதலில்தான் இது மூழ்கியது என்பது உண்மையாக இருக்குமானால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிரியின் நடவடிக்கையால் மூழ்கடிக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலாக இது இருக்கும்.

யுக்ரேன் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா பெரிய கப்பல் ஒன்றை இழப்பது இது இரண்டாவது முறை.

அசோவ் கடலில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட யுக்ரேனின் பெர்ட்யான்ஸ்க் துறைமுகத்தில் மார்ச் மாதம் யுக்ரேன் நடத்திய தாக்குதலில் ரஷ்யக் கப்பலான சாரடோவ் அழிக்கப்பட்டது.

அரிதட்டு – வடிதட்டுகளாகளாக வேண்டாம்?

 மற்றவர்கள் மீது சுட்டுவிரலை நீட்டுபவர்கள், மற்றவிரல் தம்மை காட்டுவதை மறக்கிறார்களா? அரிதட்டு – வடிதட்டுகளாகளாக வேண்டாம்?

காலிமுகத்திடல் போராட்ட களத்தில் “கோட்டா கோ கம” கிராமத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் ஒரு படிப்பகம் (Library) அமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்தப் படிப்பகத்தில் இனப்பிரச்சனை தொடர்பில் கடும்போக்குவாதிகளால் எழுதப்பட்ட நூல்களும், சிறுபான்மையினர் பற்றி அவர்களின் உரிமைப் போராட்டங்கள், பிரச்சனைகள் குறித்து சிறுபான்மையினரால் எழுத்தப்பட்ட நூல்களும், சிங்கள பௌத்த தேசியவாத நிலையில் இருந்து எழுதப்பட்ட நூல்களும் வைக்கப்பட்டு உள்ளன. அந்த நூல்கள் குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கங்களை அளிப்பதாகவும், நூல்களை படிக்க தூண்டுவதாகவும், அப்போராட்டத்தில் கலந்துகொண்ட என் ஊடக நண்பர் ஒருவர் கூறினார்.
அதுமட்டும் அன்றி அந்தப்போராட்டத்தில் இன மத மொழி பேதங்களை கடந்த பல அற்புதமான உரையாடல்கள், நிகழ்வுகள் இடம்பெறுவதாக கூறினார். ஆனால் நம்மவர் சிலர் வடிதட்டு வடித்தெடுக்கிறமாதிரி சக்கைகளைத்தான் தம் எழுத்துகளில் வெளிப்படுத்துகின்றனர்.
சமூக வலைத் தளங்களை திறந்தால் அவர்கள் மாறவில்லை – இவர்கள் மாறவில்லை – அவர் முன்பு என்ன சொன்னார்?, என்று மற்றவர்கள் மீது சுட்டுவிரல் நீட்டியே வாழ்வை இன்னும் தொலைத்துக்கொண்டு இருப்பவர்கள், மாறிவரும் சூழலுக்கேற்ப தம்மில் மாற்றம் இருக்கிறதா என மற்றவிரல், தம்மை சுட்டி நிற்பதை மறக்கிறார்கள்.
பிழைகள் மிண்டும் மிண்டும் தொடர்ந்திருக்கின்றன. அந்தப் பிழைகளை மீளாய்வு செய்வதற்கான காலம் – நேரம் –சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலமைகள் போல் அவர்களுக்கு முன்பு அமையவில்லை.
இப்போதும் அதற்கான பூரண வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது, அவர்கள் முழுமையாக மாறிவிடுவார்கள் என நான் சொல்ல வரவில்லை. ஆனால் 74வருடங்களின் பின் தெற்கு – தெற்கின் இளம் தலைமுறை நின்று நிதானித்து சற்று சிந்திப்பதற்கான சூழலை, ராஜபக்ஸ சகோதரர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் உருவாகியுள்ள அந்த சிந்தனை மாற்றத்தை முதலில் ஏற்றுக்கொள்ள, மதிக்க கற்றுக்கொள்ளுவோம். அது பெரிய அளவிலா? சிறிய அளவிலா என்பது முக்கியமல்ல.
மக்களுடனும், மண்ணுடனும் எந்த நெருக்கத்தையும் கொண்டிராத பலர், சமூக விலைத்தளங்களில் வக்கிரங்களை அள்ளிவீசுகிறார்கள்.
நாம் பாதிக்கப்பட்டோம். வஞ்சிக்கப்பட்டோம். வதைக்கப்பட்டோம். இன அழிப்புக்கு உள்ளோனோம். அதில் மாற்று கருத்தில்லை.
அவற்றுக்கான பொறுப்புக் கூறலும், நீதியும் கிடைக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை ஆளும் தரப்புகளுக்கு எதிராக நடத்தவேண்டும். அதேவேளை தமிழ் பேசும் மக்களின் நீதிக்கான போராட்டத்தில், தென்னிலங்கையில் ஏற்படுகின்ற சிந்தனை மாற்றத்தையும், சினேக பூர்வ புரிதலுடன் இணைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மாறாக பழைய பல்லவிகளை பாடுவதோடு மட்டும் நிற்போமானால், சிறுதுளியளவிலாயினும் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுக்கத் தவறுவோமானால், தோல்விகளில் இருந்து எழுவதற்கான வாய்ப்புகளை மீண்டும் இழந்துவிடுவோம்.
அதுமட்டும் அல்ல, தமிழர்கள் வஞ்சிக்கப்படும் போது, JVP – சிங்கள முற்போக்காளர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள், இடதுசாரிகள், இளம் தலைமுறையினர் என்ன செய்தார்கள்? சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு துணை போனவர்கள் தானே என குற்றச்சாட்டுகளை பலர் முன்வைக்கின்றனர்.
உண்மைதான் அவர்களும் பாரிய தவறுகளை இழைத்திருக்கிறார்கள். அதற்காக இப்போ அவர்களிடம் ஏற்பட்டுவரும் குற்ற உணர்வுகளையும், சிந்தனை மாற்றத்தையும் ஏற்க பலர் மறுக்கிறார்கள்.
அவ்வாறாயின் விடுதலைப்புலிகள் அவர்களின் ஆதரவாளர்கள் மாற்று இயக்கங்கள் மீது வைத்த வைக்கின்ற விமர்சனங்கள் – மாற்று இயக்கங்கள் அவர்களின் ஆதரவாளர்கள் விடுதலைப்புலிகளின் மீது வைக்கின்ற விமர்சனங்கள் குறித்தும், மக்கள் இவர்கள் அனைவரின் மீது வைக்கும் விமர்சனங்கள் குறித்தும் என்ன சொல்லப் போகிறார்கள்? கடந்த 3 தசாப்த்த போரில் ஆயுதம் தூக்கியவர்கள் குற்றமற்றவர்களாக, துய்மைவாதிகளாக, அறம்சார்ந்து இயங்கினார்களா? தவறுகள் செய்யாத தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள், தலைவர்கள், விடுதலை அமைப்புகள், அரசியல் கட்சிகள் இருந்தால் சொல்லுங்கள். #ஞாபகங்கள்
Vimal Nathan, Allai Sri மற்றும் 115 பேர்
27 கருத்துகள்
24 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

ஒரு குடும்பம், பல கொள்ளையர்கள்!!

ஒரு குடும்பம், பல கொள்ளையர்கள்!!
ராஜபக்ச குடும்பத்தினால் திருடப்பட்ட டொலர்கள் உகாண்டாவிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது.
மாசி மாதம் 2021 இல், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் Airbuss A330 இன் மூன்று (Cargo)பட்டய சரக்கு விமானங்கள் மூலம் உகாண்டாவின் என்டெபே சர்வதேச விமான நிலையத்திற்கு (Entebbe International Airport), நூற்றி இரண்டு மெட்ரிக் தொன் (102 MT)அச்சிடப்பட்ட பொருட்களை கொண்டு சென்றது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் எந்த ஊடகத்திற்கும் அச்சிடப்பட்ட உள்ளடக்கம் குறித்த விவரங்களை வழங்க மறுத்துவிட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கூறியது போல் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்திருந்தால், தகவல் மறுப்புக்கு அதுவே போதுமானதாக இருந்திருக்கும் என்று RTI சட்டம்(Right to Information Act) கூறுகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட 102 MT 'அச்சிடப்பட்ட பொருட்கள்' அமெரிக்க டொலர்கள். (1 MT = USD 800,000.-
102MT = USD 816,000,000.-) இந்த டொலர்கள் இலங்கை அரசிற்கு சொந்தமானது உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. உகாண்டாவில் ராஜபக்சவின் குடும்ப உள் வட்டத்தில் குடும்ப நண்பரும் பினாமியுமான வேலுப்பிள்ளை கனநாதனுக்கு இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது பரிவாரங்களையும் விமானத்தில் திருப்பதிக்கு ஏற்றிச் சென்ற மர்ம ஜெட் சான் மரினோவில் (புகழ்பெற்ற வரிப் புகலிடம்) பதிவு செய்யப்பட்டிருந்தாலும் உகாண்டாவில் இருந்து புறப்பட்டது. உகாண்டாவுக்கான இலங்கையின் ராஜபக்சே தூதுவராக நியமிக்கப்பட்டவர், வேலுப்பிள்ளை கனநாதன், ஒரு நன்கு அறியப்பட்ட கறுப்புப்பணக் பணக்கையடல் மற்றும் பண மோசடி செய்பவர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உகாண்டாவுக்கான தூதுவராக கடமையாற்றிய கனநாதன் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கென்யாவிற்கான தூதுவராக கடமையாற்றி வருகின்றார்.
கென்யாவில் ஹெலா கிளாத்திங் லிமிடெட் (www.helaclothing.com
) நிறுவனமானது, ராஜபக்ஸ குடும்பத்திற்கு சொந்தமானது. அதன் வியாபாரங்களை கவனிப்பவரும் இந்த கனநாதன்தான். இராசையா என்பவர் இதன் முகாமையாளராக இருக்கிறார். (https://www.helaclothing.com/about-us
)
ஹெலா கிளாத்திங் லிமிடெட் இலங்கை, எத்தியோப்பியா, எகிப்து மற்றும் கென்யா முழுவதும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இலங்கைக்கு சொந்தமான நெறிமுறை மற்றும் நிலையான ஆடை உற்பத்தியாளராகும். கென்யாவின் ஆடை உற்பத்தியில் முன்னோடியாக உள்ள ஹெலா ஆடை, கென்யாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 15% பங்களிப்புடன் கென்யாவின் மிகப்பெரிய உள்ளாடை உற்பத்தியாளராக முன்னேறியுள்ளது.
உள்ளாடைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகமூடிகள் ஆகிய இரண்டு உற்பத்தி அலகுகளை நைரோபியில் ஹெலா ஆடை கொண்டுள்ளது. மேலும் கென்யாவில் ஹெலா முதலீடுகள் 64 இலங்கையர்களுக்கும் 4600 கென்யர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன. இது கென்யாவில் ஆடை உற்பத்தி அலகை நிறுவும் பணியில் உள்ளது.
2005 முதல் 2015 வரை ராஜபக்சே ககுடும்பத்தின் ஆட்சி. மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தார். கடத்தல்களுக்கும், பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க உட்பட கொலைகளுக்கும் ராஜபக்ச அரசாங்கம் நடத்தி முடித்தார்கள்..
கோத்தபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட தனியார் பாதுகாப்பு (அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனம்) நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுதங்கள் கப்பல் ஏற்றப்பட்டது. ஜனவரி 18 அன்று, சரக்குகளை ஏற்றிக்கொண்டு காலி துறைமுகத்தில் "மஹானுவர" என்ற கொள்கலன் ஏற்றிச் செல்லும் கப்பல் வந்தபோது, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இரண்டாவது மிதக்கும் ஆயுதக் களஞ்சியமான, Avant Garde யூனிட் கொள்கலங்களை சுமந்து செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது, இது ரஷ்ய மற்றும் வட கொரிய ஆயுதங்களை ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள போர்க்குழுக்களுக்கு கடத்துகிறது.
உத்தியோகபூர்வமாக சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்குவதே இந்த சேவையாகும் என சொல்லிக்கொள்வார்கள்.
இது நன்கு பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2016 ஆம் ஆண்டில், Avant Garde Maritime Services Ltd கு இலங்கை கடற்படையின் உள் பாதுகாப்பு குழுவிலிருந்து நடவடிக்கைகளை கையகப்படுத்தியதன் மூலம் 226 மில்லியன் டொலர் அபகரிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான பணமோசடி சட்டத்தின் கீழ் அவன்ட் கார்ட் ஊழல் ஒரு மேடை நாடகம்.