Sunday 20 March 2022

அருள் ஒலியின் தவக்கால பாடல்கள்

                               அருள் ஒலியின் தவக்கால பாடல்கள் 

நமது மீட்பரும்  நமது மேய்ப்பரும், நமது ஆண்டவருமான இயேசுக்கிறிஸ்துவில் பிரியமான உறவுகளே இந்த தவக்காலம் பெருந்தொற்று, கொரோனா முடிவ தற்குள், மூன்றாம் உலகப்போர் வெடித்துவிடுமோ என்ற கவலையோடு இந்த தவக்காலம் ஆரம்பித்துள்ளது,ஆக்கிரமிப்பாளர்கள், சுயநல அரசியல்வாதி கள் மனம் திரும்பி, மனம்மாற்றம் அடைந்திட இந்த தவக்காலம் அழைப்பு விடுக் கின்றது. இந்த தவக்கால சிந்தனைக்காக அருளொளி தவக்கால பாடல்களை சிந்தனை துளிகளோடு தொகுத்து வழங்க இருக்கின்றோம். ஆக்கம் பேசாலைதாஸ், தொகுப்பு ஜெசின் 

அன்பின் உறவுகளே நாம் மனம்மாறி அன்புவாழ்க்கையை வாழவேண்டும் என்பதட்காக நமது இரட்ஷகர் இயேசுகிறிஸ்து அவமானத்தின் சின்னமான சிலுவையிலே தொங்கி நமக்காக உயிர்விடடார். நண்பனுக்காக உயிரைவிடும் மேலான அன்பு உலகிலே இல்லை என்பதற்காக தனது சாவின் மூலமாக அதை நிரூபணமாக்கிய இயேசுவின் அன்பு எவ்வளவு மகத்துவமானது ! ஆளம் அகலம் நீளம் என்ற எல்லைகானாமுடியாத அன்பு இயேசுவின் அன்பு அப்படிப்பட்ட அன்பை நாம் மறந்து வாழ்வது முறையோ அது மனித பண்போ என்று நமது ஒவ்வொருவரின் மன சாட்ச்சியை தட்டிப்பார்த்தால் இந்த பாடல் விடையாக வரும்! ( இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ)

இயற்கையே இறைவன், அவன் வெளித்தோற்றமே இயற்கையாகின்றது, எங்கெங்கு பார்த்தாலும், இறைமுகம் காண்பவன் ஜானம் அடைந்தவன், மனிதனே நீயும் மண்ணினால் உண்டாக்கப்படடவன், என்றோ ஒரு நாள் மண்ணுக்கு திரும்பவேண்டியவர்கள், மண்ணுக்கு திரும்புமுன்னர் மானம் மாறி இயேசுவின் பாதையில் நடந்துவிட்டு ஏனெனில் அவரும் மரணித்தார் ஆனாலும் மரணத்தை வெற்றிகொண்டார் மறந்துவிடாதே மனிதனா! ( இது மனிதனே நீ மண்ணாய் இருக்குகின்றாய் என்ற பாடலுக்கு )

No comments:

Post a Comment