Saturday 5 February 2022

எந்த நிறுவனமோ எந்த நாடோ மன்னார் தீவில் மின உற்பத்தி காற்றாலைகள் அமைக்கவோ மண் ஆராய்ச்சி செய்யவோ அனுமதிக்க கூடாது என தீர்மானம்

 

எந்த நிறுவனமோ எந்த நாடோ மன்னார் தீவில் மின உற்பத்தி காற்றாலைகள் அமைக்கவோ மண் ஆராய்ச்சி செய்யவோ அனுமதிக்க கூடாது என தீர்மானம்

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் தீவு அழிவு பாதைக்கு இட்டுச் செல்வதையும் அத்துடன் இவ் வாழ் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிப்புகளுக்கு எற்படா வண்ணம் எதிர்காலத்தில் எவரும் மன்னார் தீவு பகுதியில் மின் உற்பத்திக்கான காற்றாலைகளை பொருத்தவோ அத்துடன் கனியவள மணல் பரிசோதனை செய்யவோ அனுமதிக்கக்கூடாது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏகமனதான தீர்மானம் எடுத்துள்ளனர்.

செவ்வாய் கிழமை (01.02.2022) மன்னார் பிரதேச செயலக அபிவுருத்திக் குழுக் கூட்டம் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன். செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வினோதராதலிங்கம் ஆகியோர் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் கூட்டத்தில் தற்பொழுது மன்னார் தீவுக்கும் இப்பகுதி மக்களுக்கும் மின் உற்பத்தி காற்றாலைகள் மற்றும் கனியவள மண் அகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் இங்கு கருத்து தெரிவிக்கையில் எங்களுக்கு ஒரு ‘சூம்’ அமர்வு ஒன்று இடம்பெற்றது. அதில் பிரதேச செயலாளராகிய நானும் எமது மாவட்ட அரசாங்க அதிபரும் இதில் கலந்து கொண்டோம்.

இவ் கூட்டத்தில் நானும் எமது மாவட்ட அரசாங்க அதிபரும் இவ் கருத்தமர்வில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் என்னவென்றால் தற்பொழுது நீங்கள் இங்கு தெரிவித்ததுபோன்று மன்னார் தீவில் தாழ்வுபாடு தொடக்கம் சவுத்பார் வரை இவ் பகுதியில் மீன்பிடி தொடர்பாகவும் இவ் கடலோரத்தில் மீனவர்கள் கொட்டில் அமைத்து மீன்பிடியில் ஈடுபடுவதையும்; கரவலைபாடு மற்றும் இவ் பகுதிகளில் மீனவ குடும்பங்கள் நெருக்கமாக இருப்தையும் சரியான முறையில் இவற்றை கவனித்து பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் எனவும்

மேலும் இங்குள்ள சமூகத்துடன் கலந்துரையாட வேண்டிய நிலையும் காணப்படுவதாகவும் இவ் கலந்துரையாடலில் எங்களால் இவ் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அப்பொழுது இவ் கூட்டத்தில் இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இன்னும் ஆரம்பிக்கப்படவில்லையென மன்னார் பிரதேச செயலாளர் இவ் கூட்டத்தில் தொவித்தார்.

அப்பொழுது இவ் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வினோதராதலிங்கம் ஆகியோர் அங்கு கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவில் எதிர்காலத்தில் மன்னார் தீவு அழிந்து போகாமல் இருக்கவும் இவ் வாழ் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்டையாதிருக்கவும் எதிர்காலத்தில் எந்த நிறுவனமோ நாடோ மன்னார் தீவில் தொடர்ந்து மின்உற்பத்திக்கான காற்றாடிகளை அமைக்கவோ மற்றும் மணல் ஆய்வு என்ற போர்வையில் மணல் அகழ்வு செய்யவோ அனுமதிக்கக்கூடாது என்ற தீன்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சகலருக்கும் அறிக்கப்பட வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment