Thursday 24 February 2022

 விலங்குகள்உருவத்தில் கடவுளை வழிபடுவது  ஏன்?



கடவுள் எந்த உருவத்தில் இருப்பார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் இந்த விலங்குகளின் முகங்களை வேறு கடவுள் உடலோடு (சில சமயம் மனித உடலோடு)  எதற்காக நம் முன்னோர் இணைத்திருக்கிறார்கள்? இது எல்லோருக்கும் வரும் சந்தேகமே... இதற்கு நான் எழுத்தாளர் திரு. பாலகுமாரனின் கருத்தை கொண்டு இங்கு பதிகிறேன்.

பொதுவாக நம் மூச்சை கவனித்தால், நாம் கோபப்படும்போது, கவலைப்படும்போது,  காம வசப்படும்போது, வெறுப்படையும்போது என negative விஷயங்களில் ஈடுபடும்போது மூச்சு கீழ்நோக்கி வேகமாக பாயும். இதை தான் அதோகதி என்பார்கள். 

(அதோ=கீழ்நோக்கி ; கதி = பாய்தல்) உங்கள் காமம், கோபம், குரோதத்தை அக்கணம் கட்டுப்படுத்த நினைத்தால் உடனே நீங்கள் உங்கள் மூச்சை சிறிது சிறிதாக மேல்நோக்கி முடிந்தவரை இழுத்துப்பாருங்கள். உங்கள் மனம் மாற்றமடையும். எனவே எப்போதும் நம்மை நம் மூச்சு நல்லவிதமாகவோ, கெட்ட விதமாகவோ கட்டுப்படுத்துகிறது. 

எனவே நாம் நம் மூச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு ஞாபகப்படுத்த தான் யானை முகம் கொண்ட விநாயகர்.அவ்வளவு பெரிய தும்பிக்கையின் மூலமாக மூச்சை இழுக்க நேரமாகுமல்லவா? அது போல நாமும் நம் மூச்சை நிதானமாக நீளமாக இழுக்க வேண்டும். அதன் மூலம் பிராண சக்தி நம் உடல் முழுதும் பரவி உடலும் மனமும் நல்ல நிலையில் இருக்கும். 

மேலும் .நான் என் கட்டுப்பாட்டிலேயே தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக இவர் தன் கையிலேயே அங்குசமும் வைத்திருப்பார். நம்மில் எத்தனை பேர் நம் மனதை கட்டுப்படுத்த முடிகிறது? So, நம் மூச்சை கட்டுப்படுத்தினால், நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை புரியவைக்க நம் முன்னோர் அமைத்த உருவமே விநாயகர்.(நன்றி: பாலகுமாரன் - முதிர்கன்னி நாவல் )

 அடுத்து, மனம் என்பதை ஒரு குரங்குக்கு ஒப்பிடுவார்கள். நாம் நம் கண்ணை மூடி சில நிமிடங்கள் அமர்ந்தாலே, மனக்குரங்கு பல திசைகளிலும் தாவி ஓடும். கண்டதையும் கையிலெடுத்து அக்கு அக்காக பிரித்து போடும். ஆனால் அனுமனின் உருவத்தை நாம் பார்த்தால் பெரும்பாலும் அது தியானம் செய்யும் நிலையிலேயே இருக்கும்.

இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு குரங்கு, நிலையில்லாமல்  ஆட்டமாட கூடிய ஒரு விலங்கு, தன்னை கட்டுப்படுத்தி, தியானம் செய்கிறது. மனிதனான உன்னால் முடியாதா என நம்மை தூண்டி விட அந்த உருவத்தை கொடுத்திருக்கிறார்கள். மேலும், அனுமனின் தந்தையாக வாயுவை கூறுவதன் காரணம், வாயுவின் கவனிப்பால் குரங்கு உருவில் உள்ள அனுமன் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க முடிகிறது. 

அதுபோல, மூச்சை கவனித்தால் நாமும் மனம், உடலை கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும் என்பதை உணர்த்துகிறார்கள்.(நன்றி: பாலகுமாரன் - உச்சித்திலகம் நாவல் ) 

அதுபோல வராக உருவம். பன்றி எப்படி தனக்கு வேண்டிய உணவாகிய கிழங்கை (நான் அந்த காலத்து பன்றிய சொல்றேங்க)   பூமிக்குள் மறைந்து இருந்தாலும் தன் முயற்சியால் அகழ்ந்து எடுக்கிறதோ அது போல நாமும் நம் மனதின் உள்ளே இருக்கும் கடவுளை, ஞான ஒளியை தேட வேண்டும் என்பதற்காக அந்த உருவத்தையும் கும்பிடுகிறோம்.

 இப்படி நான் படித்த, கேட்ட, பார்த்த விஷயங்கள் மூலமாக எனக்கு சில விளக்கங்கள் கிடைத்தது. அதில் மூச்சுப்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.....

No comments:

Post a Comment