இன்று கஜேந்திரன் அவர்கள் மீது அவதூறு பரப்புவதற்காகவே சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு பலர் செம்பு காவுவதை காணக்கூடியதாக உள்ளது.
அதாவது கஜேந்திரன் அவர்கள் எப்படியான தேசிய உணர்வாளர் என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும். ஆனாலும் ரீவி நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்த கருத்தொன்றை தெரிவிக்கப்ட்ட சந்தர்ப்பத்தை நோக்காது திரிபு படுத்தி சேறு பூசுவோர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எப்படியானவர் என்பது தொடர்பாக ஒருபோதும் பேசுவதில்லை.
யார் இந்த சுரேஸ் பிறேமச் சந்திரன்...
இந்தியஇராணுவத்தோடு முழுவதுமாக சேர்ந்து இயங்கிய ஈபிஆர்எல்எவ் பத்மநாபாவினது கைப்பிள்ளை...
இந்திய நலன் சார்ந்து அன்று 1987 இல் கொண்டுவரப்பட்ட 13 ஆம்திருத்த அரசியல் தீர்வை பலர் நிராகரித்த போது அப்போது ஆதரித்தவர்கள் பத்மநாபாவும் வரதராஜாப் பெருமாளும்..
இன்றும் ஒற்றையாட்சிக்குட்பட்ட அதே 13 ஆம் திருத்தத்தை சுரேஸ் பிறேமச் சந்திரன் நிறைவேற்றுமாறு ஆதரித்து மோடிக்கு கடிதம் அனுப்புகின்றார்..
1988 நடைபெற்ற முதலாவது மாகாணசபைத் தேர்தலை ஆதரித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சியும் ஈபிஆர்எல் எவ் தான்.. முதலமைச்சராக வரதராஜா பெருமாள் தெரிவு செய்யப்பட்டார்
வரதராஜாப்பெருமாள் தனது அரசியல் எதிரிகளை ஒளிக்க மண்டையன் குழு என்ற ஒன்றை இயக்கினார்.
அந்த குழுவில் சுரேஸ் தான் திட்டங்களை வகுத்து கொடுப்பவராக இருந்தார்.
இந்திய இராணுவத்தோடு சேர்ந்து ஈபிஆர்எல்எவ் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது. அந்த கொலை அணியில் சுரேசும் இருந்தார்..
பத்மநாபா இந்திய இராணுவத்தோடும் இந்திய அரசோடும் சேர்ந்து தமிழ்மக்களுக்கு அநீதிகளை மேற்கொண்டமையால் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வரதராஜாப் பெருமாள் இந்தியாவுக்கு தப்பிச் சென்று இந்திய அரசின் பாதுகாப்பில் வாழ்ந்தார்.
சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது சுரேஸ் பிறேமச்சந்திரன் மகிந்தவின் ஆலோசகராகப் பணியாற்றினார்..
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தமிழ் மக்கள் பேரவையில் இயங்குவதற்கும் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கும் சம்மதித்து இறுதி நேரத்தில் இந்திய அரசின் ஆலோசனையின் காரணமாக தமிழத்தேசிய மக்கள் முன்னணிக்கு துரோகம் செய்துவிட்டு ஓடிச் சென்று ஆனந்த சங்கரியின் தமிழர்விடுதலைக் கூட்டணியோடு இணைந்து தேர்தலில் நின்றார்.
வவுனியா நகரசபையில் ஆட்சியமைப்பதற்கு மகிந்தவின் மொட்டுக் கட்சியுடன் இணைந்து கூட்டணி வைத்தார்.
திருகோணமலை மூதூரல் ஜனநாயகப் போராளிகளுக்கு கிடைத்த இரு பிரதேச சபை ஆனங்களை பறித்து தனது கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்கள் என்று ஒரு நுலை வெளியிட்டு சிலருடைய துரோக வரலாறுகளுக்கு வெள்ளையடித்து புலிகளின் கரங்களில் இரத்தக் கறையிருப்பதாக உரையாற்றினார். நூலை வெளியிட்டு வைத்தவர் விக்கினேஸ்வரன் ஐயா..
தேர்தல் ஆசனப் பங்கீட்டு பிரச்சினையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஜனநாயகம் இல்லை என்று கூறிக் காெண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.
இவ்வளவு அட்டகாசங்களை நிகழ்த்திய சுரேஸ் பிறேமச்சந்திரன் பற்றி பேசாதவர்கள் இன்று கஜேந்திரன் அவர்களை விமர்சிப்பதற்கு என்ன தகுதி இருக்கின்றது??
காய்க்கின்ற மரம் தான் கல்லெறிபடும் என்பார்கள். அது போலவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீது விமர்சனங்களை உருவாக்குவதற்கு தருணம் பார்த்து பலர் றும் போட்டு யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள்..
எதிரிக்கு எரிச்சல் வருகின்றது என்றால் நாம் சரியாக இருக்கிறோம் என்பதும் ஜதார்த்தமானது.
-நிறஞ்சன்-
No comments:
Post a Comment