Thursday 17 February 2022

தொடர் 7

 தொடர் 7

தேவாவும் பிரபாவும்,..
த. தே. கூவும்
அனுபவத்தொடர்,..
சந்திரிகாவின் ஆரம்ப ஆட்சியில் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தவர்
நிமல் சிறிபால டி சில்வா, அவரே விடுவிக்கப்பட்ட யாழ் விவகாரங்களை கையாண்டு வந்தவர்,. அவர் யாழ் சென்று வருவதை புலிகள் அவதானித்து விட்டனர்.
04/07/1996 இல் யாழ் ஸ்டான்லி வீதியில்
ஒரு கட்டிடத்திறப்பு விழா,.
பொது மக்களின் தேவைக்கான கட்டிடப்பொருட்கள்
விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவே அது,..
அந்த விழாவிற்கு வந்திருந்தார் அமைச்சர்
நிமால் ஸ்ரீபால டி சில்வா.
படையினரால் மீட்கப்பட்ட யாழ் மண்ணில்
அமைதி நிலவக்கூடாது என விரும்பினார்
புலிகளின் தலைவர் பிரபா,.
அமைதியும் சமாதானமும் நிலவி
அரசியல் தீர்வும் அபிவிருத்தியும்
அன்றாட இடர் தீர்ப்பும் நிகழட்டும் என விரும்பினார்
ஈ.பி.டி.பி தலைவர் தேவா,...
கட்டிடத்திறப்பு விழாவிற்கு வந்திருந்த அமைச்சரை
குறி வைத்து புலிகளின் மனித வெடி கொண்டு ஒன்று
காத்திருந்தது,.
பலத்த ஓசையுடன் வெடித்தது மனித வெடி குண்டு,.
மேஜர்.ஜெனரல்.ஆனந்த காமன்கொட அவர்கள் அந்த
இடத்திலேயே கொல்லப்பட்டு விட்டார்,.
காயங்களுடன் உயிர் தப்பினார் அமைச்சர்
நிமால் ஸ்ரீ பால டி சில்வா,..
தாக்குதலை தொடர்ந்து மீண்டும் யாழில் பதட்டம் நிலவியது,.
தேவாவிற்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.
அது பி.பி.சி ஆனந்தியின் அழைப்பு,..
யாழ்ப்பாணத்தில் பதட்டம் நிலவுகிறது,.
பொது மக்கள் பாதிப்படைகிறார்கள்...
இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?..
தேவாவிடம் கேட்டார் ஆனந்தி,..
நான் ஏற்கனவே சொன்னேனே
அதுதான் இன்று நடந்திருக்கிறது.
யாழ் குடாநாட்டை படையினர் மீட்க போகிறார்கள்.
எமது விருப்பங்களுக்கு மாறாக அதில் இழப்புக்களும் நடக்கும்,.அது நிகழாதிருப்பதாயின் படை நடவடிக்கைக்கு
முன்னர் பிரபா சமாதான பேச்சுக்கு உடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உடன்பட்டு வரவேண்டும்.
இதை நான் சொல்லித்தானே இருக்கின்றேன்.
படையினர் சாதரண சூழலில் பொது மக்களோடு
நல்லுறவாய் இருப்பார்கள்,. சிரிப்பார்கள், கை குலுக்குவார்கள்,. ஆனாலும் யுத்தம் என்று வந்து விட்டால்
அவர்கள் படைகளுக்குரிய குணத்தையே காட்டுவார்கள்.
அது இந்திய படையாய் இருந்தால் என்ன
இலங்கை படையாய் இருந்தால் என்ன அதையே செய்வார்கள்.
குளவிக்கூட்டுக்கு கல் எறிந்தால் என்ன நடக்கும்?..
அதுவே இன்று நடக்கின்றது,..
பொது மக்களுக்கு பாதிப்புக்களோ அவலங்களோ
நடக்க கூடாது என்பதே எமது விருப்பம்,
ஆனாலும் இது போன்ற தாக்குதல்களை நடத்துவோர்கள்
மக்களின் அவலங்களில் இருந்து தமக்கு ஆதரவு திரட்டுகிறார்கள் என்றார் தேவா,..
தேவாவுடன் தொடர்பு கொண்டு பேசிய
பி.பி.சி ஆனந்தி தேவாவின் கருத்துக்களால்
பதில் சொல்ல முடியாமல் போனார்,..
அந்த சூழலில் தான் சந்திரிகா தேவாவையும்,
சித்தார்த்தனையும் அழைத்திருந்தார்,.
நீங்கள் யாழுக்கு போகலாமே என்று கேட்டார்
சந்திரிகா,.
தேவா உடனே மறுத்து விட்டார்,..
யாழ் மண்ணை விடுவித்த போது மக்களுக்கு மனிதாபிமான பணியாற்ற நாங்கள் யாழ் போக வேண்டும் என கேட்ட போது நீங்கள் சம்மதிக்கவில்லை. இப்போது மட்டும் ஏன் போக சொல்கிறீர்கள்?..
அப்படியெல்லாம் போக முடியாதென மறுத்துவிட்டு
தேவா திரும்பி விட்டார்,.
தேவாவின் முடிவை சித்தார்த்தனும் மெளனமாக
இருந்து ஏற்றுக்கொண்டார்.
தேவா சிந்தித்தார்,
ஏற்கனவே யாழில் இருந்து கல்விமான்கள் பலரும்,
பொதுமக்களும் ஏன் யாழ் வரவில்லை என தேவாவை
தொடார்சியாக கேட்டுக்கொண்டிருந்தனர்,.
சந்திரிகாவோடு தொடந்தும் பிடிவாதமாக இருப்பதில்
அர்த்தமில்லை,.. இதனால் யாழ் மக்களுக்கே நஷ்டம்,.
ஆகவே யாழ் செல்ல தயார் என சந்திரிகாவிற்கு அறிவித்தார் தேவா,..
தனது தோழர்கள் சகிதம் தீவகத்தில் இருந்து
யாழ் வந்து இறங்கினார் தேவா,
அதிகளவு மக்கள் வந்து சந்திக்க கூடிய
இடமொன்றை தேடினார்.
வசதியாக கிடைத்தது யாழ் சிறீதர் திரையங்கு,
ஆயுதப்போராட்ட காலத்தில் இதே சிறீதர் திரையரங்கை புலிகளும் தேவா தளத்தலமை ஏற்றிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கமும் சம காலத்தில் பங்கு போட்டு பயன்படுத்தியிருந்தனர்,
ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை புலிகள் தடை செய்த பின்னர்
புலிகள் இயக்கம் மட்டுமே ஸ்ரீதர் திரையரங்கை பாவித்திருந்தனர்.
தேவாவும் தோழர்களும் யாழ் வந்திறங்கிய செய்தியறிந்து
யாழ் சிறீதர் திரையரங்கை நோக்கி மக்கள் வெள்ளம் திரண்டது,.
அங்கு திரண்ட மக்களில் பலரும் தேவாவுடன்
அச்சமின்றி மனம் விட்டு பேசினார்கள்.
முதல் கூட்டத்திலேயே பொது மக்களில் இருந்து
ஒருவர் எழுந்தார்,
நாங்கள் மாவீரர்களுக்கு விளகேற்றியவர்கள், ஆனாலும்
புலிகள் எங்களை கைவிட்டு ஓடி விட்டார்கள்.
அவர்கள் செல்லும் போது இங்கிருந்த மக்களில் கணிசமானவர்களையும் தம்முடன் அழைத்து சென்று விட்டார்கள்.
ஆனாலும் நாங்கள் அவர்களின் பின்னால் செல்லவில்லை,.
இன்று உங்களை நம்பியே இங்கு வந்திருக்கிறோம்.
நீங்கள் எங்களை காப்பாற்றுவீர்கள் என நம்பி,.. என்றார் அவர்,.
அந்த பொதுமகனின் கருத்தை கேட்ட தேவா,.
சந்தர்ப்ப சூழல் காரணமாக நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ யாருக்கும் ஆதரவளித்திருக்கலாம். அது எனக்கு பிரச்சினை அல்ல,.
ஆனாலும், வன்முறைகளுக்கோ அல்லது அழிவு யுத்தத்திற்கோ இனி நீங்கள் ஆதரவளிக்காமல் இருந்தால் சரி,.
என்னோடு அணி திரளுங்கள், நான் உங்களை பாதுகாத்து
சரியான வழியை காட்டுவேன்.
இழந்தவைகள் அனைத்தையும் பெற்றுத்தருவேன் என
தேவா கூறியவுடன்.
மண்டபம் நிறைந்த கரகோஷம் எழுந்தது,..
இது போன்ற மக்கள் திரளின் வருகையும் தேவாவுடனான சந்திப்புகளும் தொடர்ச்சியாக காணொளி மூலம் வெளியாகியிருந்தது.
தேவாவுடன் அணி திரண்ட மக்கள் திரளை கண்டதும்
பிரபா அதிர்ந்து விட்டார்,.
முன்னர் சந்திரிகாவை சமாதான தேவதை என எண்ணி
யாழ் மக்கள் அணி திரண்ட போது அது கண்டு விரும்பாத பிரபா பேச்சை முறித்து வன்முறையை மீள ஆரம்பித்தார்,.
இப்போது தேவாவுடன் மக்கள் அணி திரள்கிறார்கள்
என்றவுடன் பிரபா தன் வழமையான முடிவை எடுத்தார்.
சரி அது இருக்கட்டும்.
இதனோடு சம்பந்தமான
பிரபாவின் பழைய வரலாறு ஒன்றை பார்ப்போம்.
நாகராஜா வாத்தி என்று ஒருவரை அறிந்திருப்பீர்கள்,
அவர் பிரபாவின் ஆரம்பகால சக உறுப்பினர்களில் ஒருவர்,.
இன்னமும் அவர் இந்தியாவில் இருப்பதாக தகவல்,.
பிரபாவின் சகாவான நாகராஜா வாத்தி தற்பொழுதும்
தேவாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்,.
எழுபதுகளின் நடுப்பகுதியில் பிரபாவும் நாகராஜா வாத்தியும் யாழ் நகரில் சையிக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
வழமை போல் நாகராஜா வாத்தி சையிக்கிள் ஓட,
பிரபா முன்னாள் அமர்ந்து சென்றார்,.
பிரபா எப்போதுமே யாரோ சையிக்கில் ஓட்ட தான்
முன்னாள் அமர்ந்துதான் சென்றுகொண்டிருப்பார்,..
குரும்பசிட்டி வன்னியசிங்கம் நகைக்கடையில்
பிரபா கொள்ளையடிக்க சென்ற போது
அவரது அன்றைய சகாவான குட்டிமணியே
சயிக்கிளை ஓட்டி சென்றார்.
பிரபா முன்னாள் அமர்ந்து சென்றிருந்தார்,
அதே போல் யாழ் செங்குந்தா வீதியில் உள்ள வீடொன்றில்
வைத்து புதிய தமிழ் புலிகளின் தலைவர் செட்டி தனபாலசிங்கத்தை பிரபா சுடசென்ற போதும்,.
குட்டிமணியே சயிக்கிளை ஓட்டி சென்றார்
பிரபா முன்னால் அமர்ந்து சென்றார்,..
செட்டி தனபானசிங்கம் யார்?..
அவரை ஏன் பிரபா சுட்டுகொன்றார்?..
இந்த விடயத்தை பிறகு பார்ப்போம்.
நாகராஜா வாத்தியும் பிரபாவும் சென்று கொண்டிருக்கின்றனர்.
யாழ் நவீன சந்தையில் பெரும் சனக்கூட்டம்.
அதுவொரு காலை வேளை. சிங்கள பொலிசாருடன்
தமிழ் வியாபாரிகளும் பொதுமக்களும்
சிரித்து பேசி கதைத்துகொண்டிருநதனர்.
இது கண்ட பிரபா சயிக்கிளை நிறுத்து என்றார்.
நிறுத்தினார் நாகராசா வாத்தி,.
சற்று நேரம் அதை அவதானித்து விட்டு
இது நல்லதற்கில்லை,
எடு சயிக்கிளை என்றார் பிரபா,..
நாகராஜா வாத்தி பிரபாவை அவருக்கு உரிய இடத்தில்
இறக்கி விட்டு தனது இருப்பிடம் சென்று விட்டார்.
மறுநாள் காலை செய்தி வந்தது.
யாழ் நவீன சந்தையில் குண்டு வீச்சு,.
இது பிரபாவின் வேலையாகத்தான் இருக்கும்.
சந்தேகமின்றி நினைத்து விட்டார் நாகராசா வாத்தி,..
அதை தானே செய்ததாக பிரபா நாகராஜா வாத்தியிடம்
ஒப்புக்கொண்டு விட்டார்.
தனக்கு பிடிப்பில்லாத இன்னொரு தரப்புடன்
மக்கள் உறவு வைத்திருப்பதை பிரபா விரும்ப மாட்டார்.
அன்றிலிருந்து யாழ் நவீன சந்தை சோபையிழந்து காணப்பட்டது,..
சாதாரண தமிழ் மக்களுடன் சிரித்து பேசிய
சிங்கள போலீசார் தமிழ் மக்களை வெறுக்க தொடங்கினர்,.
பிரபாவின் திட்டம் நிறைவேறியது,
இது போலவே
ஈ,.பி.டி,பி தலைவர் தேவாவை நோக்கி மக்கள் அணி திரண்டு வர புலித்தலைவர் பிரபாவும் திட்டமொன்றை
தீட்டினார்,..
பிரபா வகுத்த திட்டமென்ன?...
விடைகளோடு
அடுத்த அனுபவத்தொடரில்
சந்திப்போம்,..
நன்றி!
அனுபவ புத்திரன்!

No comments:

Post a Comment