2 பேர் இன் படமாக இருக்கக்கூடும்
படத்தில் உள்ள இவர் தான் " மேரி ஆன் பெவன் " இவர் தான் உலகின் அசிங்கமான பெண் ′′ என்று அழைக்கப்படுகிறார்
ஆனால் அவரை பற்றி தெரிந்தால் நீங்கள் அவரை ′′ உலகின் மிக அழகான நபர் ′′ என்று அழைப்பீர்கள்.
மேரி ஆன் அக்ரோமலியா நோயால் அவதிப்பட்டார் அவருடைய அசாதாரண வளர்ச்சியால் அவருக்கு முக சிதைவு ஏற்பட்டது,
கணவர் இறந்த பிறகு தனது 4 குழந்தைளை வளர்ப்பதற்காகவும் கடன் சுமை மற்றும் நிதி தேவைகளுக்காவும் அவமானப்படுத்தும் போட்டியில் நுழைந்து ′′ உலகின் அசிங்கமான பெண் ′′ என்ற அவமானகரமான பட்டத்தை வென்றார்
பின்னர் அவர் ஒரு வேலையில் பணியமர்த்தப்பட்டார். அது ஒரு சர்க்கஸ், அங்கு மக்கள் சிரிக்க அவரை பல்வேறு வகையில் அவமானப்படுத்தினர், இதற்காக பல்வேறு நகரங்களுக்கும் அவரை சுற்றுலா கூட்டி சென்று இதனை நிகழ்த்தினர்,
தன் குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளிப்பதற்காக மற்றவர்களின் கேலிக்குரிய விஷயங்களை அவள் தாங்கிக் கொண்டார். பின்பு 1933. இல் அவர் இறந்தார்
அன்று முதல் இந்த நாள் வரை, சமூகம் தங்கள் உடல் தோற்றத்தில் மக்களை மதிப்பிடுகிறது, நமது கண்கள் உடல்களுக்கு பதிலாக ஆன்மாக்களை பார்த்திருந்தால், மேரி ஆன் தான் உலகின் மிக அழகான பெண்மணியாக இருந்திருப்பார்