Sunday 27 December 2020

ஆயிரம் ரூபாய் தாளில், உமர் லெப்பை பணிக்காரும் தலதா யானையும்

 எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை) ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று...

யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணி ந்து நிற்கும் மனிதனும் #கிழக்கு_மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும் ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களே.
அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை #1925ம் ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில்பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
உமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது.
தலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும் பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி 15 ஜூலை 1988ல் இறந்துபோனது.
அதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரனமான நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது.
இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிறது.
காடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர்என்று சொல்லப்படுகிறது.
அவர்களின் சந்ததியினர் இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற” (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
அவர்களின் பெயரால் #பணிக்கர் வீதி என்று ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது.
Courtesy:
எமது வரலாறு WHATSAPP Group - 9

Tuesday 22 December 2020

இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடியுங்கள்! கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா!

இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடியுங்கள்!  கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா!


                                    என் உறவுகளே! கடந்த பொதுத்தேர்தலில், கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் அவர்களை பேசாலை கிராமத்துக்கு வருகை தந்து, எமது மக்களின் வாழ்வாதரமான மீன்பிடி சம்பந்தமாகவும், டின்மீன் தொழிற்சாலை மீள்திறப்பு விடயமாகவும், துறைமுகம் தொடர்பாகாவும், நவீன சந்தை தொடர்பாகவும், உங்கள் வாயால், எமது மக்களுக்கு உறுதி மொழி தந்தால், எமது கிராமத்தில் குறைந்தது 1000 வாக்குகளை சேகரிக்க முடியும், அத்தோடு மீன்பிடி கிராமமான வங்காலை, தலைமன்னார், தாழ் வுபாடு, பள்ளிமுனை வாக்காள பெருமக்களையும் கவரமுடியும், என அவ ரிடம் எடுத்து சொன்னேன்.


ஆரம்பத்தில் அவர் தாமதித்தார் இருந்த போதும், எனது அண்ணன் செல்வம் பீரிஸ் அவர்களை அவரிடம் தூதனுப்பி, அவரை பேசாலைக்கு வரவழைத்தேன். திரு, செல்வம் பீரிஸ் வீட்டில் நடத்தபட்ட கூட்டத்தில், மேலே சொல்லப்பட்ட விடயங்களை செய்துதருவாதாக அமைச்சார் வாயாலே சொல்லவைத்தேன். எனது ஊடகமான தேன் தமிழ் ஓசை வழியாக அமைச்சர் அவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தோம். எமது ஊர்மக்களின் எதிர்ப்பை மீறி இதனை நான் செய்தேன்.

இந்திய இழுவைப்படகு சம்பந்தமாக அமைச்சர் அவர்கள், காத்திரமான சில செயல்பாடுகளை செய்வார் என நான் பேசாலை மக்களுக்கு தேர்தல் காலத்தில் எடுத்துக்கூறினேன்.  எனது உறவுகள் அதை நம்பவில்லை, வாக்கும் அளிக்கவில்லை. இருந்தபோதும், அமைச்சர் அவர்கள் பேசாலை மக்களுக்கு சொன்னது போல பேசாலையில் துறைமுகம் அமையும், அதற்கான உறுதிமொழியை, பாராளமன்ற வரவு செலவு திட்டத்தில் எடுத்துக்கூறியுள்ளார். அதேபோல இந்திய இழுவை படகு விடயமாக இரண்டு நாடுகளுக்கிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இது போதாதென்று முல்லைதீவில் நடந்த கூட்டம், ஒன்றில் கூறுகையில், தான் பாராளமன்றத்தில், மன்னார் பாராளமன்ற உறுப்பிணர் சார்ள் நிமலனாத னிடம்  இந்திய இழுவைபடகுக்கு எதிரான போராட்டஙக்ளை நடத்துங்கள், முடிந்தால் இந்திய படகுகளை கைப்பற்றிவாருங்கள் என, உத்தியோகபற்றற்ற ஒரு கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். எனவே பேசாலை மக்களே, தொப்புள் கொடி உறவு, தமிழ் தேசிய உறவுகள் என்று பாராமல், எமது மண்ணையும், நமது வாழ்வாதார கடல் வளங்களையும்   நாசமாக்கும், கொள்ளையடிப்பதையும் எவர் செய்தாலும், அதை தடுத்து நிறுத்தி, அவர்களை சிறைப்பிடித்து, சட்டத்துக்கு முன் நிறுத்துவோம்.  பேசாலை மீனவர்கள் முன்பு இப்படியான சிறை பிடிப்பை மேற்கொண்டார்கள், தற்போது கடல் தொழில் அமைச்சரே சொல்வதினால், துணிந்து இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடிப்போம், எமது கடல் வளத்தை நாமே பாதுகாப்போம்   அன்புடன் பேசாலைதாஸ் 





Friday 4 December 2020

யாழ் . இராசதானியின் சிறந்த சிற்றரசன் வெடியரசன் வரலாற்றை மறந்தது ஏன்..?

 யாழ் . இராசதானியின் சிறந்த சிற்றரசன் வெடியரசன் வரலாற்றை மறந்தது ஏன்..?

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை 7 வீதிகள் கொண்ட பிரமாண்டமான ஆலயமாகக் கட்டியெழுப்பிய வெடியரசன் என்ற சிறந்த தமிழ் மன்னனை தமிழர்கள் மறந்துவிட்டமை வரலாற்றுத் துரோகம் போர்த்துக்கேயரின் கப்பல்களைக் கடலில் வைத்து தகர்த்தெறிந்த பெரும் பலத்துடன் விளங்கியவன். வெடியரசன் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் , ஈழத்தில் தமிழ் மன்னர்கள் கோலோச்சிக்கொண்டிருந்தபோது யாழ்ப்பாண இராசதானியின் கீழ் சிற்றரசனாக இருந்தவனே விஷ்ணுபுத்திர வெடியரசன் என்ற பலம்பொருந்திய தமிழ் மன்னன் .
யாழ்ப்பாண இராசதானியின் கரையோரப் பகுதிகளை , குறிப்பாக , பொன்னாலை , கீரிமலை , காரைநகர் , நெடுந்தீவு ஊர்காவற்றுறை போன்ற கரையோரப் பகுதிகளை இவனும் இவனது சகோதர்களும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் . இப்போது வலிகாமம் எனக் கூறப்படும் பிரதேசத்தில் வெடியரசனதும் அவனது சகோதரர்களினதும் ஆட்சி பரந்து விரிந்திருந்தது . தொல்புரம் , சுழிபுரம் , கொட்டியாவத்தை ஆனைக்கோட்டை போன்ற இடங்களிலும் இவன் சிறு தளங்களை அமைத்திருந்தான் என வரலாறு கூறுகின்றது.
கரையோரப் பாதுகாப்பை இவர்கள் பொறுப்பேற்றிருந்தபடியால் யாழ்ப்பாண அரசின் பாதுகாப்பில் இவர்களின் பணி அளவற்றதாக இருந்தது . இதன் நிமித்தம் இவர்கள் பாதுகாப்பு கருதி , காரைநகர் , ஊர்காவற்றுறை நெடுந்தீவு ஆகிய இடங்களில் கோட்டைகளை அமைத்திருந்தனர் அவ்வாறு அமைக்கப்பட்ட பாதுகாப்பு கோட்டைகளில் ஒன்றே நெடுந்தீவு கோட்டையாகும் . இவ்விடங்களின் முக்கியத்துவத்தை போர்த்துக்கேயர் உணர்ந்தமையினாலேயே பிற்காலத்தில் இதனையண்டிய பகுதியில் கோட்டைகளைக் கட்டினர் .
இவ்வாறு மதியூகத்துடன் சிறப்புற கரையோரப்பகுதிகளை நிர்வகித்து வந்த விஷ்ணு புத்திர வம்சத்தின் கடைசி அரசனே வெடியரசன் எனப்படுகின்றான் . போர்த்துக்கேயருடனான சண்டைகளின் போது இவனது எதிர்ப்பு அபாரமாக இருந்தது . முதலில் பாரம்பரிய முறைகளை பின்பற்றி போரில் ஈடுபட்ட இவன் பின்னர் வெடிவைக்கும் முறைகளை கொண்டு போர்த்துக்கேயர்களின் கப்பல்களை தகர்த்ததால் வெடியரசன் என்று அழைக்கப்படலானான் என சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதுமுண்டு.
அதைவிட வெடியரசனைப்பற்றியும் அவனது கோட்டையை பற்றியும் போர்த்துகீசரின் குறிப்புகளிலும் கூறப்படுள்ளதாக அறியவருகிறது. நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை பின்னாளில் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அங்கு தங்கினர் எனவும் பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் அவற்றைக் கைப்பற்றினர் எனவும் கூறப்படுகின்றது.
வெடியரசன் வரலாற்றை தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
குறிப்பு
கடந்த ஒக்டோபர் 29 ம் திகதி தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள், பெளத்த துறவிகளோடு நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்குப் போயிருந்தார்கள். அப்போதே இந்த நடவடிக்கை பெளத்தமயமாகும் ஆபத்து என்று எச்சரித்தனர் நெடுந்தீவு வாழ் மக்கள்.

ராமர் பாலத்தில் உள்ள கற்கள் கடலில் மிதக்க காரணம் என்ன?

 

ராமர் பாலத்தில் உள்ள கற்கள் கடலில் மிதக்க காரணம் என்ன?

#ஜெய்ஸ்ரீராம்.

ராமர் பாலம் மிதக்காது.அதுமட்டுமின்றி அது கல்லே இல்லை.. அட நம்புங்க..

ராமர் பாலத்தின் கற்களை பற்றி பார்க்கும் முன்பு அந்த பாலத்தை பற்றிய நமது நம்பிக்கைகளை பார்ப்போம்.

(Disclaimer: என் பதில படிச்சுட்டு என்ன ராமருக்கு எதிரானவன் அப்படினு சொன்னிங்கனா.. அந்த ராமர் மேல சத்தியமா நா உங்களுக்கு சாபம் குடுத்திடுவேன்)

ஒரு விஷயம்.... ஒரே விஷயம் ஆனா அதை இரண்டு வெவ்வேறு விதமாக சொன்னா கூட நம்ம மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதற்கு சிறந்த உதாரணம் ராமர் பாலம்.

எப்படினு கேக்கறீங்களா.

1) இலங்கையிலிருந்து திரும்பி ராமேசுவரத்தில் சீதையால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு பூசை முடித்த பின் விபீஷணன் கேட்டுக்கொண்டதற்காக தனது வில் முனையால் அந்த பாலத்தை ராமரே உடைத்ததாகவும் அதனால் சிதறிய பாகங்கள்தான் இன்றளவும் ஆங்காங்கே மிதந்து கொண்டு காணப்படுகிறதுனு ஒரு நம்பிக்கை நம்ம கிட்ட இருக்கு. இத நம்ம ஏத்துக்கிட்டோம்.

2) இல்ல ராமர் பாலம் உடையல, செயற்கைகோள் ல இருந்து பாத்தா தெரியுதே அதுதான் ராமர் பாலம். இதயும் நாம ஏத்துக்கிட்டோம்.

என்னிக்காவது யோசிச்சதுண்டா? செயற்கைக்கோள் மூலமாக நாம் பார்க்கும் அந்த பாலம் மிதப்பது கிடையாது. ஆனால் மிதக்கும் கற்களால் ராமர் பாலம் உருவாக்கப்பட்டது இது தான் அந்த கல் னு யாராச்சும் சொன்னா அதையும் ஏத்துக்கறோம்.

எப்படி ரெண்டுமே சாத்தியம்.? 🙄

சரி விஷயத்துக்கு வர்றேன்.

ராமர் பாலம், ராமாயணத்தின் படி :

ஒரு யோஜனை என்பது குத்து மதிப்பாக 12. 87கிமீ கள்

ராமாயணத்தின்படி ராமர் பாலம் 100 யோஜனை நீளமுடையது, அதாவது 100 × 12.87 = 1287.48 கிமீ கள். ஆனால் ராமேசுவரத்தின் அரிச்சல் முனையில் இருந்து இலங்கைக்கு வெறும் 20கிமீ தான். அதுக்கு ஏன் இவ்வளவு நீளமான பாலம் கட்டனும். ராமாயண காலத்தில் பூகோள அமைப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம்.

ராமர் பாலம், பூகோளத்தின் படி:

இந்தியாவை பொறுத்தவரை ராமர் பாலம் என்றும். உலக அளவில் ஆதாம் பாலம் என்றும் கூறப்படும் இது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் நிலப்பரப்பு ஆகும். தலை மன்னாரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆராய்ச்சி படி இது 18,400 வருடங்களுக்கு முன்பு உருவான இயற்கை நிலப்பரப்பு ஆகும்.ஆராய்ச்சி செய்தது நம்ம மெட்ராஸ் யுனிவர்சிட்டி தான். இது மொத்தமாக 48 கிமீ நீளமுள்ள பாலம் போன்ற அமைப்பு ஆகும். இதன் பெரும்பாலான பகுதிகள் கடலில் 10மீ ஆழத்திற்கு மூழ்கியும் சில பகுதிகள் மட்டும் வெளியே தெரியும்படியும் இருக்கும். செயற்கைகோளின் மூலம் பார்க்கும்போது சிறிய பாறைகள் மற்றும் மணற்திட்டுகளாலான நீளமான பாலம் போல காட்சி தரும். 1480ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாகவே இது கடலுக்குள் மூழ்கியது அதற்கு முன்பு வரை இதன் மீது மனிதர்கள் நடந்து செல்ல ஏதுவாக இருந்துள்ளது.

பூகோளமும் ராமாயணமும்:

இது இயற்கையாக உருவான அமைப்பு அல்ல என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்களின் கருத்து. எனவே ராமரே இதனை கட்டி இருக்கலாம். ராமர் கட்டிய இந்த பாலம் (அல்லது இயற்கையாக உருவான) எந்த சூழ்நிலையிலும் மிதக்க வேண்டிய அவசியம் இல்லையே. ஏனெனில் இந்தியா இலங்கைக்கு இடையே உள்ள கடல் மட்டத்தின் ஆழம் குறைவானதே அதன் மீது நிலையான பாலம் அமைக்க ஏதுவானதே. அவ்வாறு கற்கள் மிதந்தால் அதன் மீது அதிக எடை கொண்ட போர் ஆயுதங்களுடன் வானரப்படை கடந்து செல்லும் போது கற்கள் அவர்களை கவிழ்ந்து விட்டிருக்காதா?.

ராமர் பாலத்தின் பாறை ஒன்று கோவை, சூலூர் குமரன் கோவில் வளாகத்தில் உள்ளது. பக்தர்கள் தொட அனுமதி உண்டு. அதை நாம் தொடும்போதே நம் எடை தாங்காமல் அது நீருக்குள் மூழ்கும். கிட்டத்தட்ட தெர்மாக்கோல் போல.. கையின் எடையையே தாங்காத அந்த கல் படையினரின் எடையை எவ்வாறு தாங்கி இருக்கும். அந்த பாலத்தின் மீது அனுமனும் ராமரும் ஆடியபடியே கடந்து சென்றனர். அந்த ஆட்டத்தில் கற்கள் கலைந்து போய் மூழ்கடிக்காதா? எனவே ராமர் பாலம் நிலையாக இருந்தது என்பதே மெய். பாலத்தை கடக்கும் போது ஆங்காங்கே இடைவெளியை நிரப்ப பவளப்பாறைகளை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். எனவேதான் இது இன்றளவும் புனிதமாக பூஜிக்கப்படுகிறது.

ராமர் பாலத்தின் மிதக்கும் கல்:

மிதக்கும் கல் என கூறப்படும் அது உண்மையில் பவளப்பாறை ஆகும். பைப் கோரல் வகையை சார்ந்தது. பைப் கோரல் பவளப் பாறைகளில் உள்ள பைப் போன்ற துளைகளால் அவை தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது என்பது அறிவியல் ரீதியான உண்மை. மேலும் கடல் நீரின் அடர்த்தி அதிகமாக உள்ளதும் மற்றொரு காரணமாகும்.

இந்த பாறைகள் இந்திய இலங்கை கடற்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இதுவே இலங்கை பகுதியில் ஏற்படும் புயலிலிருந்து நம் நாட்டை பாதுகாக்கிறது. இதனை அழிப்பது குற்றமாகும். ஆனாலும் விஷமிகள் இதனை வியாபார நோக்கத்தோடு அழித்து விற்று வருகின்றனர்.

தான் கடவுள் என்று வெளிப்படுத்தாமல் மனிதனாகவே வாழ்ந்த அவதாரம் தான் ராம அவதாரம். எனவே மிதக்கும் பாலத்தை மனிதனால் உருவாக்கி இருக்க முடியாது அப்படி உருவாக்கினால் அவர் மனிதனாக இருக்க முடியாது.

இந்துக்கள் மட்டுமின்றி ஆபிரகாம் நம்பிக்கை மதங்கள் இசுலாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது புனிதமான பாலமாகும். இலங்கையில் உள்ள ஒரு பெரிய பாத சுவடு சிவனுடையது என இந்துக்களாலும் புத்தருடையது என புத்தர்களாலும். ஆதாமுடையது என இசுலாம் மற்றும் கிறிஸ்தவ மதத்வர்களாலும் நம்பப்படுகிறது. ஆதாம் இங்கு தான் இறங்கியதாக நம்பப்படுகிறது. அவன் ஏவாளை அடைய இலங்கையில் இருந்து இந்த பாலத்தை அமைத்து அதன் மூலம் அரேபியா சென்றதாக கூறப்படுகிறது. எனவே உலக அளவில் இது ஆதாம் பாலம் என்றே அழைக்கப்படுகிறது.

#ஜெய்ஸ்ரீராம்

அருந்ததியர்கள் தமிழர்களா? இவர்களில் சிலர் தங்களை ஆதித்தமிழர்கள் என கூறுவதற்கு சான்றுகள் உண்டா? இல்லை ! ,

 


அருந்ததியர் (Arunthathiyar) அல்லது சக்கிலியர் எனப்படுவோர் தமிழ்நாட்டில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் குழுவாவார்கள். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ்நாட்டில் குடியமர்த்தப்பட்டார்கள்.

(உட்பிரிவுகள் : ஆதி ஆந்திரா , அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, தோட்டி, பகடை)

பெயர்க் காரணம் :

சக்கிலியர் என்பது ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல் மாறி சக்கிலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருளாகும்.

விஸ்வநாத நாயக்கர் (1529–1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் கூலிகளாக அடிமட்ட வேலை செய்ய அருந்ததியர்களையும் கூட்டிக்கொண்டு வந்தனர்.

இவர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம் - பம்புசெட் - பிளாஸ்டிக் - ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து தாழ்வாக நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு (சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.

இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப் பணியாளர்கள் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.

முகலாயர் வருகையின் போது முகவை (Raamanaathapuram) மண்ணில் ஒரு பாதி அருந்ததியர்கள் இசுலாம் மதத்தை தழுவினார்கள்.

ஆங்கிலேயர் வருகைக்கும் பின்பு தான் கல்வி பெற்று பலர் கிறித்தவ மதத்தை தழுவினார்கள்.

விடுதலைக்குப் பின் சட்டப்படி இவர்கள் பட்டியல் சமுகத்தவராக அறிவிக்கப்பட்டனர். அரசாங்க பணிகளிலும், அரசியல் பதவியிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், உயரத் தொடங்கினர்.

தொழில்கள் : ஆடு மாடு மேய்த்தல், மாட்டிறைச்சி வியாபாரம், குத்தகை முறை விவசாயம், பல்வேறு விதமான குடிசைத்தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் பறையிசைக்கலைஞர்கள் போன்ற தொழில்கள் செய்துவருகின்றனர்.

இவர்கள் ஆதி தமிழர்கள் அல்லர் ஆதி தெலுங்கர்கள் என்பதே சரி !

குறிப்பிடத்தக்க மக்கள் :

மதுரை வீரன் - ஒரு நாட்டுப்புற பாடகர்

ஒண்டிவீரன் பகடை - பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டவீரர்

நன்றி :