Friday, 30 October 2020

பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’(1978) சுவாரஸ்யங்கள்:

 பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’(1978) சுவாரஸ்யங்கள்:

சிட்டி சப்ஜெக்ட் படத்தை நான் எப்படி எடுப்பேன் என்று பத்திரிகைகளில் அப்போது எழுதினார்கள். முதல் இரண்டு படங்களான ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ இரண்டு படங்களும் கிராமத்துக் கதை. இதில் இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படம், ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது.
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதாலும் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்கள். அந்தக் கோபத்தோடு செய்ததுதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. நெகட்டீவ்வான கதையை, இரண்டு ஹீரோக்கள் ஒத்துக்கொள்வதில்லை(Sivakumar was first choice). கமல்தான் உடனே சம்மதித்தார். புதுமைகளைச் செய்வதில் அப்போதே கமல் அப்படித்தான்.
அந்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ பங்களாவைத் தேடித் தேடி அலைந்தோம். தி.நகரில் ஒரு பங்களாவை பார்த்தோம். பிடித்திருந்தது. கமல் கேட்டார். சம்மதித்தார்கள். மூன்றே நாளில், படத்தில் எங்கெல்லாம் ட்ராலி ஷாட் வருகிறதோ அவற்றையெல்லாம் எடுத்துமுடித்தேன். மொத்த படத்தையும் இருபதே நாளில் எடுத்து முடித்தேன்.
படத்தில் கறுப்புப் பூனை. அதை ஒருவரிடமிருந்து வாங்கி வந்து படமாக்கினோம். மூன்றாவது நாள் பூனையைக் காணோம். பூனை வளர்ப்பவர் கேஸ் போட்டுவிட்டார். அவரை சமாதானப்படுத்தி கேஸை வாபஸ் வாங்கவைத்தோம். அந்தப் பூனை என்னானது என்றே இதுவரை தெரியவில்லை.
சிகப்பு ரோஜாக்கள்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போதெல்லாம் தேவி தியேட்டரில் இருந்து அண்ணா சிலை வரைக்கும் க்யூ நிற்கும். அப்படி இருந்தார்கள் சினிமா ரசிகர்கள். ஒருகாலத்தில் சினிமா எப்படி இருந்தது பாருங்கள். இன்றைக்கு செல்போனில் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்
378
37 கருத்துக்கள்
விரும்பு
கருத்துத் தெரிவி

கருத்துகள்

No comments:

Post a Comment