Sunday 13 January 2019

சென் நீக்கிலாஸ் உதைபந்தாட்ட கழகத்தின் முன்னணி உதைபந்தாட்ட வீரன் திரு, முத்துராசா ஜெயரட்டிணம் அவர்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை!

சென் நீக்கிலாஸ் உதைபந்தாட்ட கழகத்தின் முன்னணி உதைபந்தாட்ட வீரன் திரு, முத்துராசா ஜெயரட்டிணம் அவர்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை!

                                                                        நாவாந்துறை உதைபந்தாட்ட வரலாற்றில், சென் நீக்கிலாஸ் உதைபந்தாட்ட கழகத்தின் மறக்கமுடியாத ஒரு அதி சிறந்த வீரன் திரு முத்துராசா ஜெயரட்டிணம் அவர் முன்னணி நட்சத்திர‌கள் ஆவார். இவர் ஒரு சிறந்த முன்னணி நட்சத்திரமாக நாவாந்துறை சென் நீக்கிலாஸ் உதைபந்தாட்ட கழகத்தில் திக‌ழ்ந்தார். நாவாந்துறை சென் நீக்கிலாஸ் விளையாட்டுகழகத்தின் வ்ரலாற்றில், ஒரு விளையாட்டு வீரனுக்குரிய, எல்லா தகமைகளும் கொண்ட ஒரு சிறந்த வீரன், அந்த விளையாட்டு கழக த்தின் முன்னணி நட்சத்திரமாகதிகழ்ந்தவர் தான், திரு முத்துக்குமார் ஜெயரட்டிணம் என்றால் அது பொய்யல்ல.

                                                                   நான் சிறுவானாக இருந்த காலத்தில், உதை பந்தாட்டத்தின், சில நுணுக்கங்களை, நான் அவரிட்ம் இருந்தே  கற்றுள்ளேன் என்றால் அது மிகையல்ல, மிகவேகமாக விளையாடும் அந்த முன்னணி வீரன், அந்த் காலங்களில் காலணி ஏதும் அணியாமல், வெறும் பாதங்களுடன் விளையாடியதை நான் பார்த்திருக்கின்றேன். விளயாட்டில் இருந்து ஒய்வு எடுத்துக்கொள்ளும் சில காலங்களுக்கு முன்னர் அவர் காலணி அணிந்து விளையாடியுள்ளார். திரு, முத்துராசா ஜெயரட்டிணம் அவர்களின் விளையா ட்டைப் பார்க்கும்போது, அவர் பிறக்கும் போதே, அவரின் காலோடு. பந்தும் சேர்ந்து பிறந்திருக்கவேண்டும் என்பது, போட்டிகளில் விளையாட்டு மைதா னத்தில், அவரின் கால்களுக்கும், பந்துக்கும்  உள்ள உறவை வைத்து பார்க் கலாம்,  பந்தை மிக இலாவகமாக தனது கால்களுக்குள் வைத்திருக்கும் போது பந்து அவரது காலோடு சேர்ந்து பிறந்தது என்று எண்ணத்தோன்றும்.

                                                                இவரிடம் இன்னும் பல திறமைகள் உள்ளன, உதைபந்தாட்ட போட்டிகளின் போது , விளையாட்டு மைதானம்முழுவதும் இவரது பார்வைக்குள் இருக்கும், பல சந்தர்பங்களின் இவரது ஒரு அசைவே முழுப்போட்டியின் திசையையே திருப்பிவிடும் அளவுக்கு இருக்கும். அப்படி ப்பட்ட ஒரு சாதூரியமான விளையாட்டு வீரன் தான் திரு முத்துராச ஜெயரட்டிணம்!

                                                                     விளையாட்டு போட்டிகளின் போது வெளி அடி Air Shot அடிப்பதில் இவர் வல்லவராக இருந்தார். சில சந்தர்ப்பங்களில் அவர் பந்தோடு சேர்ந்து ஓடும் போது, பந்தானது அவரின் இரண்டு கால்களு க்கு இடையில் இருக்கும். அவ்வாறு அவர் கோல் இலக்கை நோக்கி ஓடும் போது, எதிரணியின், பின்னணி வீரர்களினால் அவரை தடுத்து நிறுத்தமுடி யாமல் திணறுவார்கள். தனது இரண்டு கால்களுக்கு நடுவில் பந்தை தக்க வைத்தபடி, எதிரணியின், பிண்ணனி வீரர்களை சாய்த்துக்கொண்டு கோல் அடிக்கும் அபார திறமை கொண்டவர் இவர்!

                                                                        போட்டிகளில் அவர் விளையாடும் போது,  அவர் அடிக்கும் ஒவ்வொரு அடிகளுமே மூன்று அல்லது ஆறு அடிகளுக்கு மேல் இருக்காது, அவர் நினைத்து அடித்த இலக்கில் பந்து செல்லும் அப்படிப் பட்ட திறமை வாய்ந்தவர் வீரன் இவர். நான் இவரிடம் கண்டு கொண்ட இன் னொருவிடையம் என்னவென்றால்,  யாழ்ப்பாணத்தில் தமிழ் முஸ்லீம் மக்க ளுக்கி டையில் அந்த் காலத்தில், இரண்டு விளையாட்டு கழகம் இருந்தன. ஒன்று டைகர் விளையாட்டுகழகம், மற்றது ஸம்சுங்  விளையாட்டுகழகம்  இந்த இரு விளையாடுகழகங்களுக்கிடையே பல போட்டிகள் நடைபெறும்.

                                                                         அந்த போட்டிகளின் போது நாவந்துறை சென் நீக்கிலாஸ் உதைபந்தாட்ட கழகத்தில் இருந்து,டைகர் கழகத்திற்காக சிலர் விளையாடி வந்தனர். ஆனால் மறைந்த ஜேக்கப் இளைய சிங்கம் அவர்கள் அந்த போட்டியின் போது மிக சிறப்பாக விளையாடுவார். நான் அவரை மாமா என்றே அழைப்பேன். அப்படிப்பட்ட உறவு எங்களுக்குள் இரு ந்தது. இந்த் இரு கழக போட்டிகளில் திரு ஜெயரட்டிணம் அவர்கள் டைகர் பக்கம் விளையாடி, அந்த கழகத்திற்கு பல வெற்றிகளை குவித்தார்.

                                                                         ஒரு நாட்டின் தேசிய கழகமாக இருந்தல் என்ன, ஒரு ஊரின் கழகமாக இருந்தல் என்ன, ஒரு வீரனின் கோல் அடிக்கும் திறமையிலேயே அதாவ்து Finishing talent  அந்த கழகத்தின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது. அதேபோல திரு முத்துக்குமார் ஜெயரட்டிணத்தின் கோல் அடி க்கும் திறமையில்தான் நாவாந்துறை சென் நீக்கிலாஸ் உதைபந்தாட்ட கழ கத்தின் வெறிகள் தங்கியிருந்தன எனப்து மிகையல்ல பாடிப்பட்ட அபார திறமை கொண்டவர்தான் திரு முத்துராசா ஜெயரட்டிணம் அவர்கள்

                                                                 சென் நீக்கிலாஸ்  உதைபந்தாட்ட வரலாற்றில், தனிப்பட்ட ஒரு சிறந்த வீரனாக இருந்து, அந்த விளையாட்டு கோஷ்டிக்கு தலைமை தாங்கி, அதனை வழி நடத்திய பெருமை திரு, முத்துராசா ஜெயரட்டிணம் அவர்களையே சாரும். Free Kick, Penalty Kick அடிக்கும் போது, மிக நுணுக்கமாக, நம்பிக்கை தரும் வகையில் அடிக்கும் திறமை கொண்ட ஒரு சிறந்த வீரனாவார். எந்தவொரு விளையாட்டு வீரனும் மைதானத்தில் விளையாடும் போது, அமைதியான மனநிலையில் விளையாடவேண்டும், அதை மனதில் கொண்டு விளையாடும் வீரனே எதிர்காலத்தில் சிறந்த விளை யாட்டு வீரனாக விளங்க முடியும். அவ்வாறு அந்த மனநிலையில், திரு, ஜெயரட்டிணம் அவர்கள் விளையாடிதினாலேதான், இன்றும் அவர் மக்கள் மனதில் சிறந்த விளையாடு வீரனாக சிறந்து விளங்கின்றார்.

                                                                     பொதுவாகவே ஒரு விளையாட்டு வீரனுக்கு ஐந்து திறமைகள் இருக்கவேண்டும், அப்படி இருந்தால்தான் அந்த விளையாn ட்டு வீரன் சிறந்த வீரனாக மிளிரமுடியும். அவையாவன
 1) ஒழுக்கம் ( Dicipline)
2) உடல் வலிமை ( Physical fittness)
 3) விளையாடும் போது, பந்தை தன்னகப்படுத்தும் திறமை (Ball control)
4)  விளையாடும் போது, பந்தை உரிய நேரத்தில் தேவைப்படும் உரிய இடத்து க்கு செலுத்தும் திறமை (Accurate time and place)
5) கோல் அடிக்கும் திறமை ( Finishing perfectness)

                                                  இவ்வளவு திறமையும் தன்னகத்தே கொண்டவர்தான் திரு ஜெயரட்டிணம் அவர்கள் என்பது நான் கண்ட அனுபவ உண்மை! முன்னொரு காலத்தில், சிறந்து விளங்கிய விளையாடு வீரர்கள், கூட          திரு, ஜெயரட்டிணத்தின் விளையாடு நுட்பங்கள் பற்றி சிலாகித்து கதைத் ததை நானும் பலதடவை கேட்டிருக்கின்றேன்.

                                                      இப்படியாக சொல்லப்போனால் திரு முத்துராசா ஜெயட்டிணம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம், இவ்வாறாக விளையா ட்டு வீரர்கள் பற்றியும், உதைபந்தாட்டத்தைப் பற்றியும், எழுதக்கூடிய விளை யாட்டு ஞானத்தை எனக்கு தந்த கடவுளுக்கு நன்றி நவிலும்,  அதே நேரம், என்னை சிறுவயதில், அதாவது எனது ஆறாம் ஏழாம் வயது பருவத்தில் இரு ந்தே, உதைபந்தாட்டத்தில், ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஊட்டி, உதைபந் தாடத்தில் உயரவைத்த எனது தந்தையவர்கள், என்னைப்பொருத்தவரை, அவர் எனக்கு நடமாடும் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரவே இருந்தார்.

                                   நான் விளையாடும் இடம் , கலந்துகோள்ளும் விளையாடுப்     போட்டிகளில் மைதானதில் நின்று கொண்டு உட்சாகத்தையும், அவப்போது நுட்பங்களை சொல்லி வழிநடத் கியவர் என் தந்தையவர்களே! நான் அவ ரோடு விளையாட்டுவதற்கு செல்லும்போது, போட்டிகளில் நான் விட்ட பிழை கள், சரியானவைகளை எடுத்துச்சொல்லி, என்னை நெறிப்படுத்தியவர் எனது தந்தையே!

                                      இப்படிப்பட்ட ஒரு தந்தையை எனக்கு தந்த இறைவனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக்கொண்டு, மீண்டும் இன்னொரு விளை யாட்டு வீரனின் தக‌வல்களுடன், உங்களை சந்திப்பேன் எனச்சொல்லி விடை பெறுபவர் உங்கள் பிரன்ஸிஸ் பாலசிங்கம் ரெட்ணசிங்கம் நன்றி,,,,,,,,,,,,,,

,,,,,,,தொடரும்

No comments:

Post a Comment