Thursday 20 June 2024



நானாட்டான் நறுவிலிக்குளத்திலே வறிய விதவை கைவிடப்பட்ட பெண்களுக்காக தைப்பெண்கள் என்ற அமைப்பை உருவாக்கி தையல் ஆடைத்தொழிலில் வருமானம் ஈட்ட முயற்சி செய்கின்றோம். நானாட்டான் பிரதேச செயலகமானது, பல பொருளாதார திட்டங்களை அமுல்படுத்தி வருகின் றது. அத்தகைய திட்டங்களை எமது அமைப்பின் ஊடாக செயல்படுத்தினால் நாமும் பயன் அடைவோம். எமது அமைப்பில் இன்னும் பல பெண்கள் இணைய உள்ளார்கள் ஆனால் எம்மிடம் போதிய அளவு தையல் இயந்திரங்கள் இல்லை. அதனை நீங்கள் எமக்கு தரும்படியும், கொஞ்சம் நிதியுதவியும் நல்கும் படி  

Tuesday 19 March 2024

இசை உலகின் மாமா கே.வி. மகாதேவன்

              தேன் தமிழ் ஓசை வழங்கும் இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சி: 

திரைப்பட இசைத்துறையில் பிரபல்யமான இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர்கள் இவர்களைப்பற்றி சிலாகிக்கும் ஓர் நிகழ்ச்சியாக இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றோம்! 

இன்றைய இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சியில் இடம்பெறுவது, இசை உலகில் மாமா என்று செல்லமாக அழைழைக்கப்படும் கே.வி. மகாதேவன். எழுத்துருவாக்கம் பேசாலைதாஸ், குரல் வடிவம் உங்கள் அபிமான அனுஷியா!

1918-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்தவர் கே.வி.மகாதேவன், தனது 24-வது வயதில், 1942-ம் ஆண்டு, திரைத்துறைக்குள் அடியெடுத்துவைத்தார் இவர். ‘மனோன்மணி’ என்கிற படத்துக்கு ஒரேயொரு பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில், இவர் இசையமைத்த பாடல் தனித்துத் தெரிந்தது.

கர்நாடக சங்கீதம் என்பது மேட்டுக்குடியினருக்கு மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. ஆனால், தன் இசையால் கர்நாடக சங்கீதத்தை எளிமைப்படுத்தினார் கே.வி.மகாதேவன். எளிய மனிதர்களுக்கும் கொண்டு சேர்த்தார். இன்னும் சொல்லப் போனால், எந்தவிதமான பாடலாக இருந்தாலும், அங்கே கர்நாடக சங்கீத பாணியை மெல்லிய இழைபோல் பாட்டு முழுவதும் விரவவிட்டிருப்பார் மகாதேவன். ஒருகட்டத்தில், ‘இது கே.வி.மகாதேவன் பாணி’ என்றே ஆனது.
நிலவோடு வான் முகில் விளையாடுதே’ என்ற பாடல், முழுக்க முழுக்க இசை ஞானம் அறிந்தவர்களால் கூட சுலபமாகப் பாடமுடியாது. ஆனால், கிராமத்தில் விவசாயம் செய்பவர்கள் கூட, இந்தப் பாட்டுப்புத்தகத்தை வாங்கிவைத்துக் கொண்டு, அச்சுஅசல் அதே ஏற்ற இறக்கங்களுடன் பாடினார்கள். அதற்குக் காரணம்... கே.வி.மகாதேவனின் கர்நாடக இசை. இன்னொரு காரணம். அந்த இசையை எல்லோர்க்குமாகக் கொண்டு சேர்த்த ஸ்டைல்!
முக்தா சீனிவாசனின் ‘முதலாளி’ படத்தில், ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயிலே. நில்லு கொஞ்சம் நானும் வாரேன்’ என்ற பாடல், நகர்ப்புற மக்களாலும் பட்டிதொட்டி கிராம மக்களாலும் ரசிக்கப்பட்டது. முணுமுணுக்கப்பட்டது. ஒருபக்கம் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் தன் படங்களுக்கு திரை இசைத் திலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். அதேபோல், பி.ஆர்.பந்துலுவும் தன் படங்களுக்கு மகாதேவனின் பாடல்களும் இசையும் மிக அவசியம் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். தொடர்ந்து பயன்படுத்தினார்.
கே.வி.மகாதேவனின், காதல் பாடல்கள் பலாச்சுளை. சோகப்பாடல்கள் வீணையின் இதம். உற்சாகப் பாடல்கள், தபேலாவின் வேகம். தத்துவப் பாடல்கள் புல்லாங்குழலின் மென்மை. இப்படித்தான், கே.வி.மகாதேவனின் பாடல்கள், ஹிட்டடித்தன. ‘உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல’ என்று உருகவைப்பார். ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்று கிறங்கடிப்பார். ’நதி எங்கே போகிறது கடலைத்தேடி’ என்றும் ‘பறவைகள் பலவிதம்’ என்றும் ‘கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்’ என்றும் ஒவ்வொருவிதமாக, பாடல்களைக் கொடுத்த கே.வி.மகாதேவன், பாட்டுக்குத்தான் மெட்டு என்பதில் உறுதியாக இருந்தார்.
’நலந்தானா நலந்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா?’ என்ற பாடல், இன்றைக்கும் காதலர்கள் குசலம் விசாரித்துக்கொள்கிற பாடல். பேரறிஞர் அண்ணாவே வியந்து மகிழ்ந்து நெகிழ்ந்த பாடல். இவர்தான் ‘எலந்தபயம்’ பாடலையும் இசைத்து மிகப்பெரிய ஹிட்டாக்கினார் என்றால் நம்பவே மாட்டார்கள்.
தேவர் பிலிம்ஸ் தன் படங்களில், தொடர்ந்து கே.வி.மகாதேவனின் இசையையே பயன்படுத்திக் கொண்டது. படத்தின் எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுக்கிற மேஜிக், மாமா என்று அன்புடன் அழைக்கப்படுகிற கே.வி.மகாதேவனு க்கே உரிய ஸ்டைல்! ‘ஏதோ ஏதோ ஏதோவொரு மயக்கம், அது எப்படி எப்படி வந்தது எனக்கும்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான்கு நிமிடத்துக்கு நாம் மயங்கிச் சுதாரிப்போம். ’திருமணமாம் திருமணமாம் ஊரெங்கும் திருமணமாம்’ என்ற பாடல், கல்யாண ஊர்வலத்தில் நம்மையும் ஒருவராக அழைத்துச் செல்லும்.
குரலால் தனித்துவம் மிக்க பாடகியாக மிகப்பெரிய பேரெடுத்த எல்.ஆர்.ஈஸ்வரியை அறிமுகப்படுத்தினார் கே.வி.மகாதேவன். ‘இயற்கை என்னும் இளையகன்னி’ என்று மெல்லிசை மன்னரின் இசையில் முதன்முதலாகப் பாடினாலும் எஸ்பி.பி-யின் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலும் இசையும் மிகப்பெரிய கவனம் பெற்றது. அந்தப் பாடலின் நடுவே வருகிற ஒவ்வொரு இசையும் நம்மைத் துள்ளாடச் செய்யும். வரிகளும் இசையுமாக வந்து மனதை தள்ளாடச் செய்யும்.
இசையின் மகத்துவங்களை அறிந்த கே.வி.மகாதேவனின் முக்கியமான ஸ்டைல்... சைலண்ட். அதாவது மெளனம். பாடல் வந்துகொண்டிருக்கும். இசையும் வரிகளுமாகக் கலந்து கைகோத்து நம்மை என்னவோ செய்துகொண்டிருக்கும். 'என்னதான் ரகசியமோ இதயத்திலே/ நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள்... நடுநடுவே இசையே இல்லாமல் வரிகள் மட்டும் வந்து பச்சக்கென்று இன்னும் பாடலுடன் உறவாடத் தொடங்குவோம்.
அன்னத்தைத் தொட்ட கைகளிலே மதுக்கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்’ என்று பாடிக்கொண்டே இருக்கும்போது, ’உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர்போனாலும் தரமாட்டேன்... உயிர் போனாலும் தரமாட்டேன்’ என்று சொல்லும்போது இசையை மெளனமாக்கி, வார்த்தைகளை கனமாக்கி காதலுக்குள் மூழ்கடித்துவிடுவார் கே.வி.மகாதேவன்.
ஜெயலலிதா பல பாடல்களைப் பாடியிருக்கிறார். ’’ஜெயலலிதா குரலில் ஒரு மேஜிக் இருக்கு. அதனால இந்தப் பாட்டை அவங்களே பாடட்டும்’’ என்று எம்ஜிஆரிடம் சொல்ல, எம்ஜிஆரும் சம்மதம் தெரிவிக்க, ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை முதன்முதலாகப் பாடினார் ஜெயலலிதா.
நாற்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கிய மகாதேவன் மாமாவின் இசைப்பயணம் எழுபதுகளின் இறுதி வரை தொடர்ந்தது. 1967-ம் ஆண்டில், இசையமைப்பாளர்களுக்கும் தேசிய விருது வழங்கலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் தான்!
இயக்குநர் கே.விஸ்வநாத்தின் பல படங்கள் இசையை மையமாகக் கொண்டும் கலைக்கு முக்கியத்துவம் கொண்டும் உருவாக்கப்பட்டன. அப்படி அவர் உருவாக்கிய ‘சங்கராபரணம்’ படத்துக்கு கே.வி.மகாதேவனே இசையமைத்தார். தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழகத்திலும் தெலுங்கு மொழியிலேயே வந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது இந்தப் படம். இந்தப் படத்தின் பாடலைப் பாடாத இசைக்கச்சேரிக்காரர்களே இல்லை. இந்தப் படத்துக்காக எஸ்பி.பி-க்கு சிறந்த பாடகர் விருதும் கே.வி.மகாதேவனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் கிடைத்தன.
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன... காதல்...’ என்ற பாடலும் ‘மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாகக் கையைத் தொட்டு அள்ளியள்ளி அணைக்கத்தாவினேன்... நீயும் அச்சத்தோடு விலகி ஓடினாய்’ என்பதுமான எத்தனையோ ஆயிரமாயிரம் முத்துமுத்தான பாடல்களைக் கொடுத்த திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன், கர்நாடக சங்கீதம் எனும் முரட்டுக்குழந்தைக்குத் திலகமிட்டு, பூச்சூட்டி, மெல்லிசையாக்கி அழகுபார்த்த செல்ல மாமா!
1918-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்தவர் கே.வி.மகாதேவன். நூற்றாண்டுகளைக் கடந்தும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிற, போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிற, கொண்டாடிக்கொண்டே இருக்கிற மகா இசைமேதை மகாதேவனின் 106-வது பிறந்தநாள் இன்று!
மகாதேவன் எனும் இசை மாமாவைக் கொண்டாடுவோம்! மீண்டும் மற்றுமொரு இன்னிசைப்பாடகன் நிகச்சி வழியாக உங்களை சந்திப்போம் நேயர்களே! அதுவரை எழுத்துர்வாகம் கொடுத்த பேசாலைதாஸ் அவர்களுக்கு நன்றி சொல்லி விடை பெறுவது உங்கள் அபிமான அனுஷியா

Friday 1 March 2024

சித்திரச் செவ்வானத்தை சிரிக்கவைத்த’ பாடகர் ஜெயச்சந்திரன்!

தேன் தமிழ் ஓசை வழங்கும் இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சி! நேயர்களே, இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சி ஊடாக நாம் செவ்விதழ் இசைத்தமிழிலே பிரபல்யமான இசை அமைப்பாளர்க;, பாடலாசிரியர்கள், பாடகர்களைப்பற்றி அவ்,வப்போது சிலாகித்து வருகின்றோம்; அந்த வரிசையில் இன்று இடம் பெறுபவர், சித்திரச் செவ்வானத்தை சிரிக்கவைத்த’ பாடகர் ஜெயச்சந்திரன்! பிரதி ஆக்கம் பேசாலைதாஸ், தொகுத்து வழங்குபவர் உங்கள் அபிமான அனுசியா!


சில குரல்கள், எல்லோருக்கும் பிடித்தமான குரலாக அமைந்திருக்கும். முக்கியமாக, எல்லா இசையமைப்பாளர்களுக்கும் விருப்பமான குரலாக அமைந்திருக்கும். அப்படி, இசையமைப்பாளர்களின் உணர்வுக்குத் தக்க குரல் கிடைத்துவிட்டால், நம் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடல்களை அந்தக் குரல் நமக்குக் கடத்திவந்து கொடுத்துவிடும். பாடகர் ஜெயச்சந்திரனின் குரல் அப்படித்தான்!

அப்பா மிகப்பெரிய இசைக்கலைஞர். கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவர். ஆனாலும் எளிமையாகத்தான் வாழ்ந்தார்கள். மகனையும் மிக மிக எளிமையாகவே வளர்த்தார்கள்.
பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு, சென்னைக்கு வந்தார் ஜெயச்சந்திரன். டிகிரி கையில் இருந்தது. மிருதங்கம் பக்கத்திலேயே இருந்தது. ஆனாலும் தனக்குள் இரண்டறக் கலந்திருந்த குரலின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது அவருக்கு!
1965-ம் ஆண்டு, போருக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மெய்யுருகப் பாடினார். இந்தப் பாடலை இந்தியாவின் ஒளிப்பதிவு மேதை என்று போற்றப்பட்டவரும் இயக்குநர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருமான ஏ.வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர்.எஸ்.பிரபு இருவரும் கேட்டார்கள். உடனே ஜெயச்சந்திரனை அழைத்து கைகுலுக்கினார்கள். தோள் தட்டிப் பாராட்டினார்கள். ’குஞ்சாலி மரக்கார்’ எனும் படத்துக்கு பாடவைத்தார்கள். இதுவே அவருக்கு முதல் படம்; முதல் பாட்டு! ஆனால், இதையடுத்துக் கிடைத்த வாய்ப்பு, முதல் படமாக, முதல் பாடலாக அமைந்தது. ’களித்தோழன்’ படத்தில் ஜெயச்சந்திரனின் பாடல் ஒலித்தது. குரலில் கட்டுண்டுபோனார்கள் கேரள ரசிகர்கள்.
மெல்லிசை மன்னர் ’மூன்று முடிச்சு’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இரண்டு பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் கமலுக்குப் பாடினார். இன்றைக்கும் ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற பாடலையும் ‘ஆடிவெள்ளி தேடி உன்னை’ என்ற பாடலையும் கேட்டுப்பாருங்கள். அப்படியே கமலின் குரலுக்கு இணையானதொரு குரலாகவும் ஸ்டைலாகவும் பாடியிருப்பார்.
கொஞ்சம்கொஞ்சமாக ஜெயச்சந்திரன் குரலுக்கென தனிக்கூட்டம் உருவானது. ‘’ஜெயச்சந்திரனோட குரல்ல பாதி ஜேசுதாஸ் இருக்கார்; பாதி எஸ்பி.பி. இருக்கார். புதுமாதிரியா இருக்குப்பா அவரோட வாய்ஸ்’’ என்று தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இளையராஜா வந்தார். எழுபதுகளின் மத்தியில் வந்த இளையராஜா, எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற படத்துக்கு இசையமைத்தார். ‘சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ என்ற பாடலை வழங்கினார். தொடர்ந்து, இளையராஜா தன் இசையில் எஸ்பி.பி-க்கு இந்தப் பாடல்தான், ஜேசுதாஸ் அண்ணாவுக்கு இந்தப் பாடல்தான், மலேசியா வாசுதேவனுக்கு இந்தப் பாடல்தான், எஸ்.என்.சுரேந்தருக்கு, தீபன் சக்கரவர்த்திக்கு, கிருஷ்ணசந்தருக்கு என்றெல்லாம் பாடல்களை வகைவகையாகக் கொடுத்தார். அந்தப் பட்டியலில் ஜெயச்சந்திரன், தனியிடம் பிடித்தார்.
பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், ‘மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ’ என்ற பாடலில் ஸ்வர சஞ்சாரமெல்லாம் செய்து ஆலாபனைகளில் அசத்தி, ‘நீரோடை போலவே’ என்கிற வரிகளில், நம் கண்முன்னே நீரோடையைக் கொண்டு வந்து நிறுத்தினார் ஜெயச்சந்திரன்.
டி.ராஜேந்தருக்கு எஸ்பி.பி-யின் குரல் மீது அதீத காதலே உண்டு. ஆனாலும் மற்ற குரல்களையும் அவர் ரசிக்காமல் இருந்ததில்லை. முதன்முதலாக இசையமைத்த ‘ஒருதலை ராகம்’ படத்திலேயே, ‘கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ என்ற பாடலைக் கொடுத்தார். அவரின் குரலாலும் அந்தக் குரல் மூலம் நம்மைத் தொட்ட டி.ஆரின் வரிகளாலும் நாமே அழுது கரைந்தோம். ‘இரயில் பயணங்களில்’ படத்தில், ’வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம், அந்த ‘பெல்பாட்ட’ காலத்துக்குள் சென்று பயணிக்கத் தொடங்கிவிடுவோம். அப்படியொரு மாயாஜாலக் குரல் ஜெயச்சந்திரனுடையது!
பாக்யராஜ் பாலக்காட்டு மாதவனாக நடித்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்ற பாடலைக் கேட்டால், நமக்கே காதல் பூ குலுங்கிக் குலுங்கிப் பூக்கும். ‘’எங்கிட்ட அஞ்சு டியூன் இருக்கு. அதை தனித்தனியா தரமாட்டேன். மொத்தமா ஒரே படத்துக்குத்தான் தருவேன்’’ என்று இளையராஜா, நீண்டநாட்களாக அந்த ஐந்து டியூன்களை அடைகாத்து வைத்திருக்க, ஆர்.சுந்தர்ராஜன், அந்த டியூன்களைத் தட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று ‘வைதேகி காத்திருந்தாள்’ உருவாக்கினார். ‘’இந்தா அஞ்சு டியூன், வைச்சிக்கோ’’ என்று இளையராஜா கொடுத்தார்.
‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்கிற பாடல், காதலர்களின் ஏக்கப் பாடல். ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா’ என்பது காதலின் துக்கப்பாடல். ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே’ என்கிற பாடல், காதலின் குதூகலம் உணர்த்திய பாடல். இந்த மூன்று பாடல்களும் முக்கனிச்சுவை. இந்த முக்கனிகளையும் ஜெயச்சந்திரனுக்கு... அவரின் பலாச்சுளைக் குரலுக்குமாக வழங்கினார். ’ஆலிலையோ தொட ஆளில்லையோ’ எனும் வரிகளில் ஜீவனைக் குழைத்து தன் குரலில் தோய்த்துக் கொடுத்தார் ஜெயச்சந்திரன்.
குரலில் இன்னமும் அதே குழைவு. இப்போது உடலையும் கட்டுமஸ்தாக, ஆரோக்கியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
மாயக்குரலால் வசீகரித்த ஜெயச்சந்திரனின் பாடல்களை ஒரு இரவு வேளையில், கேட்டுப்பாருங்கள். மறுநாள்... ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ என்று யாராவது நம்மிடம் கேட்டால்... அதற்கு, ‘ஜெயச்சந்திரன் பாட்டுகள்தான்’ என்று பதில் சொல்லுவோம். அப்படியொரு ஆனந்தமான குரல் அவருக்கு. நம்மையெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்த்திவிடுகிற குரல் ஜெயச்சந்திரனுடையது! சரி நேயர்களே மற்றுமொரு இசைப்பாடகன் நிகழ்ச்சியிலே சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் அபிமான அனுசியா

Tuesday 27 February 2024

தேன் தமிழ் ஓசை

 நோர்வே நாடும் இலங்கை அரசும் CeyNor என்ற மீன்பிடி துறை சார் பொருளாதார திட்டத்தை அறிமுகம் செய்த காலத்தில், இலங்கை நாழ்ப்பாணத்தில் இருந்து பெருமளவு மக்கள் நோர்வே நாட்டிற்கு வந்தார்கள், அதனையொட்டி Folkehøyskole கல்வி நடவடிக்கை ஊடாகவும் பெருமளவு இலங்கைத்தமிழர்கள் நோர்வே நாட்டுக்கு வந்தார்கள், இதன் பிறகு 1986 காலகட்டத்தில் அகதிகளாக பெருமளவு மக்கள் நோர்வே நாட்டுக்குள் வந்தார்கள். இவர்களின் சுகாதார ந்டவைக்கைகளுக்காக பேர்கன் கம்யூன் சில அறிவுத்தல்களை தமிழ் மொழி மூலமாக கொடுக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. இதன் அடைப்படையில் வானொலிசெவை ஒன்றை வாரம் ஒருதடவை ஒரு மணித்தியால தமிழ் சேவையை நடத்தும் சந்தர்ப்பம், தமிழ்ச்சங்கத்துக்கு கிட்டியது.

                                                              இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வானொலி குழு ஒன்றை சந்திரமோகன் ஏற்பஆடு செய்திருந்தார். இந்த வானொலி குழுவானது தமிழ் சங்கத்தின் ஆதரவில் உருவாக்கப்பட்டு வானொலி முன்னெடுக்கப்பட்டது.  தேன் மதுரம் என்ற பெயர் அப்போது என்னால் முன்மொழியப்பட்டது பின்னர் தேன் தமிழ் ஓசை என்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு வானொலி சேவை ஆரம்பமானது. இந்த குழுவில் எல்மர், தேவநாதன், க்ரோலின், னிதி, எலிசபேத், யூலியஸ், சந்திரமோகன் இன்னும் பலர் இந்த வானொலியில் ஆர்வமாக ப்ங்கெடுத்தனர். நான் சிறுவர் நிகழ்ச்சிகளை ஏற்றுக்கொண்டு அதனை பல வருடங்களாக நடத்தி வந்தேன். அதனால்தான் வானொலி மாமா என்று எல்லோராலும் அழைக்கப்பட்டேன்.

                                                         நான் யாழ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்றிருந்தேன், தொடர்ந்தும் பேர்கன் பல்கலைக்கழக த்தில் அதே துறையில் முதுகலைமானியும் பெற்றேன், பின்னர் கலாநிதி பட்டம் பெறுவதற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில்  M Phil படிக்க சென்றுவிட்டேன். பின்னர் மீண்டும் பேர்கன் வந்தேன். அப்பொழுது தேன் தமிழ் ஓசையின் உரிமம் தனிப்பட்ட நபர்களின் பெயரில் மாற்றப்பட்டு வானொலி சேவையானது நடைபெற்றது. சிற்றலை வரிசையில், வாரம் இரண்டு மணித்தியாலம், Student Radio Station வழியாக நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

                                                      நான் பேர்கன் நகருக்கு மீண்டும் வந்தபோது வானொலியில் இணைந்து செயலாற்ற ஆசைப்பட்டேன் பல வருடங்களாக காத்திருந்தேன். ஏனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் வானொலி விழாவிலும் நான் ப்றக்கனிக்கப்பட்டேன், அழைப்பு விடுவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நான் நோர்வே வானொலி அதிகார சபை  Mediatilsynet தொடர்பு கொண்டு தேன் தமிழ் ஓசை வானொலி பற்றி கேட்டபொழுது வருடாவாருடம் 100000 குரோனர் வழக்கப்படு வந்தவிடயம் எனக்கு தெரியவந்த்தது. அதற்கான நிதி அறிக்கையும் எனக்கு தரப்பட்டது. 

                                                     நான் தமிழ் சன்ன்கத்தோடு தொடர்பு கொண்டு, தமிழ் சங்கத்தின் பெயரில் இருந்த வானொலி எப்படி தனியார் கைகளுக்கு மாறியது என்று கேட்டேன், தமிழ் சங்கம் அதற்கான பதிலை தரவில்லை. பின்னர் நான் தேன் தமிழ் வானொலிக்கு கிடைத்த மானிய விபரங்களை நான் முக நூலிலே தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பேர்கன் நகரில் பெரும் சலசல்ப்பு ஏர்பட்டது. இதன் எதிரொலி தமிழ் சங்கத்திலும், தமிழ் கிறிஸ்தவ ஒன்றியத்திலும் எனக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டது.

                                                   தேன் தமிழ் ஓசை பொதுவான மக்களுக்கானது என்பதை நான் நிலை நாட்டவேண்டும் என்பதற்க்காக Bronøysund 

Saturday 6 January 2024

அன்னை பூபதி கலைக்கூடமா? அல்லது ஊழல் கொட்டகையா?

 அன்னை பூபதி கலைக்கூடமா? அல்லது ஊழல் கொட்டகையா? தேன் தமிழ் ஓசை

தமிழ்தீ என்ற இணையத்தளத்தில் வெளியாகிய அன்னை பூபதியின் கணக்கு விபரங்கள் பற்றிய ஒரு பதிவை நாம் இங்கு மீண்டும் பதிவு ஏற்றுகின்றோம். இதில் உள்ள உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.  ஐயங்கள் சந்தேகங்கள் சமூக ஊடக ங்களில் வெளிவருவது தவிர்க்கமுடையா அம்சம், பொது விடய ங்களில் ஈடுபடும் அமைப்புகள், தனிநபர்கள் வெளிப்படை தன் மையாக நடந்து கொண்டால்,  இப்படிப்பட்ட வீண் விவாதஙள் தவிர்க்கபட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆர்வமுள்ளவர்கள் இதன் உண்மைத்தன்மையினை அறியவேண்டும் என நாம் விரும்புகி ன்றோம்.  இதோ அந்த பதிவு

 நிதிநிர்வாகம் தொடர்பான ஐயம் – வீண்விரயம் – வெளிப்படைத்தன்மையின்மை!

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத் தலைமை நிர்வாகி நிர்மலன் செல்வராஜாவின் பதவி விலகலையும்; றொம்மன் வளாக நிர்வாக மாற்றத்தையும் கோரி கடந்த சில மாதங்களாகப் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் குரல்கொடுத்து வருகின்றனர். அதற்கான காரணிகளில் கலைக்கூடத்தின் ஐயத்திற்குரிய நிதிநிர்வாகவும் முக்கியமான ஒன்றாகும்.

அங்கத்தவர்களைக் கொண்ட தன்னார்வ நிறுவனங்களுக்கான நோர்வே அரச உதவித்தொகை மற்றும் தமிழ் கற்பித்தல், கலைப் பாடங்கள் மற்றும் இன்னபிற சேவைகளுக்காகப் பெற்றோர்களிடமிருந்து ( அங்கத்தவர்களிடமிருந்து) அறவிடப்படும் வெவ்வேறு கட்டணங்கள் எனப் பல மில்லியன் கணக்கான நிதி கலைக் கூடத்திற் புழங்குகின்றது. 

இந்நிலையில் வரவு – செலவு தொடர்பான தகவல்கள் உரிய வெளிப்படைத்தன்மையுடன் அங்கத்தவர்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுவருகின்றன. அத்தோடு நிதிக்கையாளுகை தொடர்பான பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, கலைக்கூட நிதிவளங்கள் வீண்விரயம் செய்யப்படுகின்றமை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

தலைமை நிர்வாகியே நிதிப்பொறுப்பினையும் பல ஆண்டுகளாகத் தன்வசம் வைத்துள்ளார்.  நிர்வாகத்தின் கணக்காளர் என்போர் வெறுமனே கணக்குப் பதிவுகளைச் செய்வோராக இயங்குவதாகவே அறியப்படுகின்றது. நிதிநிர்வாகம் தொடர்பான பரிசோதகர் குழு, கண்காணிப்புக் குழு, மீளாய்வுக் குழு என எதுவும் இயங்கவில்லை என அறியமுடிகின்றது. நோர்வே முழுவதும் கிளைகளைக் கொண்ட - பெருந்தொகை நிதி புழங்கும் ஒரு நிறுவனத்தின் நிதிமுகாமைத்துவம் தனியொரு நபரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை அனுமதிக்க முடியாது. 

அதாவது தலைமை நிர்வாகி தவிர்ந்த ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு நிதி வரவுகள் அரச உதவித்தொகை,செலவுகள் உட்பட்ட நிதி  நடவடிக்கைகள் பற்றிய தவகல்களும் அறிதல்களும் இல்லாமல் அல்லது போதாமையாக உள்ளது. கல்விக்கூடத்தின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான தகவல்களையும் அறிதல்களையும் கொண்டிராது- தனியொருவரின் மேலாதிக்கத்திற்குள் நிதிக்கையாளுகை முற்றிலும் சென்றடைய அனுமதித்ததால் ஏனைய நிர்வாகிகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களாவர். இதிலுள்ள கூட்டுப்பொறுப்பினை அவர்கள் தட்டிக்கழிக்க முடியாது. கணக்குப்பதிவும் தலைமை நிர்வாகியின் வழிநடத்திலிலேயே மேற்கொள்ளப்படுகிறது.   நிதி தொடர்பாக நிர்வாக உறுப்பினர்களுடமும் மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதனை நிர்வாக உறுப்பினர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

தமிழர் வள ஆலோசனை மையக் கட்டடக் கொள்வனவிற்காகப் பெறப்பட்ட வங்கிக்கடன் கிட்டத்தட்ட அதேயளவு இன்னும் கடனாகவே உள்ளது. மாதாமாதம் வட்டி மட்டுமே வங்கிக்குச் செலுத்தப்படுவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருத்தமான நிதிநிர்வாக வழிமுறைகளும் பொறிமுறைகளும் கையாளப்பட்டிருப்பின் கட்டடக் கொள்வனவிற்காகப் பெறப்பட்ட வங்கிக்கடனில் கணிசமான தொகையினை இன்றளவில் மீளச் செலுத்தியிருக்க முடியும். இன்றைய சூழலிற் சாதாரண ஒரு குடும்பம் தமது வீட்டுக்கொள்வனவிற்காக வங்கியிற் பெறும் கடன்தொகையினை ஒத்த கடன்தொகையே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டடம் கொள்வனவு செய்யப்பட்டபோது பெறப்பட்ட கடன்தொகையாகும். சாதாரண வீட்டுக்கடன் மீளளிப்பிற்கான அண்ணளவான காலம் என்பது 25 – 30 வருடங்களாகும்.

கலைக்கூடத்திற்குக் கடந்த 3 வருடங்களிற் கிடைக்கப் பெற்ற அரச நிதி உதவித்தொகையின் விபரம் வருமாறு:

• Barne-, ungdoms- og familiedirektoratet: 

- 2021: 896 073 kr | 2022: 929 147 kr | 2023: 979 484 kr

• Landsrådet for Norges barne- og ungdomsorganisasjoner:

-  2021: 409 584 kr | 2022: 413 780 kr | 2023: 420 876 kr

• Lotteri- og stiftelsestilsynet: 

- 2021:  77 617 kr | 2022: 270960 kr | 2023: 103 180 kr

ஆதார இணைப்பு:

https://tilskudd.dfo.no/mottaker/985315515...

2023இன் தரவின்படி அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்கான ஒரு ஆண்டுக்கான மொத்த அரச உதவித் தொகை ஒன்றரை மில்லியன் குரோணர்கள்.

அத்தோடு குறைந்தது 500 மாணவர்கள் றொம்மன் வளாகத்திற் தமிழ், கலைப்பாடங்கள் உட்பட்ட சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்துகின்றனர். ஆண்டொன்றில் ஆளுக்கு 1500 kr என்று பார்த்தாற்கூட 1500x500 = 750 000 Kr வருகின்றது.

தமிழர் வள ஆலோசனை மையத்திற்கான (TRVS) அரச உதவித் தொகை:

2021 : 611 604 kr

2022 : 203 172 kr

2023 : 53 740 kr

இதைவிட அங்கத்துவக் கட்டணமாக ஒவ்வொரு மாணவரும் வருடாந்தம் 100 kr செலுத்துகின்றனர். றொம்மன், லோறன்ஸ்கூக், வைத்வெத், தொய்யன், மொட்டன்ஸ்ரூட் ஆகிய வளாகங்களில் புதிய பெற்றோர்களிடமிருந்தும் தவனை அடிப்படையில் 5000 Kr கட்டிட நிதியாக அறவிடப்படுகின்றது. 

பெற்றோர்களுக்கு (அங்கத்தவர்களுக்கு) இந் நிதி விபரங்கள் தொடர்பனான பொறுப்புக்௯றும் நிறுவனமாக இந் நிருவாக மாற்றம் அமைய வேண்டும்.

அண்ணளவாகப் பார்த்தாற்கூட அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் மற்றும் தமிழர் வள ஆலோசனை மையம் ஆகிய இரு நிறுவனங்களும் ஆண்டொன்றுக்கு இரண்டரை முதல் மூன்று மில்லியன்கள் ( 2 500 000 Kr – 3 000 0000 Kr) நிதி வரவினைக் கொண்டுள்ளன.

நோர்வேஜிய நிறுவனங்களின் வருடாந்தக் கணக்கறிக்கைகளுக்கான (https://www.regnskapstall.no) இணையத்தளத்தில் எவரும் சென்று பார்க்க முடியும். அன்னை பூபதி கலைக்கூடத்திற்கான கணக்கறிக்கை அந்தத் தளத்திற் தேடியபோது கிடைக்கப் பெறவில்லை. 

‘ Annai Poopathi Tamilsk Kultursenter Rommen er ikke regnskapspliktig og/eller har ikke levert årsregnskap til Brønnøysundregisteret’

என்ற கூற்றினை அங்கு காணமுடிந்தது. 

நிதிநிர்வாகம் தொடர்பான வெளிப்படைத்தன்மையின்மை, ஐயத்திற்கிடமான நிதிக்கையாள்கை, நிதி வளங்களின் வீண்விரயம் தொடர்பான அவதானிப்புகள் புறக்கணிக்கப்பட முடியாதவை.   கணக்காளரின் (Revisor) கணக்கு, உண்மைக் கணக்கு இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. நிதிக்கையாளுகை விபரங்களும் கணக்கறிக்கைகளும்  முமுமையான வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் பெற்றோருக்கு முன்வைக்கப்படவேண்டும்.  அன்புடன் தேன் தமிழ் ஓசை www.theantamiloasai.com

Thursday 4 January 2024

வைரமாளிகை

வைரமாளிகை பேசாலைதாஸ்

1970 அந்த வரமாளிகை பற்றிய  களின் இறுதிக்கால கட்டத்தில், யாழ் பஸ் நிலையத்தில் உங்கள் நினைவுகள் சுழன்று வந்தால், கட்டாயம் இந்த வரைமாளிகை மனிதனைப்பற்றிய உங்கள் நினைவுகளும் ஒட்டிக்கொள்ளும். அவர் ஓர் சுவாரஸ்யமான மனிதர், விளம்பர நாடோடி, உண்மையை உரைத்தால் அவர் ஒரு செய்தி அறிவிப்பாளர் என்று கூட சொல்லலாம், அந்த கதாபாத்திரம் சிந்தனையை கிளறிவிடக்கூடியது, நான் யாழ் பல்கலைக்கழகத்தில், தமிழ் சங்கத்திற்காக, நாளை மறுதினம் Day after Tommorow என்ற நாடகத்தை அரங்கேற்றினேன். அதில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் உரைஞன் (Narator), நான் வேடமேற்று நடித்தேன். அந்த கதாபாத்திரத்தை வைரமாளிகை போலவே நான் ஒப்புவித்தேன். அது ரசிகர் மத்தியில் நன்றாக எடுபட்டது. அந்த வைரமாளிகை மனிதனைப்பற்றிய முகநூல் பதிவு ஒன்று இப்படி விபரக்கின்றது.

                                                   வைரமாளிகை என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையைப் பின்புலமாய்க் கொண்ட ஒருவரின் பெரிய நகைக்கடையின் பெயராகும். ஆனால் வைரமாளிகை என்பது அந்த நகைக்கடையைவிட ஒரு மனிதனின் பெயராகவே யாழ்குடாநாடு எங்கும் அறியப்பட்டு இருந்தது. வைரமாளிகை (Diamond House)என்று தனது ஆடைகளில் முன்னும் பின்னுமாகப் பொறிக்கப்பட்ட எழுத்துக்களுடன் சுவிப் டிக்கற், பத்திரிகை விற்பனை என்பவற்றுடன் விளம்பரமும் செய்யும் மனிதரான வைரமாளிகையையே எமது பேசுபொருள். உயர்ந்த கறுத்த தோற்றமுடைய 60 வயதுக்கு மேற்பட்ட வைரமாளிகை "22 கரட் தங்க நகைகள் நயம் நம்பிக்கை நிறைந்தது" என்ற உரத்த குரலோடு இவர் யாழ் பஸ் நிலையத்தைச் சுற்றி வருவார். கஸ்தூரியார் வீதி ஸ்டான்லி வீதி ஆஸ்பத்தியடி என்று காணப்படுவார். கிட்டத்தட்ட 1960 முதல் 1987வரையில் யாழ் மக்களுக்கு மட்டுமல்ல வன்னி உட்பட மற்றைய பிரதேசங்களில் இருந்து வருபவர்களும் பஸ் நிலையத்தில் அவரைக் கட்டாயம் கண்டிருப்பார்கள். நல்லூர்த் திருவிழாவா சென் பற்றிக்ஸ் பெரிய கோவில் விசேடமா அங்கெல்லாம் அந்த நீலநிற வைரமாளிகை விளம்பரம் எழுதப்பட்ட உடையுடன் எங்கும் தென்படுவார். பெரும்பகுதியாக வைரமாளிகை யாழ் பஸ்நிலையத்தையே சுற்றி வருவார். உரத்த குரலில் திடுக்கிடும்படி பேசுவார். சத்தமிட்டு சிரித்து பற்களை நற நற என்று சத்தம் வரும்படி நெருமி நிமிர்ந்து ஆமிக்காரன் போல நடப்பார். ஓடுவார். ஆடுவார். பாடுவார். வெயில் மழைக்கு ஒதுங்காத ஓய்வெடுக்க சற்று குந்தியிருக்க ஒத்துக்கொள்ளாத இடைவிடாத இயக்கமுடையவர் வைரமாளிகை.</p><p><br /></p><p>தன்னை வியப்புடனும் பயத்துடனும் பார்க்கும் குழந்தைகட்கு அருகே சென்று வைரமாளிகை விளையாட்டுக் காட்டுவார். மேஜிக் காட்டி பொக்கற்றிலிருந்து இனிப்பு வரவழைத்து தருவார். நகருக்குப் புதியவர்களுக்கு போகவேண்டிய இடங்களை விளக்க நேரம் எடுத்துக் கொள்வார். முதியவர்கள், அங்கவீனர்கள், பெண்களுக்கு உதவி செய்வார். தெருக்களைக் கடக்க உதவுவார். வழிகாட்டுவார். யாழ் பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்கள் செல்லும் நேரம் இடம் திசை, எந்தெந்தக் கிராமம் தெருக்கள் ஊடாகச் செல்கிறது என்பதெல்லாம் விளக்கிச் சொல்வார். "பருத்தித்துறை 750 இலக்க பஸ் வெளிக்கிடுகிறது. 577 இலக்க தெல்லிப்பழை பஸ் வெளிக்கிடுகிறது ஏறுகிறவர்கள் எல்லாம் ஏறுங்கள்" என்ற அவரின் குரல் யாரும் வேதனம் தராமலே ஒலிக்கும். யாழ் பஸ்நிலையத்தில் பஸ்ஸிற்குக் காத்திருக்கும் மக்களுக்கு வைரமாளிகை சிறந்த பொழுதுபோக்கு. எல்லோரும் அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். வைரமாளிகை நகைக்கடை விளம்பரத்துடன் சுவிப் டிக்கற் விற்பார். சிலசமயம் பத்திரிகைகள் சஞ்சிகைகள் கொண்டு திரிவார். பத்திரிகைகளில் வரும் செய்திகளை உரக்கச் சத்தமிட்டு சொல்வார். அந்தக் காலத்தில் கோகிலாம்பாள் வழக்கு நடைபெற்ற சமயம் அமிர்தலிங்கம் கோகிலாம்பாளுக்காக வாதாடியபோதும் அவளுக்குத் தண்டனை கிடைத்தது. அப்போது தீப்பொறி பத்திரிகை அமிர்தலிங்கத்தை கோகிலாம்பாள் புகழ் அமிர்தலிங்கம் என்று எழுதியது. ஆங்கில மோகமும் மிதப்பும் கொண்ட ஜீ ஜீ பொன்னம்பலத்தை சீ சீ பொன்னம்பலம் என்று எழுதியது. இச்செய்திகளை வைரமாளிகை சத்தம் போட்டுச் சொல்வார். வைரமாளிகைக்குப் பின்னால் திரிந்தால் பேப்பர் வாசிக்கத் தேவையில்லை என்று பகிடியாய்ச் சொல்லப்படுவதுண்டு.</p><p><br /></p><p>அக்காலத்தில் தொலைக்காட்சிகள்; வராத காலம். ஒரு பேப்பரை வாங்கிப் பலர் படிப்பார்கள். வாசிக்கும் பழக்கம் வளரத் தொடங்கிய காலம். அக்காலத்தில் வைரமாளிகை ஊர் உலக நடப்புகளையும் தன் சொந்தக்கதைகளையும் ஒன்றுசேரப் பேசும் மனிதராக மக்கள் தொடர்பாளராக இருந்தார். அவர் ஒரு விளம்பரம் செய்யும் ஆளாக பேப்பர் சுவிப் டிக்கற் விற்கும் ஒரு அலைந்து திரியும் வியாபாரியாக இருந்தார் என்பதையும் மீறி அவருள் மனிதர்களிடம் பேசும் உரையாடும் மக்களை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவிட முடியாத பண்பு இருந்தது. தனது வியாபார, விளம்பர விடயங்களுக்கு வெளியேதான் அவர் அதிக விடயங்களைப் பேசுவார். வேடிக்கை, சிரிப்பு, முரட்டுத்தனம் இடையறாப் பேச்சுக் கொண்ட உணர்வுபூர்வமான தீவிரமான மனிதன் வைரமாளிகை. பினாட்டு, கூழ், சிவப்புக் குத்தரிசியின் பெருமை பேசி முருங்கைக்காய் கறியோடு தன் தாயிடம் சோறு தின்ற கதை, சனிக்கிழமை உடம்புக்கு எண்ணை தேய்த்து சீயக்காய் அரப்பு வைத்து குளிக்கும் அவசியம் என்பதெல்லாம் யாரும் கேளாமலே அவரின் விபரிப்புகளில் இடம் பிடிக்கும். நல்லூர் கொடியேறி விட்டது சன்னிதியானின் திருவிழா பாசையூர் அந்தோனியார் திருவிழா சென் பற்றிக்ஸ் பெரிய கோயில் கொண்டாட்டம் எல்லாம் அவரிடம் செய்தியாக மக்களுக்கு வரும்.</p><p><br /></p><p>அவரின் சொந்த இடம் மானிப்பாய். குடும்பம் எதுவும் கிடையாது. கொஞ்சக்காலம் மறியலிலும் இருந்தவர் என்று சனங்கள் அவரைப்பற்றி பேசிக் கொண்டார்கள். அவருக்கு வைர மாளிகை நகைக்கடையிலிருந்து விளம்பரம் செய்வதற்கு கூலியாக மாதம் 60 ரூபாவும் புதுவருடம் தீபாவளி விசேடங்களுக்கு கொஞ்சக் காசும் கிடைத்து வந்தது. அவர் பகல் பொழுதில் கிடைத்ததைச் சாப்பிட்டு பழைய மாக்கற்றுக்கு அருகில் உள்ள ஒரு கடையில் தானே வாங்கி வைத்திருக்கும் தேயிலை, பால்ரின்னைக் கொண்டு பால் தேத்தண்ணி போட்டுக் குடிப்பார். இரவு படுக்க வைரமாளிகை நகைக்கடைக்குப் போவார். 1980களில் யாழ்ப்பாணம் மாறத் தொடங்கிவிட்டது. பலர் வெளிநாட்டுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். தொலைக்காட்சிகள் விளம்பர சேவைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. வைரமாளிகையின் தொடர்ச்சியாக யாழ் பஸ்நிலையத்தில் மணிக்குரல் விளம்பரச் சேவை தொடங்கிவிட்டது. போர் வந்தபோது வைரமாளிகையினால் பழைய தன் வாழ்வைத் தொடர முடியவில்லை. சுவிப் டிக்கற் பத்திரிகை விற்பனைகள் இல்லை. நகை வாங்குவோர் குறைந்ததுடன் நகைக்கடையான வைரமாளிகையின் ஆதரவும் நெருக்கடியாகிவிட்டது. அவர் 1987ம் ஆண்டில் இந்திய இராணுவத்திடம் உணவுப் பொருட்களை விலைக்கு சிறிய அளவில் வாங்கி விற்பனை செய்து தனது வயிற்றுப்பாட்டைத் தீர்த்துக் கொள்ள முயன்றார்</p><p><br /></p><p>வைரமாளிகை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத வெளிப்படையான மனிதன். அவரிடம் இரகசியங்கள் இருந்ததில்லை. மனிதர்களுடன் உறவாடி வாழ்ந்த மனிதன். வைரமாளிகை யாழ் பிரதேச மக்களின் விகடகவி. அவர்களின் தெனாலி ராமன். யாழ் பிரதேச மக்களின் நினைவுகளோடு கலந்தவன். யாழ்ப்பாண நகரின் உயிருள்ள பொது அடையாளங்களில் ஒருவன். யாழ் பஸ் நிலையமும் நூல் நிலையமும் திரும்பி விட்டன. ஆனால் வைரமாளிகையையோ உடைத்தெறியப்பட்ட யாழ்ப்பாண கோட்டையைப் போல என்றும் திரும்பாதவன்.</p>

Saturday 28 October 2023

                                               விழி மூடிய நீதி!

                                   ( சரித்திர நாடகம்)

                                                           காட்சி ஒன்று

மேடை எங்கும் இருள் பரவி நிற்கின்றது. மேடையின் நடுவே, மிக மிக முன் பாக ஒரு தூண் கம்பீர மாக நிற்கின்றது. அதன் மேலே ஒரு மண்டை யோடு தெரிகின்றது. அதன் மீது மட்டும் ஒலி பாய்ச்சப்படுள்ளது. பின் பக்கம் கறு ப்பு திரை உள்ளது. அரசதரப்பு வழக்குரைஞர் மேடையிலே தோன்றுகின்றார்

வழக்கறிஞர்: சபையோரே,சரித்திரம் பற்பல கொலைகளை  சந்தித்துள்

                           ளது. அந்த கொலைகளுக்கு நீதி விசாரணைகள் நடத்தப்

                              படவில்லை. அக்கொலைகள் யாவுமே நீதியின் கண்களு 

                             க்கு மறைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டையோடு கிறிஸ்து 

                            வாழ்ந்த காலத்திற்கு  உரியது என தடயவியல் சான்றுகள் 

                            சொல்கின்றது, அதுவும் சிரைச்சேதம் செய்யப்பட்ட 

                            கொலையாக இருக்கின்றது என தடய வல்லுணர்கள் எடு 

                           த்திரக்கின்றார்கள். அப்படி இயேசு காலத்தில் சிரைச்சேதம்

                           நடந்து உள்ளது என்றால் அது யோவான் என அழைக்கப்படு

                           கின்ற ஸ்நாபக அருளப்பரின் கொலையாகவே இருக்க 

                           முடியும், வாருங்கள் என்ன நடந்தது என்று பார்ப்போம்!

                           பார்ப்போம் என்று சொல்லிவிட்டு தூனையும், மண்டையோ

                           ட்டையும் எடுத்து செல்கின்றார். பின் பக்கம் உள்ள கறுப்பு 

                            திரை விலகுகின்றது)


                                                        காட்சி இரண்டு

 ஏரோது, ஏரோதியாள், மந்திரிகள் சபையில் வீற்றிருக்க, சலோமி ஆடலுடன் அரங்கத் தில் பிரவேசிக்கின்றாள். சலோமியின் நடனம், எபிரேய பாணியில் அமைவது நல்லது.

ஏரோது: அபாரம் அற்புதம் கலிலேயா தெசமெங்கும் இப்படிப்பட்ட ஒரு

                   நடனத்தை யாருமே கண்டுகளித்திருக்கமாட்டார்கள், நாட்டிய

                  நாடகபேரொளி, உலகம் போற்றும் நடன நர்த்தகி என் மகள்

                  சலோமையே உன் நாட்டிய விருந்துக்கு நான் ஒரு பரிசு தர 

                  வேண்டுமே! கேள் எதுவானாலும் கேள் தருகின்றேன்.

                                  (உடனே எரோதியள் எழுந்து)

ஏரோதியாள்: சலோமை, யோவானின் தலையை பரிசாக கேள்!

ஏரோது:  யோவான் தலையா? பரிசாகவா? ஏன் இந்த கொலைவெறி?

                     எதற்காக அவன் தலை உனக்கு?

ஏரோதியாள்: என் மணவாளரே! அந்த யோவான் ஒரு விச ஜந்து! உம்மை

                                யும் என்னையும் பற்றி அவதூறு பேசித்திரிகின்றான்,

                               அதுமட்டுமல்ல இயேசு என்ற புரட்சியாளனுக்கு ஸ்நானம்

                               கொடுத்து, வரப்போகின்ற யூத ராஜா இயேசு என நாடெ

                               ங்கும் பிரசங்கம் செய்கின்றான். இறை அரசை இந்த 

                               உலகத்தில் நிறுவவேண்டும் என துடிக்கின்றான். 

                              இவனை விட்டால் உமதுப்பதவிக்கே ஆபத்து, உடனே 

                              அவனை படுகொலை செய்யவேண்டும்!

ஏரோது:    என்ன இன்னுமொரு அரசு, உரோமை பேரரசுக்கு எதிராகவா?

                      அரச சதிப்புரட்சிக்கு யோவானும் இயேசுவும் தீட்டம் தீட்டுகின்

                      றார்களா? இத அப்படியே விட்டுவிடக்கூடாது, முளையிலேயே

                     கிள்ளி எறியவேண்டும், ஏரோதியாள் சொல்லவதே சரியானது!

                      எங்கே காவலா! யோவானின் தலையை சிரைச்சேதம் செய்து

                      அவன் தலையை பரிசாக சலோமைக்கு கொடு

                                                   (திரை மூடுகின்றது,)


காட்சி மூன்று

(மீண்டும் வழக்கறிஞர் மண்டையோட்டு தூணுடன் மேடையிலே, மிக மிக முன் பக்கமாக தோன்று கின்றார். பின் பக்கமாக கறுப்பு திரைச்சீலை தென்படுகின்றது. )

வழக்கறிஞன்: யோவானுக்கு என்ன நடந்தது என்று இப்போது எல்லோருக்

                             கும் தெரியும், இந்த கொலை பற்றி விசாரிக்கப்பட வேண்

                             டியவர்கள் ஏரோது அவன் மணைவி எரோதியாள், இந்த

                             குறுக்கு விசானையை தொடங்கு முன்பு, இந்த கொலை 

                             க்கு முக்கிய காரணம், யோவான் இயேசுவோடு இணை

                             ந்து இறை இராட்சியத்தை இவ்வுலகத்தில் அமைக்க முய 

                             ற்ச்சிக்கின்றார்கள் என்பதே! இந்த சந்தேகத்தின் அடிப் 

                             படையில், இயசுவை கொலை செய்வதற்கு பரிசேயர்கள், 

                             சதுசேயர்களின் சதித்திட்டம் பின்னணியாக இருக்கின்றது

                             என்பதே உண்மை! இயேசுவின் கொலை ஆய்வு செய்ய

                             ப்பட வேண்டும்.

( வழக்கறிஞன் மீண்டும் மண்டையோட்டு தூணை துக்கிக்கொண்டு மறை கின்றார், பின்பக்க உள்ள கறுப்பு திரை விலகுகின்றது, மேடையில் இடப் புறமாக இருந்து சில சிறுவர்கள் அரங்கத்தில் பிரவேசிக்கின்றார் கள். அவர்கள் கைகளில் ஒலிவ மரக்கிளைகள் இருக்கின்றன, ஓசானா தாவீ தின் குமரன் ஓசானா ஓசானா என்று சிறுவர்கள் பாட பின்னணி குழுவி னரும் சேர்ந்து குரல் கொடுக்க இயேசு வெள்ளை அங்கியோடு மேடைக்கு வந்து அப்படியே வலப்புறமாக மேடையை விட்டு விலகுகி ன்றார், மெல்லி தயாக, ஓசான்னா என்ற பாடல் இசை இசைத்துக் கொண்டே இருக்க வேண் டும். பின்பக்கமுள்ள கறுப்பு சீலை விலகுகின் றது,  மேடை இப்போது சியோன் ஆலையாமாக காட்சி அளிக்கின்றது. சதுசேயர்கள், பரிசேயர் கள் கூட்டமாக ஒரே தொனியில் ஜெகோவை கடவுளை  ஆராதிக்கின்றா ர்கள். ஆராதனை செபத்தை தலைமக்குரு ஆனாஸ் ஆரம்பிக்கின்றார்)

ஆனாஸ்: வானத்தையும் பூமியையும் சகல சிருஸ்டிகளையும் படைத்தளி  

                      த்த எமது தந்தையே உம்மை புகழ்கின்றோம். எங்கள் பிதாப்

                     பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்,யாக்கோபு, மோசே இவர்கள்

                     கடவுளான எமது தந்தையே உம்மை புகழ்கின்றோம், உமது 

                     தெரிந்து கொள்ளப்பட்ட இனமாக இஸ்ரவேலராகிய எம்மை

                     உமது பிள்ளைகாக தெரிந்தெடுத்தமைக்காக எமது தந்தையே

                     உம்மை புகழ்கின்றோம். 

பரி+ சதுசேயர்கள் எல்லோரும், எமது தந்தையே உம்மை  புகழ்கின்றோம். 

என்பதை மட்டும் உச்சரிக்கின்றார்கள், இப்பொழுது ஓசான்னா என்ற பாட லின் இசை சற்று பெரிதாக கேட்கின்றது.

ஆனாஸ்: ஓசான்னா என்ற வாழ்த்தொலி கேட்கின்றதே! என்ன அது?

 (என்று கேட்க பரிசேயரில் ஒருவன்)

பரிசேயன் 1: அதை என்னவென்று சொல்வது தலைமைக்குருவே! இயேசு

                             என்ற அந்த மந்திரக்காரன் பாஸ்கா பண்டிகையை 

                           கொண்டாட எமது புனித நகராம் ஜெருசலேமுக்கு வருகை

                           தந்துள்ளான். அவனை யூதர்களின் இராசாவே வருக வருக 

                           என வாழத்தி வரவவேற்பதாக கேள்விப்பட்டேன்.

ஆனாஸ்:  என்ன உளறுகின்றாய், யூதர்களின் இராசாவா? அப்படியா 

                    என்ற அவன் சொன்னான்.

பரிசேயன் 2: அதுமட்டுமல்ல குருவே, தான் கடவுளால் அனுப்பட்ட 

                          மெசியா என்று தன்னைத்தானே சொல்லித்திரிகின்றான்.

சதுசேயன் : ஆமாம் ஆமாம் அப்படித்தான் அவன் சொல்லித்திரிகின் 

                        றான். அதுமட்டுமா? தான் கடவுளின் மகன், ஒரே பேரான 

                        மகன் என்றும் பிதற்றுகின்றான்

ஆனாஸ்: கடவுளின் மகனா? அபச்சாரம அபச்சாரம்! இது தேவ தூசணம்!

                      இவன் தச்சன் மகன் யோசேப்பின் மகனல்லவா? இவன் தாய்

                      மரியாளும் தாவீது குலத்தவள் தானே! இவளது உறவுகளும் 

                      நமக்குள் இருக்கின்றார்களே! அப்படி இருக்க இறை மகன் 

                      என்று எப்படி அவன் சொல்லக்கூடும்? கேட்கவே காது 

                      கூசுகின்றது!

பரிசேயன்1: அதுமட்டுமா சொன்னான்! ஜெருசலேம் ஆலையத்தை இடித்

                            துவிடுங்கள், நான் மூன்று நாட்களுக்குள் கட்டி எழுப்பு 

                          வேன் என்று சொல்கின்றான்.

                                           (எல்லோரும் சிரிக்கின்றார்கள்)

ஆனாஸ்: என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சி இது! எம் பிதாப்பிதாக்

                     கள் இந்த ஆலையத்தைக்கட்டி முடிக்க பல்லாண்டுகள் முயற் 

                    ச்சித்தார்கள், இயேசு என்ற முட்டாள் மூன்று நாளில் முடிப்பா 

                    னாம்!

                                              (மீண்டும் எல்லோரும் சிரிக்கின்றார்கள்)

பரிசேயன் 2: அதுமட்டுமா சொன்னான், புனித நகரம் ஜெருசலேம், அதன்

                              ஆலயம், கோட்டை கொத்தளங்கள், அரண்மனை, இந்த

                             ஜெபக்கூடம் எல்லாம் இடித்து அழிக்கப்படும், கல்லின் 

                             மேல் கல் இராதபடி இடித்து அழிக்கப்படும், புதிய ஜெருச 

                         லேம், புதிய வானம் புதிய பூமி உருவாகப்படும் என எச்சரி 

                         க்கின்ரான் இயேசு!

சதுசேயன்: ஆமாம் நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன், உரோமை

                          இராச்சியம், யூத இராட்சியம் இவைகளை அழித்து, இறை

                          அரசை தன் தலமையில் அமைப்பதுவே அவன் திட்டம்!

பரிசேயன் 1: இந்த மாயக்காரன் இயேசு, பேயேல்ஸேபு என்ற பேய்களின் 

                             தலைமைப்பேயின் உதவியால், குருடர்களுக்கு பார்வை

                            அளிக்கின்றான், முடவர்களை நடக்கவைக்கின்றான்

பரிசேயன் 2: தொழு நோயாளர்களை தொட்டுக் குணமாக்கின்றான்,

                          இறந்தவர்களை உயிரோடு எழுப்புகின்றான். தனது மந்திர

                          தந்திரத்தால் மாயங்கள் செய்து, அதனை புதுமை என நம்

                          பவைத்து மக்களை புரட்சிக்கு வழிவகுக்கின்றான். இவனை

                          ஆதரித்து பேசிய பரபாஸும் இப்போது சிறையில் இருக்கி

                          ன்றான்.

சதுசேயன்: மக்களின் ஆதரவை அவன் திரட்டுவதும் உண்மையே!  இயேசு

                           சொல்வதையும், அவன் செய்வதையும் ஒருங்கிணைத்து

                          பார்த்தால் யூதர்களின் இராசா நான் தான் என்று சொல்லா 

                          மல் சொல்கின்றன்

பரிசேயன் 1: இப்படியே இந்த பைத்தியக்கார இயேசு உளறித்திரிந்தால்,

                          அதன் விளைவு என்னவாகும் தெரியுமா?

பரிசேயன் 2: யூத இராணுவம் ஜெருசலேமை ஆக்கிரமிக்கும், மக்களை

                          வாட்டி வதைக்கும்

பரிசேயன் 1: நாம் மீண்டும் நாடறவர்களாக, நாடோடிகளாக பாலைவனத்

                             தில் அலையவேன்டியது தான்!

பரி1+பரி2: ஆம் நாம் மீண்டும் பாலைவனத்தில் நாடறவர்களாக அலைய

                      வேண்டியதுதான்.

( எல்லோரும் ஒருமிக்க குரல் கொடுக்க, அங்கே கூச்சலும் குழப்பு உண்டா கின்றது)

ஆனாஸ் : அமைதி அமைதி சற்று பொறுமைகாருங்கள், இது பற்றி நான்

                    தமைக்குரு கயாபாவிடம் கலந்து பேசி முடிவெடுப்போம், அதற்

                    முன்னர் இயேசுவை அழைத்து அவனை கண்டித்து திருத்த

                    பார்க்கலாம், அல்லது நம் பக்கம் வளைக்கப்பார்க்கலாம்

                    என்ன சொல்கின்றிர்கள் சதுசேயரே!

சதுசேயர்: ஆமாம் அதுவும் சிறந்த யோசனைதான், இது பற்றி நான் முன்

                    னமே நினைத்ததுண்டு, ஆனால் அது இலேசான காரியமல்ல, 

                    இயேசுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டு.

                    கூடவே அவனது சீடர்களும் எப்போதும் புடை சூழ்ந்தவண்னம்

                    உள்ளார்கள். அவனை யாரும் அறிய வண்ணம் படை வீரர்

                    களை கொண்டு கைது செய்து அழைத்து வந்து, எச்சரித்தால்

                    அவன் அடங்கிவிடுவான்

பரிசேயன்1 : அவனை தனியாக கைது செய்வது இயலாத காரியம், கூட் 

                          டம் அவன் பின்னால் அலைமோதுகின்றது.

சதுசேயர் : கொஞ்சம் பொறுங்கள், நான் திட்டம் வகுத்துள்ளேன், இயேசு

                      வின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் ஸ்கரியோத்திடம் இரக

                      சியமாக தொடர்பு கொண்டு,  இயேசு தனிமையாக இருக்கும்

                      இரவு நேரம் எது? எந்த இடம் என்பதை தெரிவிக்க சொல்லி

                      இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் உடண்பட்டால் அவனை

                      இங்கே அழைக்கின்றேன்.

( எல்லோரும் தலையாட்டி ஆமோதிக்கின்றார்கள், சதுசேயன் ஆலையக் காவலாளியை அழைத்து, யூதாசை வரவழைக்கச்சொல்கின்றான்)

சதுசேயன்: யூதாஸ் ஜெருசலேமில் தான் இருக்கின்றான், இன்னும் சொற்ப

                       வினாடிக்குள் வந்துவிடுவான்.

(யூதாஸ் சபைக்கு வருகின்றான்)

சதுசேயன் : வருக வருக ஸ்காரியோத்! உன் வருகைக்காகவே நாங்கள் 

                       காத்திருந்தோம். நான் கேட்டதின் பிரகாரம் யேசு தனிமை

                       யாக இருக்கும் இடம், அவரை அழைத்துவரும், நேரம், காலம்

                       வசதியான சந்தர்ப்பம் இவைகளை சொல்வாயா ஸ்கரி 

                       யோத்! உனக்கு முப்பது வெள்ளிக்காசுகள் தருகின்றோம்

யூதாஸ்:        வசதியான சந்தர்ப்பம்,,,,,,,, முப்பது வெள்ளிக்காசுகள் ,,,,,,

                      நீங்கள் சொல்வதையும், செய்வதையும் பார்த்தால்,  ஏதோ ஒரு

                      உள்நோக்கம் இருப்பதாக தெரிகின்றதே!

சதுசேயன்: இல்லை இல்லை நீ நினைப்பது போல எந்த தீய உள்நோக்கம்,

                       எம்மிடம் இல்லை. இயேசுவின் செல்வாக்கும், அவரது புகழும்

                        யூத தேசம், கலிலியாதேசம் எங்கும் பரவி நிற்கின்றது,  அதி 

                       லும் சிறப்பாக இறை இராச்சியம் அமைக்கும் நோக்கமும்,

                       அவருக்கு இருக்கின்றது அல்லவா!

யூதாஸ்:      நீங்கள் சொல்வதும் சரிதான், இறை அரசை, பரலோக இராச்சி

                      யத்தை அறிவிப்பதே அவரின் போதனையின் நோக்கம்.

சதுசேயன் : ஆமாம் அதினால் தான், அவர் அமைக்க இருக்கும் இராச்சிய

                        பரிபாலனத்தில் நாங்களும் பங்கு கொள்ள சந்தர்ப்பம் கிடை

                        க்குமா? என்பதை இயேசுவிடம் இரகசியமாக கேட்டு அறிவ

                        தற்கே அவரை தனியாக உரோமை இராணுவத்தை அனுப்பி

                        அவரை அழைத்துவர ஏற்பாடுகள் செய்கின்றோம். இது

                          குறி த்து உரோமை ஆளுணர் பிலாத்துவுக்கு சந்தேகம் வரக்

                          கூடாது அல்லவா! அதற்குத்தான் இந்த ஏற்பாடு!

யூதாஸ்:        அப்படியா இது சிறந்த யோசனை,நான் தான் சீடர்களின் கஜா

                       னாவுக்கு பொறுப்பாளன், பாஸ்கா பண்டிகை கொண்டாட்டம்

                         வேறு, கையில் பணம் ஏதும் இல்லை, இந்த முப்பது வெள்ளிக்

                          காசு துணையாக இருக்கும்!

( யூதாஸ் பணப்பை சதுசேயரிடம் இருந்து வாங்குகின்றான்)

பரிசேயன்1: இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது, உரோமை வீரர்களுக்கு 

                        இயேசு யார் என்று தெரியாது, ஒருவேளை ஆள் மாறி அழை

                        த்துவந்துவிட்டால்,,,,,,,,,,,?

யூதாஸ் :      அந்த பிரச்சனை உங்களுக்கு ஏன்? நான் யாரை முத்துமிடுகி

                         ன்றேனோ, அவர்தான் இயேசு என இராணுவ வீரர்களுக்கு

                         சொல்லிவிடுகின்றேன்.

சதுசேயன்: நீ ரெம்ப ரெம்ப புத்திசாலி ஸ்காரியோத்!

( பணப்பை வாங்கிக்கொண்டு யூதாஸ் செல்கின்றான்.  மற்றவர்கள் சந்

தோச அக்களிப்பில் மனமகிழ்கின்றார்கள், திரை மூடுகின்றது)


 

                              விழி மூடிய நீதி!
                                   ( சரித்திர நாடகம்)
                                                           காட்சி ஒன்று
மேடை எங்கும் இருள் பரவி நிற்கின்றது. மேடையின் நடுவே, மிக மிக முன் பாக ஒரு தூண் கம்பீர மாக நிற்கின்றது. அதன் மேலே ஒரு மண்டை யோடு தெரிகின்றது. அதன் மீது மட்டும் ஒலி பாய்ச்சப்படுள்ளது. பின் பக்கம் கறு ப்பு திரை உள்ளது. அரசதரப்பு வழக்குரைஞர் மேடையிலே தோன்றுகின்றார்
வழக்கறிஞர்: சபையோரே,சரித்திரம் பற்பல கொலைகளை 
 சந்தித்துள்

                              ளது. அந்த கொலைகளுக்கு நீதி விசாரணைகள் நடத்தப்
                              படவில்லை. அக்கொலைகள் யாவுமே நீதியின் கண்களுக்கு
                              மறைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டையோடு கிறிஸ்து வாழ்
                              ந்த காலத்திற்கு  உரியது என தடயவியல் சான்றுகள் சொல்
                              கின்றது, அதுவும் சிரைச்சேதம் செய்யப்பட்ட கொலையாக
                              இருக்கின்றது என தடய வல்லுணர்கள் எடுத்திரக்கின்றா
                              ர்கள். அப்படி இயேசு காலத்தில் சிரைச்சேதம் நடந்து உள்ளது
                             என்றால் அது யோவான் என அழைக்கப்படுகின்ற ஸ்நாபக
                             அருளப்பரின் கொலையாகவே இருக்கமுடியும், வாருங்கள்
                             என்ன நடந்தது என்று பார்ப்போம்!
பார்ப்போம் என்று சொல்லிவிட்டு தூனையும், மண்டையோட்டையும் எடுத்து செல்கின்றார். பின் பக்கம் உள்ள கறுப்பு திரை விலகுகின்றது)
                                                        காட்சி இரண்டு
 ஏரோது, ஏரோதியாள், மந்திரிகள் சபையில் வீற்றிருக்க, சலோமி ஆடலுடன் அரங்கத் தில் பிரவேசிக்கின்றாள். சலோமியின் நடனம், எபிரேய பாணியில் அமைவது நல்லது.
ஏரோது: அபாரம் அற்புதம் கலிலேயா தெசமெங்கும் இப்படிப்பட்ட ஒரு
                   நடனத்தை யாருமே கண்டுகளித்திருக்கமாட்டார்கள், நாட்டிய
                  நாடகபேரொளி, உலகம் போற்றும் நடன நர்த்தகி என் மகள்
                  சலோமையே உன் நாட்டிய விருந்துக்கு நான் ஒரு பரிசு தரவேண்
                  டுமே! கேள் எதுவானாலும் கேள் தருகின்றேன்.
(உடனே எரோதியள் எழுந்து)
ஏரோதியாள்: சலோமை, யோவானின் தலையை பரிசாக கேள்!
ஏரோது:  யோவான் தலையா? பரிசாகவா? ஏன் இந்த கொலைவெறி?
                     எதற்காக அவன் தலை உனக்கு?
ஏரோதியாள்: என் மணவாளரே! அந்த யோவான் ஒரு விச ஜந்து! உம்மை
                                யும் என்னையும் பற்றி அவதூறு பேசித்திரிகின்றான்,
                               அதுமட்டுமல்ல இயேசு என்ற புரட்சியாளனுக்கு ஸ்நானம்
                               கொடுத்து, வரப்போகின்ற யூத ராஜா இயேசு என நாடெங்
                               கும் பிரசங்கம் செய்கின்றான். இறை அரசை இந்த உலகத்
                              தில் நிறுவவேண்டும் என துடிக்கின்றான். இவனை விட்டால்
                              உமதுப்பதவிக்கே ஆபத்து, உடனே அவனை படுகொலை
                              செய்யவேண்டும்!
ஏரோது:    என்ன இன்னுமொரு அரசு, உரோமை பேரரசுக்கு எதிராகவா?
                      அரச சதிப்புரட்சிக்கு யோவானும் இயேசுவும் தீட்டம் தீட்டுகின்
                      றார்களா? இத அப்படியே விட்டுவிடக்கூடாது, முளையிலேயே
                     கிள்ளி எறியவேண்டும், ஏரோதியாள் சொல்லவதே சரியானது!
                      எங்கே காவலா! யோவானின் தலையை சிரைச்சேதம் செய்து
                      அவன் தலையை பரிசாக சலோமைக்கு கொடு
(திரை மூடுகின்றது,)
                                                            காட்சி மூன்று
(மீண்டும் வழக்கறிஞர் மண்டையோட்டு தூணுடன் மேடையிலே, மிக மிக முன் பக்கமாக தோன்று கின்றார். பின் பக்கமாக கறுப்பு திரைச்சீலை தென்படுகின்றது. )
வழக்கறிஞன்: யோவானுக்கு என்ன நடந்தது என்று இப்போது எல்லோருக்
                                  கும் தெரியும், இந்த கொலை பற்றி விசாரிக்கப்பட வேண்டி
                                  யவர்கள் ஏரோது அவன் மணைவி எரோதியாள், இந்த
                                  குறுக்கு விசானையை தொடங்கு முன்பு, இந்த கொலைக்கு
                                  முக்கிய காரணம், யோவான் இயேசுவோடு இணைந்து
                                  இறை இராட்சியத்தை இவ்வுலகத்தில் அமைக்க முயற்ச்சி
                                  க்கின்றார்கள் என்பதே! இந்த சந்தேகத்தின் அடிப்படை
                                  யில், இயசுவை கொலை செய்வதற்கு பரிசேயர்கள், சதுசே
                                 யர்களின் சதித்திட்டம் பின்னணியாக இருக்கின்றது
                                 என்பதே உண்மை! இயேசுவின் கொலை ஆய்வு செய்யப்பட
                                 வேண்டும்.
( வழக்கறிஞன் மீண்டும் மண்டையோட்டு தூணை துக்கிக்கொண்டு மறை கின்றார், பின்பக்க உள்ள கறுப்பு திரை விலகுகின்றது, மேடையில் இடப் புறமாக இருந்து சில சிறுவர்கள் அரங்கத்தில் பிரவேசிக்கின்றார்கள். அவர்கள் கைகளில் ஒலிவ மரக்கிளைகள் இருக்கின்றன, ஓசானா தாவீ தின் குமரன் ஓசானா ஓசானா என்று சிறுவர்கள் பாட பின்னணி குழுவி னரும் சேர்ந்து குரல் கொடுக்க இயேசு வெள்ளை அங்கியோடு மேடைக்கு வந்து அப்படியே வலப்புறமாக மேடையை விட்டு விலகுகின்றார், மெல்லி தயாக, ஓசான்னா என்ற பாடல் இசை இசைத்துக்கொண்டே இருக்க வேண் டும். பின்பக்கமுள்ள கறுப்பு சீலை விலகுகின்றது,  மேடை இப்போது
சியோன் ஆலையாமாக காட்சி அளிக்கின்றது. சதுசேயர்கள், பரிசேயர் கள் கூட்டமாக ஒரே தொனியில் ஜெகோவை கடவுளை  ஆராதிக்கின்றா ர்கள். ஆராதனை செபத்தை தலைமக்குரு ஆனாஸ் ஆரம்பிக்கின்றார்)
ஆனாஸ்: வானத்தையும் பூமியையும் சகல சிருஸ்டிகளையும் படைத்தளி  
                      த்த எமது தந்தையே உம்மை புகழ்கின்றோம். எங்கள் பிதாப்
                     பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்,யாக்கோபு, மோசே இவர்கள்
                     கடவுளான எமது தந்தையே உம்மை புகழ்கின்றோம், உமது தெரி
                     ந்து கொள்ளப்பட்ட இனமாக இஸ்ரவேலராகிய எம்மை உமது
                      பிள்ளைகாக தெரிந்தெடுத்தமைக்காக எமது தந்தையே உம்மை
                     புகழ்கின்றோம். 
பரி+ சதுசேயர்கள் எல்லோரும், எமது தந்தையே உம்மை  புகழ்கின்றோம். 
என்பதை மட்டும் உச்சரிக்கின்றார்கள், இப்பொழுது ஓசான்னா என்ற பாட லின் இசை சற்று பெரிதாக கேட்கின்றது.
ஆனாஸ்: ஓசான்னா என்ற வாழ்த்தொலி கேட்கின்றதே! என்ன அது?
 (என்று கேட்க பரிசேயரில் ஒருவன்)
பரிசேயன் 1: அதை என்னவென்று சொல்வது தலைமைக்குருவே! இயேசு
                             என்ற அந்த மந்திரக்காரன் பாஸ்கா பண்டிகையை கொண்
                            டாட எமது புனித நகராம் ஜெருசலேமுக்கு வருகை தந்துள்
                            ளான். அவனை யூதர்களின் இராசாவே வருக வருக என வாழ்
                            த்தி வரவவேற்பதாக கேள்விப்பட்டேன்.
ஆனாஸ்:  என்ன உளறுகின்றாய், யூதர்களின் இராசாவா? அப்படியா என்று
                       அவன் சொன்னான்.
பரிசேயன் 2: அதுமட்டுமல்ல குருவே, தான் கடவுளால் அனுப்பட்ட மெசியா 
                              என்று தன்னைத்தானே சொல்லித்திரிகின்றான்.
சதுசேயன் : ஆமாம் ஆமாம் அப்படித்தான் அவன் சொல்லித்திரிகின்றான்.
                            அதுமட்டுமா? தான் கடவுளின் மகன், ஒரே பேரான மகன்
                           என்றும் பிதற்றுகின்றான்
ஆனாஸ்: கடவுளின் மகனா? அபச்சாரம அபச்சாரம்! இது தேவ தூசணம்!
                      இவன் தச்சன் மகன் யோசேப்பின் மகனல்லவா? இவன் தாய்
                      மரியாளும் தாவீது குலத்தவள் தானே! இவளது உறவுகளும் நம
                      க்குள் இருக்கின்றார்களே! அப்படி இருக்க இறை மகன் என்று 
                      எப்படி அவன் சொல்லக்கூடும்? கேட்கவே காது கூசுகின்றது!
பரிசேயன்1: அதுமட்டுமா சொன்னான்! ஜெருசலேம் ஆலையத்தை இடித்
                            துவிடுங்கள், நான் மூன்று நாட்களுக்குள் கட்டி எழுப்புவேன்
                            என்று சொல்கின்றான்.
                                           (எல்லோரும் சிரிக்கின்றார்கள்)
ஆனாஸ்: என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சி இது! எம் பிதாப்பிதாக்
                     கள் இந்த ஆலையத்தைக்கட்டி முடிக்க பல்லாண்டுகள் முயற்ச்சி
                     த்தார்கள், இயேசு என்ற முட்டாள் மூன்று நாளில் முடிப்பானாம்!
                                              (மீண்டும் எல்லோரும் சிரிக்கின்றார்கள்)
பரிசேயன் 2: அதுமட்டுமா சொன்னான், புனித நகரம் ஜெருசலேம், அதன்
                              ஆலயம், கோட்டை கொத்தளங்கள், அரண்மனை, இந்த
                             ஜெபக்கூடம் எல்லாம் இடித்து அழிக்கப்படும், கல்லின் மேல்
                             கல் இராதபடி இடித்து அழிக்கப்படும், புதிய ஜெருசலேம்,
                             புதிய வானம் புதிய பூமி உருவாகப்படும் என எச்சரிக்கின்
                             ரான் இயேசு!
சதுசேயன்: ஆமாம் நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன், உரோமை
                          இராச்சியம், யூத இராட்சியம் இவைகளை அழித்து, இறை
                          அரசை தன் தலமையில் அமைப்பதுவே அவன் திட்டம்!
பரிசேயன் 1: இந்த மாயக்காரன் இயேசு, பேயேல்ஸேபு என்ற பேய்களின் 
                             தலைமைப்பேயின் உதவியால், குருடர்களுக்கு பார்வை
                            அளிக்கின்றான், முடவர்களை நடக்கவைக்கின்றான்
பரிசேயன் 2: தொழு நோயாளர்களை தொட்டுக் குணமாக்கின்றான்,
                              இறந்தவர்களை உயிரோடு எழுப்புகின்றான். தனது மந்திர
                              தந்திரத்தால் மாயங்கள் செய்து, அதனை புதுமை என நம்
                              பவைத்து மக்களை புரட்சிக்கு வழிவகுக்கின்றான். இவனை
                             ஆதரித்து பேசிய பரபாஸும் இப்போது சிறையில் இருக்கி
                             ன்றான்.
சதுசேயன்: மக்களின் ஆதரவை அவன் திரட்டுவதும் உண்மையே!  இயேசு
                           சொல்வதையும், அவன் செய்வதையும் ஒருங்கிணைத்து பார்
                           த்தால் யூதர்களின் இராசா நான் தான் என்று சொல்லாமல் 
                           சொல்கின்றன்
பரிசேயன் 1: இப்படியே இந்த பைத்தியக்கார இயேசு உளறித்திரிந்தால்,
                               அதன் விளைவு என்னவாகும் தெரியுமா?
பரிசேயன் 2: யூத இராணுவம் ஜெருசலேமை ஆக்கிரமிக்கும், மக்களை
                            வாட்டி வதைக்கும்
பரிசேயன் 1: நாம் மீண்டும் நாடறவர்களாக, நாடோடிகளாக பாலைவனத்
                             தில் அலையவேன்டியது தான்!
பரி1+பரி2: ஆம் நாம் மீண்டும் பாலைவனத்தில் நாடறவர்களாக அலைய
                         வேண்டியதுதான்.
( எல்லோரும் ஒருமிக்க குரல் கொடுக்க, அங்கே கூச்சலும் குழப்பு உண்டா கின்றது)
ஆனாஸ் : அமைதி அமைதி சற்று பொறுமைகாருங்கள், இது பற்றி நான்
                       தமைக்குரு கயாபாவிடம் கலந்து பேசி முடிவெடுப்போம், அதற்
                       முன்னர் இயேசுவை அழைத்து அவனை கண்டித்து திருத்த
                        பார்க்கலாம், அல்லது நம் பக்கம் வளைக்கப்பார்க்கலாம்
                       என்ன சொல்கின்றிர்கள் சதுசேயரே!
சதுசேயர்: ஆமாம் அதுவும் சிறந்த யோசனைதான், இது பற்றி நான்
                         முன்னமே நினைத்ததுண்டு, ஆனால் அது இலேசான காரிய
                         மல்ல, இயேசுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டு.
                         கூடவே அவனது சீடர்களும் எப்போதும் புடை சூழ்ந்தவண்னம்
                         உள்ளார்கள். அவனை யாரும் அறிய வண்ணம் படை வீரர்
                        களை கொண்டு கைது செய்து அழைத்து வந்து, எச்சரித்தால்
                        அவன் அடங்கிவிடுவான்
பரிசேயன்1 : அவனை தனியாக கைது செய்வது இயலாத காரியம், கூட்டம்
                             அவன் பின்னால் அலைமோதுகின்றது.
சதுசேயர் : கொஞ்சம் பொறுங்கள், நான் திட்டம் வகுத்துள்ளேன், இயேசு
                         வின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் ஸ்கரியோத்திடம் இரக
                          சியமாக தொடர்பு கொண்டு,  இயேசு தனிமையாக இருக்கும்
                         இரவு நேரம் எது? எந்த இடம் என்பதை தெரிவிக்க சொல்லி
                         இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் உடண்பட்டால் அவனை
                         இங்கே அழைக்கின்றேன்.
( எல்லோரும் தலையாட்டி ஆமோதிக்கின்றார்கள், சதுசேயன் ஆலையக் காவலாளியை அழைத்து, யூதாசை வரவழைக்கச்சொல்கின்றான்)
சதுசேயன்: யூதாஸ் ஜெருசலேமில் தான் இருக்கின்றான், இன்னும் சொற்ப
                           வினாடிக்குள் வந்துவிடுவான்.
(யூதாஸ் சபைக்கு வருகின்றான்)
சதுசேயன் : வருக வருக ஸ்காரியோத்! உன் வருகைக்காகவே நாங்கள் 
                            காத்திருந்தோம். நான் கேட்டதின் பிரகாரம் யேசு தனிமை
                            யாக இருக்கும் இடம், அவரை அழைத்துவரும், நேரம், காலம்
                           வசதியான சந்தர்ப்பம் இவைகளை சொல்வாயா ஸ்கரியோத்!
                           உனக்கு முப்பது வெள்ளிக்காசுகள் தருகின்றோம்
யூதாஸ்:        வசதியான சந்தர்ப்பம்,,,,,,,, முப்பது வெள்ளிக்காசுகள் ,,,,,,
                          நீங்கள் சொல்வதையும், செய்வதையும் பார்த்தால்,  ஏதோ ஒரு
                          உள்நோக்கம் இருப்பதாக தெரிகின்றதே!
சதுசேயன்: இல்லை இல்லை நீ நினைப்பது போல எந்த தீய உள்நோக்கம்,
                           எம்மிடம் இல்லை. இயேசுவின் செல்வாக்கும், அவரது புகழும்
                           யூத தேசம், கலிலியாதேசம் எங்கும் பரவி நிற்கின்றது,  அதி 
                           லும் சிறப்பாக இறை இராச்சியம் அமைக்கும் நோக்கமும்,
                           அவருக்கு இருக்கின்றது அல்லவா!
யூதாஸ்:        நீங்கள் சொல்வதும் சரிதான், இறை அரசை, பரலோக இராச்சி
                          யத்தை அறிவிப்பதே அவரின் போதனையின் நோக்கம்.
சதுசேயன் : ஆமாம் அதினால் தான், அவர் அமைக்க இருக்கும் இராச்சிய
                           பரிபாலனத்தில் நாங்களும் பங்கு கொள்ள சந்தர்ப்பம் கிடை
                            க்குமா? என்பதை இயேசுவிடம் இரகசியமாக கேட்டு அறிவ
                           தற்கே அவரை தனியாக உரோமை இராணுவத்தை அனுப்பி
                           அவரை அழைத்துவர ஏற்பாடுகள் செய்கின்றோம். இது
                          குறி த்து உரோமை ஆளுணர் பிலாத்துவுக்கு சந்தேகம் வரக்
                          கூடாது அல்லவா! அதற்குத்தான் இந்த ஏற்பாடு!
யூதாஸ்:        அப்படியா இது சிறந்த யோசனை,நான் தான் சீடர்களின் கஜா
                          னாவுக்கு பொறுப்பாளன், பாஸ்கா பண்டிகை கொண்டாட்டம்
                         வேறு, கையில் பணம் ஏதும் இல்லை, இந்த முப்பது வெள்ளிக்
                          காசு துணையாக இருக்கும்!
( யூதாஸ் பணப்பை சதுசேயரிடம் இருந்து வாங்குகின்றான்)
பரிசேயன்1: இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது, உரோமை வீரர்களுக்கு 
                             இயேசு யார் என்று தெரியாது, ஒருவேளை ஆள் மாறி அழை
                              த்துவந்துவிட்டால்,,,,,,,,,,,?
யூதாஸ் :      அந்த பிரச்சனை உங்களுக்கு ஏன்? நான் யாரை முத்துமிடுகி
                         ன்றேனோ, அவர்தான் இயேசு என இராணுவ வீரர்களுக்கு
                         சொல்லிவிடுகின்றேன்.
சதுசேயன்: நீ ரெம்ப ரெம்ப புத்திசாலி ஸ்காரியோத்!
( பணப்பை வாங்கிக்கொண்டு யூதாஸ் செல்கின்றான்.  மற்றவர்கள் சந்
தோச அக்களிப்பில் மனமகிழ்கின்றார்கள், திரை மூடுகின்றது)
                                                            காட்சி நான்கு
(திரை விலகுகின்றது, அங்கே கெத்சமனே தோட்டம் தெரிகின்றது
அப்போஸ்தலர்கள் அயர்ந்த தூக்கம், இயேசு மட்டும் விழித்திரு ந்து செபிக்கின்றார். அப்போது படை வீரர்களோடு யூதாஸ் வருகின்றான்)
இயேசு :  இனி நீங்கள் நித்திரை கொண்டு இளைப்பாறுங்கள். 
                    இதோ மனுமகன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொ
                    டுக்கும் வேளை வந்தது, என்னைக்காட்டிக்கொடுக்கின்
                    றவன் இதோ வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம்.
(யூதாஸ் இயேசுவிடம் வந்து,  ராபி என முத்தம் கொடுக்கின்றான்)
இயேசு:   நண்பனே என்னை முத்தம் இட்டு காட்டிகொடுக்கி
                   ன்றாயா? 
என்கின்றார்.  இராணுவ வீரர்கள் இயேசுவின் மீது கைவைத்து அவரை கட்டுவதற்கு எத்தனிக்கின்றார்கள். இந்த கலவரத்தில் இயேசுவின் சீடன் ஒருவன் பட்டயத்தை உருவி படை வீரனின் கதை வெட்டுகின்றார்.)
இயேசு: பட்டயத்தை உறையினுள் போடு, பட்டயத்தை எடுக்கின்
                  றவன் பட்டயத்தாலே மடிவான். நான் இப்பொழுது என்
                  பிதாவினிடத்தில் வேண்டிக்கொண்டால் அவர் பனிரெ
                 ண்டு லேகியோனுக்கு  அதிகமான துதர்களை அனுப்பமா
                 ட்டாரோ என நினைக்கின்றாயா? அப்படி நான் செய்தால்
                இவ்விதமாய் நிகழவேண்டும் என்கின்ற சம்பவம் எப்படி
                நிகழக்கூடும்? 
                                               ( இயேசு படைகளை பார்த்து)
இயேசு: கள்ளனை பிடிக்க புறப்பட்டது போல, நீங்கள் பட்டயங்க
                  ளோடும் தடிகளோடும் என்னை பிடிக்கவந்தீர்கள். நான்
                  தினம் தோறும், ஆலையத்தில் உங்கள் நடுவேஉட்கார்ந்து 
                   போதகம் செய்தேனே, அப்போது என்னை பிடிக்கவி
                 ல்லையே, ஆகிலும் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் படி
                 இப்படி நடக்கின்றது.  
இயேசுவை பிடித்து இழுத்து செல்கின்றார்கள், யூதாஸ் மற்றும் சீடர்கள் அங்கிருந்து ஓடிப்போகின்றார்கள் திரை மூடுகின்றது)
                                                     காட்சி ஐந்து
(மூப்பர்களின் மண்டபம், பரிசேயர் சதுசேயர் பிரதான ஆசாரி யான் காய்பா எல்லோரும் இருக்கின்றார்கள். இயேசுவை அங்கே இழுத்து வருகின்றார்கள்)
பரிசேயன்1: இவன் ஜெருசலேம் தேவாலையத்தை இடித்துவிடு
                             ங்கள், மூன்று நாளில் அதனை கட்டி எழுப்புவேன்
                            என்கின்றான்.
பரிசேயன் 2: இவன் தானே மெய்யான தேவ குமாரன் என்று
                              தேவதூசனம் சொகின்றான், இறைவனை தனக்கு
                              சமமாக எண்ணுகின்றான். அதனை மக்கள் நம்பும்
                              படியா போதிக்கின்றான்
சதுசேயன்: நமது யூத மதவழக்கத்தை புறக்கணிக்கும்படியும்,
                          மோசே நமக்களித்த சட்டங்களும் செல்லுபடியாகது
                           என்கின்றான்
பரிசேயன் 1: நம்மைவிட புறஜாதியினரே மீட்படைவர் என்று எமது 
                             இனத்தை காட்டிக்கொடுக்கின்றான். இவன் ஒரு இன
                             த்துரோகி!
பரிசேயன் 2: இஸ்ரவேலர்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட
                            வில்லை, மாறக இஸ்ரவேலர்களை சிதறடிப்பார் என 
                            சாபம்வேறு விடுகின்றான்.
சதுசேயன்: இவன் நமது யூத வழக்கத்தின்படி கொலை செய்ய
                           ப்பட வேண்டும்
கொலை செய்யப்பட வேண்டும் என சதுசேயன் சொன்னவுடன் 
அந்த வசனத்தை எல்லோரும் பலத்த சத்தமாக உச்சரிக்கின்றனர்)
பிரதான ஆசாரி: இவர்கள் எல்லோரும் உனக்கு விரோதமாக 
                                      சாட்சி சொல்வதை குறித்து ஏன் நீ பேசாமல்
                                     இருக்கின்றாய்?
இயேசு அமைதியாக இருக்கின்றார், பிரதான ஆசாரி 
பிரதான ஆசாரி: நீ எங்கள் தேவனுடைய குமாரன் தானா? அதை நீ
                           சொல்லும் படி ஜீவனுள்ள தேவன் பேரில் ஆணை
                          யிட்டு கேட்கிறேன்.
இயேசு: நீர் சொன்னபடி தான், அன்றியும் மனுச குமாரன், சர்வ 
                 வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும்,
                 வானத்து மேகங்கள் மீது வருவதையும், இது முதல் காண்                      பீர்கள் என்று உங்களுக்கு சொல்கின்றேன்! 
இதனை கேட்டவுடன், பரிசேயரில் ஒருவன் தன் ஆடையை கிழித்துக்கொண்டு
பிரதான ஆசாரிஇவன் தேவதூசனம் சொன்னான், இனி நமக்கு
                                       சாட்சியங்கள் வேண்டியதென்ன? இதோ இவன்
                                      சொன்ன தேவதூசனத்தை இப்பொழுது கேட்டீர்
                                      களே! உங்களுக்கு என்னமாய்த்தோன்றுகின்றது
எல்லோரும்:             இவன் மரணத்துக்கு பாத்திரமாக இருக்கின்
                                       றான்! இவன் கொலை செய்யப்படவேண்டும்
                                        இவன் கொலை செய்யப்படவேண்டும்
(இவன் கொலை செய்யப்படவேண்டும், என்ற கோசம்  வலுக்கின் றது, பரிசேயர்கள், சதுசேயர்கள் எல்லோரும் ஒன்றாக பாய்ந்து, இயேசுவை காறி துப்புகின்றார்கள். ஒருவன் இயேசுவின் மேல்  ஒரு துணியை மூடி, அவரை அடிக்கின்றார்கள், தலையில் குட்டுகி ன்றார்கள்)
பரிசேயன்1: கிறிஸ்துவே உம்மை அடித்தவன் யார் என்று உமது
                            தீர்க்கதரிசனாத்தல் சொல்லும், உம்மை நாம் நாம்பு
                            கின்றோம்.
பரிசேயன் 2: இந்த தேவதூசனக்காரனை சிலுவையிலே அறைந்து
                            கொல்லுவதற்கு, உத்தரவு பெற, இவனை ஆளுனர்
                            பிலாத்துவிடம் அழைத்து செல்லவேண்டும்.
பரிசேயன்2: இவன் மீது உள்ள குற்றங்கள் கணக்கில் அடங்காது,
                             ஜெருசலேம் ஆலையத்தை இவன் இடிக்கப்பார்த்
                            தான், ஆலையத்தை இடித்துவிடுங்கள் அதை நான்
                            மூன்றே நாளில் கட்டி எழுப்புவேன் என சவால் விடுகி
                           ன்றான். எங்கள் பிதாப்பிதாங்கள் கட்டிய கோவிலை
                            இடிப்பதற்கு இவன் யார்?
பரிசேயன் 3: அதுமட்டுமா இவன் சொன்னான். தான் மெய்யான
                              தேவனாகிய ஆண்டவரின் மகன், என்றும் இறை         
                              சாம்ராட்சியத்தை தோற்றுவிக்க வந்த இறை தூதன்
                              மெசியா என்னும் மீட்பர் என்கின்றார்.
எல்லோரும்:  ஆமாம் இவனை சிலுவையிலே அறையும், அதிகா
                             ரம் பிலாத்துவிடமே உண்டு, எனவே இவனை ஆளு
                             ணர் பிலாத்துவிடம் கொண்டுபோகவேண்டும்.
( இயேசுவை எல்லோரும் பிலாத்துவின் அரன்மணைக்கு இழுத்துச்சென்றார்கள். திரை மூடுகின்றது)
                                                    காட்சி ஆறு
                        (பிலாத்துவின் அரன்மனை காட்சி)
( இயேசுவை கொல்லவேண்டும், இயேசுவை கொல்லவேண்டும், என்ற கோசத்தோடு, இயேசுவை கட்டி இழுத்துக்கொண்டு, பரி சேயர் கும்பல் பிலாத்து முன் தோன்றுகின்றனர்)
பிலாத்து: இந்த மனிதன் யார்? எதற்காக இவனை என்னிடம்
                     அழைத்து வந்தீர்கள்? இவன் செய்த குற்றம் என்ன?
பரிசேயன் 1: இவன் குற்றமற்றவாராக இருந்திருந்தால் நாங்கள்
                             இவனை உம்மிடம் கொண்டுவந்திருக்கமாட்டோம்.
பரிசேயன் 2: மெசியாவாம், மீட்பராம் அது மட்டுமல்ல , தான் யூத
                              ராஜா என்று உரிமை கொண்டாடுகின்றான்
பரிசேயன் 1: இவன் கலிலேயா தேசம் எங்கும் சுற்றித்திரிந்து 
                              மாயங்கள் செய்து மக்களை தன் பக்கம் சேர்க்கின்
                              றான். புரட்ச்சிக்கு வித்திடுகின்றான். உரோமை
                             இராச்சியத்துக்கு எதிராக செயல்படுகின்றான்.
பிலாத்து:      இவன் கலிலேயா நாட்டவனா? அப்படியானால் 
                           கலிலேயா ஆளூனர் ஏரோது ஜெருசலேம் வந்துள்ளார்
                            இயேசுவை ஏரோதுவிடம் அனுப்புகின்றேன் அவரும்
                            இவரை விசாரிக்கட்டும்!
( திரை விலகுகின்றது. இப்போது இயேசு எரோது முன்னிலையில் தோன்றுகின்றார்)
ஏரோது: வருக வருக யேசுவே! உம்மைக்குறித்து நான் அனேகம்
                    கேள்விப்பட்டேன். உம்மை காணவேண்டும் என ஆசைப்
                    பட்டேன். பிலாத்துவுக்கும் எனக்கும் ஆகாது, ஆயினும்
                    உன்னை என்னிடம் அனுப்பினான். இன்றுமுதல் நாம்
                     இருவரும் நண்பர்களானோம். நல்ல காரியம் உன்னால்
                     நடந்துள்ளது. பிலாத்து உன்னை என்னிடம் அனுப்பும்
                     அளவுக்கு நீ என்ன காரியம் செய்தாய் சொல்!
( இயேசு பதில் ஏதும் கூறாமல் மெளனம் காக்கின்றார்)
பரிசேயன் 3: இவன் பதில் சொல்லமாட்டான்! இறுமாப்புகாரன்.
                             நான் சொல்கின்றேன். இவன் ஜெருசலேம் ஆலையத்
                             இடித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்றான்.
பரிசேயன் 2: தன்னை மெசியா, தேவனின் ஏக குமாரன் என 
                              சொல்லித்திரிகின்றான், அதை நம்பும் படி மாயம்
                              செய்து புதுமை என்கின்றான்.
ஏரோது:  ஆமாம் இவன் நிறைய அற்புதங்கள் செய்வதாக அறிந்
                    தேன். இயேசுவே நீ எனக்கு அற்புதம் ஒன்று செய்வாயா?
                    உன்னை நான் கடவுளின் மகன் என்று ஏற்றுக்கொண்டு
                     உனக்கு சிபார்சு பண்ணுகின்றேன்.
                    ( இயேசுவின் எள்னம் தொடர்கின்றது)
பரிசேயன் 1: மன்னவரே இவன் பதில் சொல்லமாட்டான், பேரரசு
                             மன்னருக்கே பதில் சொல்வான், இவன்தான் யூத
                              இராஜா என்று தன்னத்தானே சொல்கின்றானே!
ஏரோது:  ஆமாம் நானும் அதை மறந்துவிட்டேன். யூத ராஜாவுக்கு
                    உரிய மரியாதை கெளரவம் எல்லம் இவனுக்கு அளித்து
                     பிலாத்துவிடம் மீண்டும் அனுப்புவோம்
( இயேசுவுக்கு கரும்பு தடி கோலாக கொடுத்து, முள்முடி தரித்து,
சிகப்பு போர்வை போர்த்தி பரிகாசம் செய்து, பிலாத்துவிடம் மீண்டும் அனுப்புகின்றார்கள். இப்போது பிலாத்துவின் அரன்
மனையில் மீண்டும் இயேசு)
பரிசேயன் 2: ஆளுனரே இவன் எரோது ராஜாவை மதிக்காமல், பதில் ஏதும்
                             சொல்லாமல் இருந்தபடியால், மீண்டும் உங்களிடம் அனுப்பி
                             விட்டார், எமது நியாயப்படி இவன் கொலசெய்யப்படவேண்
                             டும்.
  எல்லோரும்: இவனை சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்!          
பிலாத்து: அப்படியா இவனை நீங்களே கொண்டுபோய் உங்கள்
                       நியாயப்பிரமானத்தின்படி நியாய்ம் தீருங்கள்!
சதுசேயன்: ஒருவனை மரண தீர்வைக்கு, தீர்ப்பிடும் அதிகாரம்
                         எமக்கு இல்லை
பிலாத்து:       நீ யூதர்களின் ராஜாவா?
இயேசு:     நீராக இதை சொல்கின்றீர்களா? அல்லது மற்றவர்கள்
                     என்னைக்குறித்து இப்படி உமக்கு சொன்னார்களா?
பிலாத்து: நான் உம்மைப்போல யூதனா? உன் ஜனங்களும், உன்
                     ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புவித்தார்
                     களே! நீ என்ன குற்றம் செய்தாய்?
இயேசு: என் இராச்சியம், இவ்வுலகத்துக்கு உரியதல்ல, என் இராச்
                  சியம் இவ்வுலகத்துக்கு உரியதானல், நான் யூதர்களிடம்
                  ஒப்புக்கொடுக்காதபடி. என் ஊழிக்காரகள் போராடி இரு
                  ப்பர்களே. இப்படி இருக்க என் இராச்சியம் இவ்விடத்துக்கு
                  உரியதல்ல.
பிலாத்து: நீர் சொல்லும் தோரணையை பார்த்தால்,,,நீர் ராஜாவா?
இயேசு: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்! சத்தியத்தை குறி
                 த்து சாட்சி சொல்லவே நான் பிறந்தேன். அதற்காகவே 
                 நான் இவ்வுலகத்துக்கு வந்தேன். சத்தியவன் எவனும் என்
                 சத்தியத்தைக்கேட்கின்றான்.
பிலாத்து: சத்தியம்! ,,,, சத்தியமாவது என்ன? சிந்திக்கவேன்டிய
                      விடயம் (சற்று அமைதிக்கு பின்) மகா ஜனங்களே நான்
                      இவன் மீது எந்த குற்றத்தையும் காணொம்! பாஸ்கா 
                      பண்டிகையின் நிமித்தம் நான் உங்களுக்கு ஒருவனை 
                       விடுதலை பண்ணும் வக்கம் உண்டல்லவா? ஆகையல் 
                       யூதர்களின் ராஜாவாகிய இவனை விடுதலை பண்ண
                      உங்களுக்கு மனதுண்டா?
எல்லோரும்: இவனை அல்ல, இவனுக்கு  பதிலாக பரபாசை விடு
                           தலை செய்யுங்கள்! பரபாசை விடுதலை செய்யுங்கள்
பிலாத்து: அப்படியானால், யூதர்களின் ராஜா என்று நீங்கள் சொல்
                       லும் இவரை நான் என்ன செய்யவேண்டும் 
எல்லோரும்: இவனை சிலுவையில் அறைந்து கொல்ல உத்தரவு 
                             வேண்டும். சிலுவையில் அறையும், சிலுவையில்
                             அறையும், சிலுவையில் அறையும்!
பிலாத்து: சிலுவையில் அறைந்து கொல்லும் அளவுக்கு இவன்
                       என்ன பொல்லாப்பு செய்தான்?
எல்லோரும்: இவனை சிலுவையில் அறைந்து கொல்ல உத்தரவு 
                             வேண்டும். சிலுவையில் அறையும், சிலுவையில்
                             அறையும், சிலுவையில் அறையும்!
பிலாத்து: நான் இந்த மனிதன் மட்டில் ஒரு குற்றமும் காணவி
                      ல்லை என்பதை நீங்கள் அறியும் பொருட்டு, இதோ
                      அவரை இங்கே அழைக்கின்றேன். இதோ மனிதனை
                      பாருங்கள்!
எல்லோரும்: சிலுவையில் அறையும், சிலுவையில்அறையும்,
                              சிலுவையில் அறையும்!
                      
பிலாத்து: நீங்களே இவனை கொண்டுபோய் சிலுவையில் அறையு
                       ங்கள், இவரிடத்தில் ஒரு குற்றமும் காணோம்!
சதுசேயர்: ஆளுணரே எமக்கு என்று ஒரு நியாயப்பிரமாணம்
                        உண்டு. இவன் தன்னை இறைவனின் மகன் என்று
                       சொன்னபடியால், அந்த நியாய பிரமானத்தின் படி
                       இவன் சிலுவையில் சாகவேண்டும்! 
பிலாத்து: நீ எங்கிருந்து வருகின்றாய்?
பிலாத்து: நீ என்னோடு பேசமாட்டாயா?  உன்னை சிலுவையில் 
                       அறையவும், விடுதலை செய்யவும் எனக்கு அதிகரம்
                       உண்டு என உனக்கு தெரியாதா?
இயேசு: பாத்திரத்திலிருந்து உமக்கு கொடுக்கப்படாதிருந்தால், 
                  என் மீது உமக்கு ஒரு அதிகரமும் இல்லை. ஆகையால்
                  என்னை உம்மிடம் ஒப்புவித்தவனுக்கு அதிக பாவம்
                  உண்டு
சதுசேயர்: இவனை நீங்கள் விடுதலை பண்ணினால், நீ உரோமை
                       இராஜனுக்கு நண்பரல்ல,  தன்னை ராஜா என்கின்ற
                       எவனும் உரோமை ராஜனுக்கு எதிரியாகின்றான்
(இதை கேட்டவுடன் பிலாத்து கபத்தா என்ற நியாயசனத்திலே
அமர்ந்தான். இயேசுவை மன்றத்தில் முன் கொண்டுவந்தார்கள்)
பிலாத்து : இதோ மனிதனைப்பாருங்கள்!
எல்லோரும்: இவனை சிலுவையில் அறையுங்கள்! இவனை சிலு
                             வையில் அறையுங்கள்! 
பிலாத்து: நான் இவனை சிலுவையில் அறைந்து கொல்வதற்கான
                      இவன் மீது ஒரு குற்றமும் காணவில்லை, எனவே இவன்
                      கொலை மீது எனக்கு எந்தவித பங்கும் இல்லை என்பத
                       ற்காக இந்த பாவத்தில் இருந்து கை கழுவுகின்றேன்.
( பிலாத்து கைகழுவுகின்றான். மக்கள் மீண்டும் உரத்த சத்தமாக)
எல்லோரும்: இவன் இரத்த பழி, எங்கள் சந்ததி மீதும் இருக்கட்டும்
                              இவனை சிலுவையில் அறையும். இவனை சிலுவை
                             யில் அறையும்.
பிலாத்து: இதோ உங்கள் இஸ்டப்படி இவனை சிலுவையிலே
                      அறைந்து கொல்லும் படி உங்களிடம் கையளித்தேன்.
(பிலாத்து சொன்னவுடன், அக்களிப்பால் பரிசேயர் கூட்டம் சத்தமி ட்டு கத்துகின்றார்கள். பிலாத்து மாளிகைவிட்டு அகல்கின்றான்.
இயேசுவுக்கு வெள்ளை அங்கி அணிவித்து, அவர் மீது சிலுவை சுமத்தி, இழுத்து செல்கின்றார்கள். திரை மூடுகின்றது) (இயே சுவை கொலைசெய்யப்போகின்றார்கள் என்று கேள்விப்பட்டு, யூதாஸ் தலைமக்குருவின் மாளிகை செல்கின்றான்)
                                                       காட்சி ஏழு
யூதாஸ்  : இது அநியாயம்! நீங்கள் சொன்னது இப்போது செய்வது எல்லாம்
                     நியாயமாகுமா? விசாரணை என்று அழைத்து சென்று இப்போது
                      அவரை கொலைக்களத்து அனுப்பிவிட்டீர்களே!
பெரிய குரு: ஆமாம் எங்கள் யூத குல மரபின் படி, அவன் குற்றவாளி 
                            எனவே அவனை கொலை செய்ய உத்தரவிட்டேன்
யூதாஸ் : ஆனால் இப்போ நான் அந்த கொலைக்கு உடந்தை ஆனேனே!
பெரிய குரு: அது உன்பாடு, வெள்ளிக்காசு எண்ணி வாங்கும் போது, 
                             அதைப்பற்றி சிந்திக்கவில்லையோ
யூதாஸ்: உங்களின் பாவப்பணம் எனக்கு எதற்கு? (பணப்பையை வீசி எறி ந்துவிட்டு அகல்கின்றான். திரைச்சீலை நகர்கின்றது. யூதாச் தனியே புலம்பும் காட்சி, பின்னணியில் குற்றம் புரிந்தவன் என்ற பாட்டின் இசை ஒலிக்கின்றது, யூதாஸ் புலம்புகின்றான்)
யூதாஸ்:  குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மது காண்பதேது? ஆம்
                     குற்றம் புரிந்தேன். போதகர் படுகொலைக்கு நான் துணை
                     போனேன். ஐயகோ நான் கேடுவிளைவித்துவிட்டேனே!
                      கேடுவிளைவித்துவிட்டேனே! இந்த இரத்தபழி என்மீது வாழ் நாள்
                      முழுவதும் தொடருமே! நான் வாழக்கூடாது வாழக்கூடது, நான்
                      சாகவேண்டும், நான் சாகவேண்டும்
(யூதாஸ் தன்னத்தானே மாய்த்துக்கொள்கின்றான். அந்த காட்சி அதே மேடையில் கறுப்பு திரையால் மறைக்கப்பட, வலப்புறம் இருந்து இயேசு சிலுவையோடு நுழைகின்றார். இதற்கு பொருமான பின்னணி இசையும்
பாட்டும் இருக்கவேண்டும், இந்த காட்சி அமைப்புக்குள் இயேசுவை ஆடை களைகின்றது சிலுவையில் அறைகின்றது. பின்னர் இயேசு சிலுவையில் தொங்கி பின்னர் அவர் ஏலி ஏலி லாமா சப்க்தானி என் எபிரேய பாசை யில் கூறி, என் பிதாவே உமது கையில் ஆவியை ஒப்படைக்கின்றேன் எனச்சொல்லி உயிர் விடுகின்றார். உயிர் விடும் போது இடி மின்னல் பூகம் திரைச்சீலை கிழிதல், கல்லறை பிணங்கள் எழுந்து ஓடுவது இவைகளை பயங்கர சத்தங்களோடு, நிகழ்த்தி காட்டி காட்சி முடிகின்றது) ( மீண்டும் திரைவிலகுகின்றது, வெறும் சிலுவை மட்டும் உள்ளது,  அதன் முன் குற்ற வாளி கூண்டு உள்ளது. வழக்கறிஞர் தோன்றுகின்றார்)
                                                       காட்சி எட்டு
வழக்கறிஞர்: இப்படித்தான் இயேசுவின் கொலை நடந்துள்ளது,
                              ஒரு தனி மனித கொலையாக இருந்தாலும், இது 
                               ஒழுங்கமைக்கப்பட்ட  திட்டமிடப்பட்ட கொலை!
                              (Well Organized muder crime ) இந்த கொலை தனி மனித
                              பழிவாங்கலாக நடத்தப்படவில்லை, இந்த கொலை
                               யில் அரசாங்கம், அரசாங்க பாதுகாப்பு இராணுவம்
                               மற்றும் மதத்தின் மகா சங்கத்தினால் திட்டமிடப்
                               பட்ட சதிக்கொலையாக இது நடந்துள்ளது! இந்த 
                               கொலை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்
                                லவேன்டும். இதன் மூலமாக அரசாங்கம் மத நிறுவ
                               ணங்களின் கொலைகளுக்கும், புதை குழிகளுக்கும்
                               நியாயம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு ! எமக்கு
                              கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி, இயேசுவின்
                               கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இரா
                                ணுவ வீரர்கள்!
(இராணுவ வீரர்கள் என்று சொன்னவுடன், இராணுவ வீரன் ஒரு வன் குற்றவாளி கூண்டில் நிற்கின்றார்)
வழக்கறிஞர்: இயேசுவின் சிலுவைக்கொலையில் இராணுவம்
                               நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது, இராணுவ தரப்
                               பில் சாட்சியம் சொல்லவந்திருக்கும் நீங்கள் 
                                கொலைக்கான குற்றத்தை ஏற்றுக்கொள்கின்றி
                                ர்களா?
இராணுவ வீரன்: கொலையை நாம்தான் நிறைவேற்றினோம்,
                                       ஆனால் குற்றத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது?
வழக்கறிஞர்: ஏன் முடியாது? அதற்கான காரணம் கூற முடியுமா?
இ,வீரன் : நாம் எமது கடமையை செய்தோம், மேலிடத்தில் இருந்து
                      வரும் கட்டளைகளுக்கு அடிபணிவதே எமது கடமை!
வழக்கறிஞர் : உங்களுக்கு கட்டளை கொடுத்த அந்த மேலதிகாரி
                                யார் என்று சொல்லமுடியுமா?
இ, வீரன்:  அவர்தான் ஆளுணர் பிலாத்து அவரிடம் கேளுங்கள்.
வழக்கறிஞர்: இப்போது நீங்கள் போகலாம்,இப்பொழுது நாம்
                                ஆளூனர் பிலாத்துவை அழைக்கின்றோம்  நசரேத்
                                இயேசுவை சிலுவையில்றைந்து கொல்லூம் படி நீர்
                                தானா உத்தரவு பிறப்பித்தீர்கள்
பிலாத்து: ஆமாம் நானேதான்!
வழக்கறிஞர்: என்ன குற்றத்திற்காக நீங்கள் அவரை சிலுவைக்
                                கொலைக்கு கையளித்தீர்கள்.
பிலாத்து:  நான் தீர நன்றாக விசாரித்ததின் படி, இயேசுவின் மீது
                        எந்தவித குற்றத்தையும் நான் காணமுடியவில்லை
                         ஆயினும் அவரை நான் கொலை செய்யும் படி உத்தர
                        விட்டேன்.
வழக்க்றிஞர்:  அதுதான் நான் கேட்கின்றேன், செய்யாத குற்றத்து
                                க்கு    ஏன் மரணதண்டனை ?
பிலாத்து: இயேசுவின் மீது இரண்டுவிதமான கோனத்தில் குற்ற்ச்
                       சாட்டுக்கள் சுமத்தப்பட்டன, ஒன்று யூதமத நம்பிக்கை
                        க்கு எதிரானது, மற்றது உரோமை ஆட்சிக்கு எதிரானது
                        இதிலே யூதமத நம்பிக்கைக்கு எதிரான குற்றச்சாட்டு
                       வலுவாக இருந்தது
வழக்கறிஞர்: அப்படியானல் யூதமத சட்டப்படியல்லவா நீங்கள்
                               தீர்ப்பளித்திருக்கவேண்டும்?
பிலாத்து: உண்மைதான்! ஆனால் யூத மத சட்டத்தில் மரணதண்
                      டனை வழங்கமுடியாதே, யூத மத தலைவர்களின் எண்
                      ணம் முழுவதும், இயேசுவுக்கு சிலுவை மரணம் அளிக்
                       கவேண்டும் என்பதே! அதற்காக உரோமை அரசுக்கு
                       எதிரான புரட்சிக்காரன் என குற்றத்தை சுமத்தினார்
                       கள். அந்த குற்றச்சாட்டுக்களை பொய்யென நிரூபிக்க
                        இயேசுவால் முடியவில்லை. ஆயினும் இயேசுவை விடு
                        விக்க, பரபாசோடு இயேசுவை முன்னிறுத்தி எனது
                       இராஜ தந்திரத்தை பிரயோகித்தேன்.
வழ்கக்கறிஞர்: பிறகு என்ன நடந்தது?
பிலாத்து: நான் எதிர்பார்த்ததுக்கு மாறக யூத மதகுருமார்களின்
                      கோரிக்கை பரபாசை விடுவிக்க கோரினார்கள். அவ
                      கொலைகாரன் கொள்ளைக்காரன், இதில் வேடிக்கை
                      என்னவென்றால் மக்களும் யூத மத தலைவர்களோடு
                       சேர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல எனது பதவி
                      க்கே ஆபத்துவந்துவிடுமோ? எனப்பயந்து நான் இயேசு
                       கொலைக்கு கையளித்தேன், நான் சட்டப்படியே மக்க
                       ளின்  ஞனநாயக உரிமைக்கு மதிப்பளித்தேன். எனவே
                      நான் நிரபராதி !   
வழக்கறிஞன்: ஆளுனரே நீங்கள் போகலாம்! ஆளுனரின் வாக்கு
                                  மூலத்தின் படி, இயேசுவின் சிலுவைகொலை 
                                   யூதமத சங்கத்தின் சதிச்செயலாகவே தெரிகின்
                                   றது, எனவெ யூத மத சங்கத்தின் வாக்கு மூலத்தை
                                   கேட்டறிந்து கொள்வோம். மகா சங்கைகுரிய
                                    பெரிய குருவை அழைக்கின்றோம்!
                                     (பெரிய குரு சாட்சிக்கூண்டில்)
                                    மகா பெரிய குரு அவர்களே! முதலில் வணக்கம்!
                                    ஆளுனர் பிலாத்துவின் வாக்குமூலத்தின்படி
                                   இயேசுவின் சிலுவைக்கொலை மகா சங்கத்தின்
                                   விருப்படி நடந்துள்ளதாக கூறுகின்றார்.
பெரிய குரு: ஆமாம் வாஸ்தவம் தான். எங்களைபொறுத்தவரை
                             இயேசு தேவதூசணக்காரன். ஆண்டாண்டு தோறும்
                              ஏன் இன்று கூட இஸ்ரவேலராகிய நாம், கடவுள் 
                              மெரியாவாக யூதர்களின் இராஜாவாக, சகல தேச
                              இஸ்ரவேலர்கள் ஆளும் படியாக மாபெரும் சாம்
                              ராச்சியத்தை அமைப்பார் என நாம் இன்றுவரை
                              நம்புகின்றோம். இன்றுவரை நாம் அண்டை எதிரி
                              நாடுகளுடன் போர் தொடுக்கின்றோம். அப்படி இரு
                              க்கையில் எமது நம்பிக்கையை சீரழித்த் இந்த சதி
                              காரனை நாம் சிலுவையில் அறைந்து கொண்டது
                              மிகச்சரியான் செயலே! எம்மை எவரும் கேள்வி
                               கேட்கேவே கூடாது.
வழக்குரைஞன்: உங்களை தொந்தரவு செய்தமைக்கு மன்னிக்க
                                     வும், நீங்கள் போகலாம்
                                     (பெரியகுரு போகின்றார்)
                                     இதுவரையும் நீங்கள் கேட்ட வாதப்பிரதிவாத
                                     ங்களின் அடிப்படையில் ஒவ்வொருவருமே
                                     தம்மை நிராபாராதிகள் என நிருபிக்கின்றா                                               ர்கள். அப்படியானால் இயேசுவை சிலுவையில்                                           அறைந்து கொன்ற குற்றவாளிகள் யார்