Wednesday 19 April 2023

தைப்பெண்கள் அமைப்பு

                      தைப்பெண்கள் அமைப்பு

ஆடை தைப்பதையே அடிப்படையாக, வாழ்வாதார தொழிலாக, எண்ணிப் பிழைக்கும், ஏழை விதைவைப்பெண்கள், கைவிடப்பட்ட ஏழை அபலைகள், ஏழை இளம் பெண்களின், வாழ்வாதரத்தை உயர்த்தும் எண்ணத்தில் உருவாக் கப்பட்டதே இந்த தைப்பெண்கள் அமைப்பாகும். நோர்வே நாட்டில் இருந்து செயல்படும், தேன் தமிழ் ஓசையின் இயக்குணர், பேசாலைதாஸின் அயரா முயற்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்டதே இந்த தைப்பெண்கள் என்ற அமைப்பாகும். அவர் தன் எண்ணத்தை என்னிடம் எடுத்து சொன்னபோது, அதற்கு முழு ஆதாரமாக, அர்ப்பணமாக நானும், என் சேவையை இந்த தைப்பெண்கள் அமைப்புக்கு செய்வேன் என்ற உறுதிமொழி வழங்கினேன்.

                                                                    தற்பொழுது, தைப்பெண்கள் அமைப்பானது, புத்தளம் மாவட்டத்தில், சிறிய அளவில் தன் முயற்ச்சியை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஐந்து பெண் பிள்ளைகளை தெரிவு செய்து, அவர்களுக்கு தயல் பயிற்ச்சி வழங்கி வருகின்றோம். மிக தரமான, மலிவான நுளம்பு வலை உற்ப த் தியில் ஈடுபட்டுள்ளோம். இந்த திட்டம் தற்போது வெற்றியளித்து வருகின் றது. அதில் கிடைக்கும் வருமானம், அதை உற்பத்தி செய்யும் ஏழை பிள்ளக ளுக்கே வழங்குகின்றோம்.

                                                                   நுளம்புவலை உற்பத்தியோடு நின்றுவிடாமல், வேறு பல துணி உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றோம். உதாரணமாக, குழந்தைகளுக்கான அணைத்துணி, பெண்களு க்கான சுகாதார துணிவகை, வயோதிபருக்கான சுகாதர அணை துணிகள், படுக்கை துணி விரிப்பு, தலையனை உறைகள் இப்படி பல உற்பத்தி பொருட் களை உருவாக்கி, சந்தைப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கியுள்ளோம். எமது எண்ணங்களில் ஒன்றாக, ஏழை மக்களின் பொருளாதார கொள்வனவு சக்தி க்கு ஏற்ப மலிவாக சந்தைப்படுத்துவதை அடிப்படையாக கொண்டுள்ளோம்.

                                                               எமது தைப்பெண்கள் அமைப்பை வண்ணி, மலை யகம் இவைகளுக்கும் விஸ்தரிக்கும் நோக்கோடு,  ஐந்து பெரிய தையல் இயந்திரங் களை நாம் கொள்வனவு செய்துள்ளோம். இந்த முதலீடுகளுக்கும், தையல் பயிற்ச்சியாளரின் மாதாந்த வேதனம், மற்றும் மின்சாரகட்டணங் களை, தேன் தமிழ் ஓசையின் இயக்குணர் திரு பேசாலைதாஸ் அவர்களே பல சிரமங்க ளுக்கு மத்தியில் செய்து வருகின்றார்.

                                                              அன்பான புலம்பெயர் உறவுகளே! உங்கள் உறவினர்கள், யாராவது ஏழை விதவைகளாக, கைவிடப்பட்ட பெண்களாக இருந்து, அவர்களுக்கு ஒரு சுய தொழிலை உருவாக்கி கொடுக்க ஆசைப்படுகி ன்றீர்களா? தயங்காமல் எங்களொடு தொடர்புகொள்க, உங்கள் பயனாளி களின்  அங்கீகராத்தோடு நாம் செயலாற்ற தயாராக உள்ளோம். உங்கள் பயனாளிகள் மூலமாக எம்மோடு தொடர்புகளை பேணுவது உங்களுக்கான நம்பிக்கை ஆதாரமாகும். பண உதவி செய்வதைவிட, அவர்களே தம் சொந்த காலில் நின்று, உழைக்கும் நம்பிக்கையை ஊட்டுங்கள்!

                                                                எமது அமைப்பின் செயல்பாடுகள் பற்றி மேலதி கமாக அறிய விரும்பினால், தேன் தமிழ் ஓசையின் இணையத்தளத் தில், சமூக சேவை பக்கத்தில் சென்று நீங்கள் அறிந்து கொள்ளமுடியும். www.theantamilosai.com  சுயசார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தல் மூலமாக நமது தாயகத்தையும், ஏழை உறவுகளின் வாழ்வையும் உயர்த்து வோம் வாருங்கள்! கைகொடுங்கள்! 

                                                                           நன்றி

                                                                                                          Sister: Evon Felicia Fernando

                                                                                                            ஒருங்கிணைப்பாளர்

                                                                                                         தைப்பெண்கள் அமைப்பு 

 

Saturday 8 April 2023

யேசு ஒரு கழுதை

 யேசுவும் கழுதையும்! பேசாலைதாஸ்


இப்படி நான் சொல்வதினால் தயவு செய்து என் மீது கல் எறியாதீர்கள்! மீண்டும் சொல்கின்றேன் யேசு ஒரு கழுதைதான்! கழுதை என்றால் என க்கு ரெம்பவும் பிடிக்கும். இலங்கை யில் மன்னார் மாவட்டத்தின் அடை யாளமே இந்த கழுதைதான், எனவே கழுதை எனது அடையாளம். நான் சிறுவ னாக இருக்கும் போது, சிவாஜி எனது அபிமான நடிகர், எனவே எம்.ஜீ யார் எனது எதிரியானர். பள்ளிக்குடம் படிக்கும் எனக்கு, எனது கிரா மாத்தின் வெள்ளை சுவர்கள் எனது எழுதுபலகை (சிலேட்) , கரித்துண்டு எனது எழுது கோல். எனது பொழுதுபோக்கு, சிவாஜி வாழ்க! எம்.ஜீயார் கழுதை!என்று எல்லா சுவர்களி லும் எழுதித்தள்ளுவது. அதன் பாதிப்புத் தான், இப்போது நான், இணையத் தளங்களில், முகநூலில்களில் பதிவிடும் பழக்கம்! அதற் காக என்னை மன்னியுங்கள்!

                           ஏன் நான், யேசு ஒரு கழுதை என்று சொன்னேன், அவரை ஒரு குதிரை என்று சொல்லியிருக்கலாமே! நான் சொன்னாலும், யேசு அதை ஒத்துக்கொள்ளமாட்டார். குதிரை, இந்த மண்ணுலகின் ராஜாக்களின் வாக னம். இராஜராஜா சோழனுக்கு நீலவேணி குதிரை போல, கட்டபொம்மனு க்கு, பஞ்சகல்யாணி குதிரை போல, மஹா அலெக்சாண்டர் அடக்கியா ண்ட வெண்புரவி குதிரை போல, பல குதிரை புராணங்கள் எனக்கு தெரி யும். இருந்தாலும், யேசுவுக்கும் எனக்கும், கழுதைதான் பிடித்திருந்தது.

                         என் யேசுவின் வாழ்க்கையிலே, கழுதையின் வகிபாகம், மிக முக்கியமானது. அது அவரின் அடையாளம் கூட, குருக்கள், மறைநூல் வல் லுணர்கள், சிலுவையைத்தான் மீட்பின் அடையாளமாக கருதுகின்றார் கள், ஆனால் இந்த கழுதைதை அவர்கள் மறந்துவிட்டார்கள்! யேசு கரு வாக இருந்தபோது, அவரை சுமந்துகொண்டு பெத்தலகேம் சென்றது ஒரு கழுதை தான். ஏரோது யேசுவை கொல்லத்தேடிய போது, அவரை காப்பா ற்றி எகிப்து தேசம் கொண்டு சென்றதும், ஒரு கழுதைதான். யேசு மரண த்தை வெற்றி கொள்ள, ஜெருசலேம் நுழைகின்றபோது, ஒரு கழுதை மீது ஏறித்தான், தன் வெற்றிப்பயணத்தைத்தொடர்ந்தார்.

                                                       ஏன் யேசு, பாஸ்காவையும், தன் மரணத்தையும், எதிர் கொள்ள ஒரு கழுதையை தேர்வு செய்தார். ஒரு குதிரையை தெரிவு செய்திருக்கலாமே! மறை நூல்களில் எழுதப்பட்டது இதுவே,  "இதோ ஜெரு சலேமின் குமாரன் ஒரு கழுதை மீது வெற்றிப்பயணியாக ஜெருச லேமுக் குள் நுழைகின்றார்" மறை நூலில் எழுதப்பட்டபடி, யேசு வாழ்ந்தார், மர ணித்தார், சாவினை வெற்றி கொண்டார். அதிலே கழுதைக்கும் பங்கு இருக்கின்றது. கழுதை, உழைக்கும் ஏழை வர்க்கத்தின் ஆதாரம்! யூத சமூ கத்தில், ஏன் தமிழ் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தின் உழைப்பின் ஆதாரம்! சிலுவை, குற்றவாளிகளை தண்டிக்கும் ஒரு ஆயுதம், கழுதை, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் அடையாளம், இந்த இரண்டும் புரட்ச்சி வாதி யேசுவின் ஆயுதம்!

                                                         முன்பெல்லாம், கழுதை அழுக்கு துணி மூட்டை சுமக்கும் மிருகமாக மட்டுமே பாவிக்கப்பட்டது, இப்போது நிலைமை மாறு கிறது, கழுதைப்பால், முகத்தின் அழகை மெருகூட்டுகின்றது, கழுதைப் பால்,  நோய் நிவாரனியாகா கருதப்படுகின்றது, கழுதை மணக்கவிடுதல், அல்லது கழுதைப் பால் கொடுக்கும் கிராமப்புற மக்களினசெயல்பாடுகள் இன்னமும் வழக்கத்தில் இருக்கின்றது, இதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு. கழுதை எந்த காலநிலையையும் சமாளிக்கும் திறன் கொண்டது, அதுமட்டுமல்ல கழுதையின் பால், நோய் எதிர்ப்பு திறன் கொண்டது.

                                                             கழுதை அழுக்கு மூட்டை மட்டுமல்ல, தூய துணிகளை கூட திரும்பவும் சுமக்கின்றது. கழுதைக்கு, நல்ல பொருட் களை சுமக்கின்றேன் என்ற கர்வமும் இல்லை, அழுக்கு மூட்டை சுமக்கின் றேன் என்ற தாழ்வு மனப்பான்மயும் இல்லை, அது ஞானி போல நடந்து கொள்கின்றது. இயேசுவும் ஞானிகளுக்கு ஞானியல்லவா எனவே தான் யேசு கழுதையை அவர் தேர்வு செய்தார். நம் பாவ அழுக்குகளை சுமந்து, நம் பாவங்களுக்காக தன்னியே ஜீவ பலியாக கொடுத்தார். அவர் ஒரு கழுதை போல நடந்து கொண்டார்.   

                                                                               அன்புடன் பேசாலைதாஸ்