கண்ணீர் கவிமலர்
அன்பு மலராய் மரியம்மா, நேசமலராய் லூர்த்தம்மா, ஆசை மலராய் அக்னேசம்மா, இந்த மலர்களோடு பாசமலராய் இணைந்த புஸ்பமலராய் உயர் மதிப்புக்குரியவரும், பேசாலை அக்கிராசனரும், பேசாலையை கட்டிக்காத்த கட்டளைகாரனுமான சூசை லெம்பர்டின் குட்டி மலரும், பெரும் மதிப்புக்குரிய செவாலியரும், வேதபராகருமான வேதம் பல்தானோவின் அருமை மருமகளாய், பேசாலை முன்னாள் கிராமசபையின் தலைவரான போர்ஜீயாவின் பெரும் துணைவியாய், பத்தினாதர் சம்மாட்டியின் அருமை தங்கையாக, கலைவேந்தன் பிராகாசம் அவர்களின் அருமை அக்காவாக, ஆறு பிள்ளைகளின் தாய் ஆறாக, அவணியில் அவதரித்த என் அன்பு சின்னம்மா, நீ சிரித்த சிரிப்புகள் என் இதயத்தில் சில்லரையாக சிதரிக்கிடக்கின்றதே. பசிக்கின்ற போதெல்லாம் அன்னமிட்ட கை உன் கையல்லாவா! அணைத்து ஆதரிக்கும் உன் அன்புமடியில் கண்துயின்ற காலம் எல்லாம் கனவாக வந்து போகுமே என் சின்னம்மா! கண் நீரோடையில் விரியும் பூமலர் நீங்கள் எங்கள் நெஞ்சோடையில் விரியும் உங்கள் நினைவு மலர்,
No comments:
Post a Comment