Monday 7 March 2022

வீரன் நெப்போலியன்....

 வீரன் நெப்போலியன்....


         


நெப்போலியன் மாவீரன் என்றாலும் இவரது உயரம் ஐந்து அடி தான். இவர் தன் உயரத்தை உயர்த்தி காட்ட எப்பொழுதும் ஐ -ஹீல்ஸ் ஷூ தான் அணிந்திருப்பார். அப்புறம் தன் உயர குறைவு பிறருக்கு தெரியாமல் இருக்க குதிரையின் மீது தான் அமர்ந்திருப்பார். 

பெரும்பாலும், இப்படி பட்ட நெப்போலியன் சிறை பிடிக்க பட்டார். ஒரு முறை இவரால் பல முறை தோல்வியுற்று  அவமானம் அடைந்த அரசர்கள் பலர்  ஒன்று சேர்ந்து நெப்போலியனை அவமான படுத்த நினைத்தனர். இந்த குள்ளன் நம்மை எப்படி எல்லாம் அவமான படுத்தி உள்ளான். இவனை அவமான படுத்தி நாம் அனைவரும் நம் வஞ்சத்தை தீர்த்து கொள்ளவேண்டும். அதே நேரம் அது ஒரு பாதிப்பு இல்லாத அவமானமாகவும் இருக்க வேண்டும் என ஒரு திட்டம் தீட்டினர். அதன் படி எல்லோரும் அமர்ந்து உண்ணும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அதில் நெப்போலியன் அமரும் இருக்கைக்கு கீழ் மட்டும் ஒரு சிறு சப்தத்துடன் வெடிக்கும் ஒரு வெடி பொருளை பொருத்தி வைத்தனர்.

விருந்து ஆரம்பம் ஆனது. எல்லோரும் அமர்ந்து சூப் அருந்தினர். நெப்போலியனும் அமர்ந்து சூப் அருந்தினார். எல்லோரும் வெடிக்க போகும் வெடியை பார்த்து கொண்டே சூப் அருந்தினர். ஆனால் நெப்போலியன் மட்டும் சூப்பின் சுவையை ரசித்து ருசித்து அருந்தி கொண்டிருந்தார். நேரம் வந்ததும் வெடி வெடித்து சிதறியது. சூப் சாப்பிட்டு கொண்டிருந்த பலரும் வெடி வெடித்த அதிர்ச்சியில் ஒரு சிலர் ஸ்பூனை நழுவ விட்டனர். ஒரு சிலர் சூப்பை தங்கள் உடை மீது கொட்டி கொண்டனர். ஒரு சிலர் இருக்கையை விட்டு எழுந்து ஓடும் முயற்சியில் இருந்தனர். ஆனால் நெப்போலியன் மட்டும் சூப்பை ரசித்து ருசித்து அருந்தும் அதே நிலையில் அமர்ந்து இருந்தார். 

அப்பொழுது எல்லா அரசர்களும் ஆச்சரியத்துடன் நெப்போலியனிடம் கேட்டனர். உங்கள் இருக்கைக்கு கீழ் தான் வெடி வைத்தோம். ஆனால் நீங்கள் எங்களை போல் பயப்படாமல் தைரியமாக அமர்ந்து சூப் அருந்துகிறீர்களே எப்படி உங்களால் இப்படி இருக்க முடிகிறது என்று கேட்டனர். 

இந்த பதிவில் நெப்போலியனின் இந்த பதில் தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்..... 

         நெப்போலியனின் பதில்....

நண்பர்களே, நான் எந்த செயலில் ஈடுபட்டாலும் அந்த செயலில் மட்டுமே என் முழு கவனத்தையும் செலுத்துவேன். அப்பொழுதுதான் அதன் முழு வெற்றி எனக்கு கிடைக்கும். நாம் யாவரும் உணவருந்த தானே அமர்ந்தோம். அதனால் உணவில் மட்டுமே என் முழு கவனமும் இருந்தது. வேறு எதிலும் இல்லை. ஆனால் நீங்களோ வெடி எப்பொழுது வெடிக்கும் நான் எப்பொழுது பயந்து அலறுவேன் என்கிற சிந்தனையிலே இருந்ததால், உங்களது  அந்த ஒரு முக சிந்தனையே உங்களை பயத்திற்கு உள்ளாக்கி விட்டது என்று கூறி கொண்டே உணவை உண்ண துவங்கினார்.

அவர் கூறியதை கேட்ட அரசர்கள் வெட்கி தலை குனிந்து தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டனர். உங்கள் ஆற்றல் பெறுக வேண்டும் என்றால் உங்கள் முழு கவனமும் அதிலே இருக்கட்டும். அது தியானமாக இருந்தாலும் சரி அல்லது பக்தியாக இருந்தாலும் சரி. செய்யும் தொழிலாக இருந்தாலும் சரி.....

No comments:

Post a Comment