Monday 7 March 2022

இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியது யார் தெரியுமா..??

 இந்தியாவில் முதன் முதலில் 

இஸ்லாமிய மார்க்கத்தை

தழுவியது யார் தெரியுமா..??


இறைவனின் இறுதித் தூதர் 

முஹம்மத் நபி (ஸல்) அவர்களை 

நேரில் பார்த்த முதல் இந்தியன்...

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்றும்,

முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான்

இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்றும், பொய்களை மீண்டும் மீண்டும்

கூறிக்கூக்குரலிடுகிறார்கள்...

ஆனால், உண்மை அதுவல்ல.

சேர நாட்டோடு, தமிழகத்தின் தென்பகுதியையும் ஆண்டு கொண்டிருந்த மன்னர்,"சேரமான் பெருமான்" என்பவர்.

இவர் இஸ்லாத்தை ஏற்றது 6 ஆம்

நூற்றாண்டில்..அதாவது முகம்மது நபி

பெருமகனார் வாழ்ந்த காலத்திலேயே, மக்காவிற்கு சென்று இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இதில் மற்றுமொரு சுவாரசிய தகவல்

இவர் தமிழர் என்பதே.

அதுவும் இந்தியாவில்

இஸ்லாத்தை ஏற்ற முதல் நபர் தமிழர்.

இந்தியாவில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்த

ஆவல் கொண்டு,

 மக்காவில் இருந்து 

திரும்பும் வழியில், 

உடல்

சுகவீனம் காரணமாக இறந்து போனார்.

இறக்கும் முன், மாலிக் பின் தீனார் என்ற

நபித்தோழரிடம், தான் இஸ்லாத்தை ஏற்றதையும், தனது ஆட்சிக்குட்பட்ட 

பகுதிகளில் இஸ்லாத்தை பரப்ப முயற்சி எடுக்க வேண்டும்என்றும்,

தொழுகைக்காக

மசூதி கட்ட வேண்டும் என்றும்,

தனது குடும்பத்தினருக்கு எழுதிய 

கடிதத்தை கொடுத்து அனுப்பினார்...

இதனை ஏற்றுக்கொண்ட இவரது 

குடும்பத்தினர், இஸ்லாத்தை பரப்ப

எடுத்த முயற்சிகளில் ஒன்றாய்,

இந்தியாவின் முதல் மசூதி, கி.பி

629 ஆம் ஆண்டு கொடுங்கலூரில்  (திருப்புறையார்-திருச்சூர்) கட்டப்பட்டது.

இந்த மசூதியின் பெயர் "சேரமான் பள்ளி". சரித்திர சாட்சியாய் இன்று வரை நிலைத்து நிற்கிறது...

சேரமான் பெருமான் மன்னரின் அடக்கஸ்தலம் ஓமன் நாட்டில் உள்ளது. 

இஸ்லாமிய மார்க்கம், 

தமிழர்களாகிய நமக்கு,

முகலாயர் ஆட்சிக்குப்பின்,

வடக்கில் இருந்து வரவில்லை...

மாறாக, வடக்கு மக்கள் 

இஸ்லாத்தை ஏற்கும் முன்னமே,

தமிழர்களாகிய நமது முன்னோர்கள்

இஸ்லாத்தை ஏற்றனர் என்பதே உண்மை என்று வரலாறு கூறுகிறது

No comments:

Post a Comment