செம்மொழியே
💦🌷💦🌷💦🌷
செம்மொழியே என்றும்
மங்காத தமிழே
தமிழே உன்னைத்
தலை வணங்குகின்றோம்
வணங்கியே உந்தன்
புகழைப் பாடுகின்றோம்
பாடியே நாங்கள்
பரவசம் அடைகின்றோம்
அடைகின்றோம் பெருமை
தமிழராய்ப் பிறந்ததற்கு
பிறந்த மொழிகளிலே
சிறந்து விளங்குகின்றாய்
விளங்குகின்றாய் இப்போதும்
குன்றாத இளமையுடன்
இளமைப் பொலிவோடுத்
திகழும் தமிழணங்கே
தமிழணங்கே எண்ணற்ற
இலக்கியங்கள் படைத்தவளே
படைத்ததை எமக்குப்
பரிசாகத் தந்தவளே
தந்தே தமிழின்
சிறப்பைச் சொன்னவளே
சொன்னது உண்மையே
தொன்மையானது செம்மொழியே
ப.சொக்கலிங்கம்..
No comments:
Post a Comment