இராமதேவர் என்ற யாக்கோபு
*************************************
18 சித்தர்களின் ஒருவரான ராமதேவர்
உடம்பை வெல்லும் வைத்திய நெறிமுறைகளில் மிகுந்தகவனம் செலுத்தி மூலிகை தேட ஆரம்பித்தார். அந்தத் தேடலில் அவருக்கு ஓர் உண்மை புலனானது.
அதுதான் பூகோள ஞானம். இந்த மண்தான் உயிர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறது. காற்றோடும், நீரோடும், ஒளியோடும் கூடி அந்தரம் எழும்பி, இது மனிதக் குலத்துக்கு உணவைத் தருகிறது.
அந்த உணவும் இடத்துக்கு இடம்வேறுபடுகிறது. எல்லாவித உணவு வகைகளும் எல்லா இடங்களிலும் விளைந்து விடுவதில்லை. மலையில் விளையும்தேயிலையும் காபியும் தரையில் பட்டுப் போய் விடுகின்றன. தரையில் விளையும் சில பயிர்களோ மலையில் விளையமறுக்கின்றன.
இடத்துக்கு இடம் பஞ்சபூத கலவையில் மாறுபாடு இருப்பதால் தட்பவெப்பம், மண்சத்து, காற்றில் குளிர், பொழுதுகளில் வெப்பம் என்று எல்லாவற்றிலும் மாறுபாடுகள் உள்ளன.
இந்த மாறுபாட்டிற்கு ஏற்பவே தாவரங்கள் வளருகின்றனஎன்பதைப் புரிந்து கொண்ட ராமதேவர், எங்கே ஒருவர் பிறக்கிறாரோ அங்கே விளையும் பொருள் எதுவாக இருப்பினும்அங்கே பிறந்தவரை அது எதுவும் செய்யாமல், அவருக்கு அது பொருந்தி விடுவதையும் பார்த்தார்
இதனால் பாலைவனமான அரேபியாவில் விளையும் செடிகளை
ஆராய விரும்பினார்.இதனால் அவர்
மெக்கா..சென்றார்..பாலைவன மணலில் புதைந்து கிடக்கும் கற்ப மூலிகையைப் பற்றியெல்லாம் ஆராய்ந்த யாக்கோபு அவை பற்றியெல்லாம் தம் நூலில் குறிப்புகள் எழுதி வைத்தார்.அரபு தேசம் சென்று மெக்காவில் "அண்டக்கல்லை"கண்டு வணங்கி தியானமுற்று இருக்கையில் அந்நாட்டவர்கள் எங்கள் மதத்தில் சார்ந்தவர் தான் இருக்க முடியும் என்று கூறியதால் இவரும் அங்கு சமாதியில் நிட்டையும் கைகூட இருக்க வேண்டிய நிலையானதால் மதம் தடையாக நிற்ககூடாது எனக் கருதி
அம்மதத்தில் சேர்ந்து யாக்கோபு என்று பெயர் சூடி இறை அருளால் குரு அருளால் அவர்கள் புனித நூலை ஒதுவித்து அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களால் மதிக்கதக்கவராக வாழ்ந்து மக்களின் அறியாமையை நீக்கியும் அவர்தம் பிணிகளைக் களையவும் பதினெட்டு சாத்திரங்களை (நூல்கள் அரபு மொழியில் பாடி வைத்தார்)..
இறுதியாக மெக்கா அண்டக்கல்
அருகே அமர்ந்து சாமதிநிலை அடைந்தார்..அப்போது
நபிகள் நாயகத்திற்கு தீட்சை அளித்தார்...அதனாலேயே அவர் பின்னாளில் ஞானம் அடைந்தார்...
யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலில் அல்லா பற்றிய பாடல்.
ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்த நபிமார்கள் பாதம் போற்றி
தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம் தன்னை வானந்த மாகவே அறுநூறாகவகயாகப் பாடினேன் வண்மையாகக் கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே"
(யாக்கோபு என்ற இராமதேவர்
இந்த நிலையில் ராமதேவரை தேடி
போகர் மெக்கா வந்து அவரை எழுப்பி
சதுரகிரி அழைத்துவந்து..நீ அரபுமொழியில் இயற்றிய கற்பசாதனை ..மற்றும் காயகல்ப தந்திரங்களை இதர சித்தர்களுக்கு
சொல்லித்தர ஆணையிட..
இராமதேவர் சதுரகிரி வந்து அதை தமிழில் பாடினார்..(இன்றும் ராமதேவர் வனம் சதுரகிரியில் உண்டு)
பின்நாளில் அழகர்கோவில் மலையில்
ஜீவசமாதி அடைந்தார்...
உண்மையில் இஸ்லாமியர்களின் புனிதஸ்தலம் மெக்காவின் உள்ளே
இருப்பது அண்டக்கல் என்ற சுயம்புலிங்கம் தான்..
No comments:
Post a Comment