விநாயகருக்கு ஏன் யானைதலை
விநாயகருக்கு ஏன் யானைதலை??நான் கதையை கேட்க்க வில்லை அதனுடைய கருத்தை கேட்க்கிறேன்??
***********************************************""
பெரிய காது...சகலத்தையும் கேட்கும்திறன்..சிறிய.கூறிய கண்கள்..தொலைதூரம் பார்க்கும்திறன்..மிகப்பெரியதலை
ஞாபகம் வைத்துக்கொள்ளும்திறன்
வேறு விலங்குகளுக்கு இல்லாத பெரிய துதிக்கை...,மூச்சை நீளமாக உள் இழுத்து..மிக நீளமாக வெளியே விடுவது..போன்ற குணாதிசயங்கள்
யானைக்கு மட்டுமே உண்டு..
சிறிய அளவில் மூச்சை இழுத்துவிட்டால். .ஆயுள் குறையும்.
ஆனால் நீண்ட துதிக்கை மூலமாக யானைஇயல்பாகவே மூச்சை மெதுவாக இழுத்து. .நிதானமாக வெளிவிடவேண்டியிறுக்கிறது
இதனாலேயே மற்ற விலங்குகளை விட யானை அதிக நாட்கள் உயிரோடு
வாழ்கிறது.....நீண்ட வாழ்க்கை. அதற்கான நீண்ட சுவாசம்..அதனால்
ஏற்ப்படும் கூரிய புத்தி..தொலைதூர பார்வை..அந்த அமைதியால் கிடைத்த
கேட்கும் திறன்..இவையே கணபதி.
விநாயகர் பிரணவ(ஓம்) வடிவம்..
".ஆ"எழுத்தின் நீட்டலும்
"உ" என்ற எழுத்தின் நீட்டலும்
"ம"என்ற எழுத்தின் அழுத்தமும் ஒருங்கே கலந்தது ஓம்
"அ"என்ற ஒலி சிவம்..அது அசையாது
அனைத்தையும் ஏற்கும் குணம்.
"உ"என்பது ஒன்றில் புகுந்து அதற்கு உயிர்பை கொடுக்கும் தன்மை.
"ம"என்பது இந்த இரண்டையும் ஒன்றைசேர்த்தால் கிடைக்கும் சக்தி
இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்த சக்தி சொரூபமே விநாயகர்
உங்களுக்கு இப்போது விநாயகரை பற்றி புரிகிறதா?இந்துமதத்தில்..
யாளைதலை உடைய்பொம்மையை வணங்கு..என்று சொல்வார்கள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ..ஏன்
யானைதலை என்று உனக்குள் கேள்வி எழவேண்டும்
ஏன் உருவவழிபாடு என்று கேட்க வேண்டும்..ஏதோ ஒரு கால கட்டத்தில்
கடவுளை அடைய சிறந்த வழி எது?
என்று உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்க தலைப்பட வேண்டும்.
நீங்களே உங்களுக்குள் கேள்வி கேட்கும் தன்மையை வளர்ப்பதே
இந்துமதத்தின் நோக்கம்
No comments:
Post a Comment