Saturday 5 February 2022

#மணல்_திட்டுக்கள்_மாயம்..?

 #மணல்_திட்டுக்கள்_மாயம்..?

காற்றாலை வந்தபின் நடுக்குடா பிரதான வீதியில் இருந்து கடக்கரைக்குப் போகும் பாதையில் இரு மருங்கிலும் (ஆலயத்துக்கு அருகாமையில்) இருந்த மணல் திட்டுக்கள் காணாமல் போயுள்ளதை கண்டுபிடுக்க நம்ம ஜனாதிபதி நடுக்குடாவுக்கு வந்திருப்பாரோ.?
நடுக்குடா கிராமம் ஆனது ஈச்சம் பழம் நாவல் பழம் போன்ற பழங்கள் அதிகமாக காய்க்கும் நாவல் மரங்களும் ஈச்ச மரங்களும் அதிகமாக உள்ள பிரதேசம் கடக்கரையை அண்மித்த இடங்களில் அதிக நாவல் மரங்கள் உண்டு.
ஒவ்வொரு வருடமும் பல இடங்களில் இருந்தும் நாவல் பழம் ஆய்வதற்கு பலரும் வந்துபோகும் இடமாகும்.
சிறுவயதில் நாம் நாவல் பழம் ஈச்சம் பழம் ஆய்வதற்கு போகும் போது அங்கே இருக்கின்ற மணல் திட்டுக்களில் ஏறி விளையாடி எமது பொழுதை ஆனந்தமாக கொண்டாடுவோம் இப்போது அந்த மணல் திட்டுக்களை காணவில்லை..?
காற்றாலை வந்த பின்னர் ஒரு களவிஜயமாக நடுக்குடா காற்றாலை பிரதான காரியாலயம் அமைந்திருக்கும் இடத்துக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது அப்போது அவதானித்த விடயம் என்னவென்றால் வீதியின் இரு பக்கத்திலும் இருக்கும் மணல் திட்டுக்கள் சரிந்து வீதி மணலால் நிறைந்து இருக்கும் வாகனங்களில் செல்வது சற்றுக் கடினம் இதனை நிவர்த்தி செய்ய( மூடப்படுவதை) தடுக்க இரண்டு மருங்கிலும் சீமேந்தினால் தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருந்தது அன்று . இன்று தடுப்புச்சுவர் இருக்கு மணல் திட்டை காணவில்லை .? வடிவேலின் காமடிபோல கிணத்தைக் காணல்ல என்பது போல மணல் திட்டை காணல்லை ..? எங்கே என்று கண்டு பிடிச்சுத்தாங்க ஐயாக்களே.
பதிவு
மன்னார் பெனில்.

No comments:

Post a Comment