Sunday 14 February 2021

பாலேந்திராவின் மேடைப் பக்கம் -1

 

பாலேந்திராவின் மேடைப் பக்கம் -1

ஒரு பொம்மையின் வீடு 1
நாடகர் பாலேந்திரா
லண்டன் அவைக்காற்றுக் கலைக்கழகம்

நாடகர் பாலேந்திரா ஈழத்தமிழ் மேடை நாடகங்களில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர். கிராமிய, பாடசாலை சூழலில்களிலிருந்து தமிழ் நாடகக் கலையை வெளியே இழுத்துவந்து நவீனப்படுத்தி உலகத்தர விமர்சகர்களின் பார்வைகளுக்குச் சமர்ப்பித்தவர். அவரும், அவரது மனைவி ஆனந்தராணியும், இப்போது மகளும்கூடவே, லண்டந் மாநக்ரில், நிர்வகிக்கும் அவைக்காற்றுக் கலைக் கழகம் எமது அடுத்தடுத்த தலைமுறைகளிடம் இம் மாண்புமிகு கலையை ஒப்புவித்து வருகிறது. அவரது கலை அனுபவங்களை அவ்வப்போது சமூக வலைத் தளங்களிலும், இதர வழிகளிலும் பதிந்து வருகிறார். மறுமொழி வாசகர்களுக்காக அவரது அனுமதியோடு இக் கட்டுரை பிரசுரமாகிறது.


இன்று இணையத்தில் இப்ஸனின்  “ஒரு பொம்மையின் வீடு” (A Doll’s House) நாடகம்.பார்க்கும் சந்தர்ப்பம் உண்டு . லண்டன் நேரம் மாலை 2.30 இல் இருந்து இன்று இரவு வரை YOUTUBE இல் பார்க்கலாம். இது குறித்து முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

லண்டன் LYRIC அரங்கில் இந்த நாடகத்தை கலைஞர்கள் சத்தியமூர்த்தி , சாம்சன்,  மனைவி ஆனந்தராணி ஆகியோருடன்  கடந்த வருடம்பார்த்தேன்.இதில் நோறா பாத்திரத்தில் சிங்கப்பூரில் பிறந்த ஒரு தமிழ் பெண் அஞ்சனா வாசன் சிறப்பாக நடித்துள்ளார். இப்படி நிகழ்வது  லண்டன் mainstream அரங்கில் நான் அறிந்த வரையில் முதல் தடவையாகும்.

நாடகம் எழுதப்பட்ட காலத்தில் (1879)  இந்தியாவிற்கு  நாடகக்  களம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது . பிரதி ஆக்கம்: TANIKA GUPTA. இந்த நாடகம்  லண்டனில் நிலவும் இன, நிற வாதம் பற்றியும் பூடகமாக பேசும். இப்படிப் பல Classic நாடகங்கள் புதிய விளக்கங்களுடன் மீள் மேடையேற்றம் காண்கின்றன.

ஒரு பொம்மையின் வீடு
ஒரு பொம்மையின் வீடு

இந்த வருடம் Nora என்ற பெயரில் Young Vic அரங்கில் இந்த நாடகத்தின் வேறொரு வடிவம் மேடையேறியது. அரங்கில் சென்று பார்க்க திட்டம் இருந்தும், தற்போழுது நிலவும் அசாதாரண நிலைமையால் எனக்கு பார்க்க முடியவில்லை. வேற்றுமொழி  நாடகங்கள் ஆங்கிலத்தில் எப்போதும் மேடையேறிக்கொண்டு தான் உள்ளது.

தமிழில் நான் இலங்கையில் இந்த மொழி பெயர்ப்பு முயற்சிகள் செய்த போது எதிர்த்தவர்களும் தற்போது மாறியுள்ளதாக உணர்கிறேன்.  



திரு பி. விக்னேஸ்வரன் அவர்களது மொழிபெயர்ப்பு நெறியாள்கையில் கடந்த ஆண்டு கனடா நாட்டில் மிகவும் வெற்றிகரமாக மனவெளி அரங்காற்றுக்குழுவினால் 19வது அரங்காடலில் மேடையேற்றப்படடது இந்த நாடகம், கடந்த வருடம் ,லண்டனிலும் அண்மையில் இலங்கையிலும் வீடியோ பதிவாக காட்டப் பட்டது. 

உலக நாடக வரலாற்றில் நவீன நாடகத்தின் முன்னோடி என்று கருதப் படும் நோர்வேஜிய நாடகாசிரியர் ஹென்றிக் இப்ஸன் அவர்கள் 1879 இல் எழுதிய நாடகம் இது. 

இன்றும் சமகாலத்தன்மையுடன் உலகின் பல பாகங்களிலும் பல மொழிகளிலும் மேடையேறி வரும் நாடகம். உலகில் பல நாடுகளில் நாடகத்துறை மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக விளங்கும் இந்த நாடகம் ஈழத்தமிழருக்கும் முக்கியமான நாடகமாக விளங்குகிறது. இப்போது இலங்கையிலும் நாடகத்துறை மாணவர்களுக்கு பாடபுத்தகமாக உள்ளது.

நானறிந்த வரையில் நான்கு ஈழத்தமிழர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.( யாழ் தேவன், குழந்தை ம. சண்முகலிங்கம் , கா. சிவபாலன் , பி. விக்னேஸ்வரன் )

அரை நூற்றாண்டுக்கு முன்னரே யாழ்நகரில் மேடையேறியுள்ளது. யாழ் இந்துக்கல்லூரியில் நான் பயின்ற போது எனக்கும் ஆசிரியராக இருந்த யாழ் தேவன் அவர்களால் அப்போதிருந்த அரசாங்க அதிபர் அவர்களின் உதவியுடன் அப்போது மேடையேற்றப்பட்டது. இலங்கையின் நிகழும் நவீன மொழிபெயர்ப்பு நாடக முயற்சிகளுக்கு ஒரு முன்னோடி நாடகம் இது என்று கூறலாம்.



இப்ஸனின் An Enemy of the people  நாடகத்தை தழுவி “சமூக விரோதி” என்ற தலைப்பில் 2014 இல் லண்டனில் மேடையேற்றினேன்.  இவ் வருடம் யாழ்ப்பாணம் சென்ற போது அதனை அங்கு தயாரிக்க வேண்டும் என்றும் அங்கு உள்ள நீர் மாசடையும் பிரச்சினைக்கு நேரடி தொடர்பாக இருக்கும் என்றும், ஒரு  திட்டம் இருந்தது. அது இனி கைகூடுமோ தெரியாது. சுமார் 140 வருடங்களுக்கு முன்னர் இப்சன் எழுதிய நாடகம் இப்பொழுது மிகவும் சமூக பெறுமதி வாய்ந்ததாக காணப் படுகிறது.

சமூகத்தை பாதிக்கும் நுண் கிருமி பற்றிய உண்மையை வெளிப்படையாக சொல்ல வந்த விஞ்ஞானி எப்படி அதிகாரத்தால் “சமூக விரோதி ” ஆக்கப் படுகிறார் என்பதைக் கூறும்  உன்னதமான நாடகம் இது.

தற்பொழுது நிலவும் கொரோனா நெருக்கடியில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதாரமா? பொது நலமா? என்ற  கேள்வி எழும் போது, அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அன்றாடம்  நாம் எல்லா நாடுகளிலும் காண்கிறோம். “சமூக விரோதி”  நாடகம் இப்போதைய சூழலில்  எந்த நாட்டிலும்  மிகப் பொருத்தமாக அமையும்.  

Friday 5 February 2021

Kim Tong Un

 Kim Tong Un

கிம் ஜாங் உன் மக்களைக் கொடுமைப்படுத்துவார். பிடிக்காதவர்களைக் கொல்வார். அண்டை நாடுகளை அச்சுறுத்துவார். தற்கால உலகத்தில் மிகவும் அதிகமாகக் கேலி செய்யப்பட்ட ஒரு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். கடந்த ஏழு ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் இருக்கின்றன. அவர் நினைத்தால் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் அணு ஆயுதப் போரைத் தொடங்க முடியும். அவர் விரும்பினால் அண்டை நாடுகளுடன் உறவை முறித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் உறவை புதுப்பித்துக் கொள்ளலாம். வடகொரியாவை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் கிம் பரம்பரையின் வாரிசு அவர். உலகில் மிகக் குறைந்த வயதில் அதிகாரங்களைப் பெற்ற தலைவர்களில் இவர் முக்கியமானவர். வலிமையான தலைவர்கள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். வடகொரியாவை நிறுவிய தலைவரான கிம் இல் சுங், கிம் ஜாங் உன்னின் தாத்தா

கிம் ஜாங் உன்னின் இளமைக் காலம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் 1982-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி அவர் பிறந்ததாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. ஆனால் தென்கொரியாவின் உளவுத்துறையினர் அவர் 1983-ஆம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். வடகொரியாவின் தலைவர்கள் பொதுவாக தங்களது குழந்தைகளை வெளிநாடுகளில் ரகசியமாக வளர்ப்பது வழக்கம். அதுவும் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு நாடுகளில் பிரித்து வளர்க்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் பிறந்த சில ஆண்டுகளிலேயே சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகருக்கு அனுப்பப்பட்டார் கிம் ஜாங் உன். அங்கு தொடக்கக் கல்வி பயின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவருக்கு சோல் பாக் பாக் சோல் என பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வாரிசு என்பதால் அடையாளம் தெரியாத வகையிலேயே அவர் வளர்க்கப்பட்டார். பாதுகாப்புக்காக உடன்படிக்கும் மாணவர் என்ற பெயரில் ஒரு பாதுகாவலரும் அவருடன் தங்கியிருந்தார். பெர்னில் உள்ள வடகொரியத் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் மகன் என்ற பெயரிலேயே கிம் ஜாங் உன் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டார். இப்போது கடும் சினம் கொண்டவராக அறியப்படும் கிம் ஜாங் உன் இளமைக் காலத்தில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக இருந்திருக்கிறார். கூடைப் பந்து விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட கிம் ஜாங் உன், மைக்கேல் ஜோர்டானின் தீவிரமான ரசிகர்

2010-ஆம் ஆண்டில்தான் கிம் ஜாங் உன்னைப் பற்றிய அடிப்படையான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. கிம் ஜாங் இல்லுக்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்யப் போகிறவர் என்றும் அடையாளப்படுத்தப்பாட்டார். 2011-ஆம் ஆண்டில் கிம் ஜாங் இல் இறந்த நாளிலேயே சுப்ரீம் லீடர் என்ற பெயரில் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தனதாக்கிக் கொண்டார் கிம் ஜாங் உன். அன்றைய நாள் முதல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தந்தையின் வழியில் அடுத்தடுத்து அணு ஆயுதச் சோதனைகளைச் செய்தார். தேவைப்படும்போதெல்லாம் புதிய வகை ஏவுகணைகளைச் சோதனை செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தினார். விண்வெளிக்குச் செல்லும் அளவுக்கு திறன் மிக்க ராக்கெட்டுகள் இவரது காலத்திலேயே உருவாக்கப்பட்டன.

அதே நேரத்தில் தனக்கு எதிரானவர்கள் என்ற தெரிந்தவர்களை ஒழிக்கும் நடவடிக்கைகளையும் கிம் ஜாங் உன் மேற்கொண்டு வந்தார். அவர்களில் ஒருவர் ஜாங் சுங்-தயீக். கிம் ஜாங் உன்னின் மாமா. கிம் ஜாங் உன் பதவிக்கு வருவதற்கு உதவியாக இருந்தவர். பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும், கட்சியைப் பிளவுபடுத்த முயன்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 5 நாள்கள் கழித்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக பல தகவல்கள் உலா வருகின்றன. தயீக்கை ஒரு அறையில் அடைத்து, வேட்டை நாய்களைக் கொண்டு கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

2007-ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபர் வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து தொலைபேசியில் பேசியதாகக் கண்டறியப்பட்டது. வடகொரிய அரசு இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு விளையாட்டு அரங்கத்தில் ஒன்றரை லட்சம்பேர் கூடியிருக்க அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பொது இடத்தில் இதுபோன்று தண்டனைகள் நிறைவேற்றப்படுவது, வட கொரியாவில் சர்வசாதாரணம். மரணதண்டனைகள் சாதாரணத் துப்பாக்கிகள் கொண்டு நிறைவேற்றப்படுவதில்லை. போர்களில் பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர்களை இதற்காகவே வடகொரிய அதிகாரிகள் வைத்திருக்கிறார்கள்.

மனித உரிமை என்பதற்கு அதிபராகப் பார்த்து அளிக்கும் சலுகை என்பதுதான் கிம் ஜாங் உன் உள்பட வடகொரிய ஆட்சியாளர்களின் அகராதியில் பொருள். சிறைகள், வதை முகாம்கள், கொலைக்களங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் இந்தப் பொருள் புதைந்திருக்கிறது. சிறையை விட்டுத் தப்பிக்க நினைத்தவர்கள் எந்த விசாரணையும் இல்லாமல் கொல்லப்படுவார்கள். அதற்கு இன்னொரு ஆதாரம். அது கிம் ஜாங் நம்மின் கொடூரமான கொலை. இவர் கிம் ஜாங் உன்னின் சகோதரர். தந்தை கிம் ஜாங் இல்லின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். இவர்தான் வடகொரியாவின் அதிபராவார் என்று நினைத்திருந்தபோதுதான் அந்த இடம் கிம் ஜாங் உன்னுக்கு வந்து சேர்ந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தார் கிம் ஜாங் நம். தகவல் அளிக்கும் இயந்திரத்தின் அருகே அவர் நின்று கொண்டிருந்தபோது ஒரு பெண் அவர் அருகே வந்து அவரது முகத்தில் ஒரு திரவத்தைப் பீய்ச்சி அடித்தார். மற்றொரு பெண் அவரது முகத்தில் ஈரமான ஒரு துணியை வைத்து மூடினார். பதறிப்போன கிம் ஜாங் நம், அருகேயிருந்த காவல்துறை அதிகாரிகளை உதவிக்கு அழைத்தார். என்ன நடந்தது என அவர்களிடம் விளக்கினார். சில நிமிடங்களில் அவருக்கு மயக்கம் வந்தது. அதன் பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை. ஏனென்றால் அவர் முகத்தில் தெளிக்கப்பட்டது வி.எக்ஸ். எனப்படும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும் கொடிய ரசாயனம். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட இந்த ரசாயனம், தோல்வழியாக உடலுக்குள் ஊடுருவி சில நிமிடங்களில் உயிரைப் பறித்துவிடும். இதனைத் தயாரிப்பதும் பயன்படுத்துவதும் போர்க்குற்றத்துக்கு ஒப்பாகும். இத்தகைய கொடிய ரசாயனம் சாதாரணமாக யாருக்கும் கிடைக்காது. தற்போதிருக்கும் ஆதாரங்களின்படி பார்த்தால், 4 வடகொரிய உளவாளிகள், இரு பெண்களைப் பயன்படுத்தி கொலையை அரங்கேற்றியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இப்போது கிம் ஜாங் உன்னின் அரசியல் பிம்பம் சற்று மாறியிருக்கிறது. ட்ரம்புடன் சொற்போர் நடத்தும் அதே நேரத்தில் அண்டை நாடுகளுடன் நேசக் கரம் நீட்டுகிறார். சீனாவின் அதிபர் ஸீ ஜின்பிங்கையும், தென்கொரிய அதிபர் மூன் ஜேவையும் சந்தித்து உலக நாடுகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இப்போது அமெரிக்க அதிபருடனான சிங்கப்பூர் சந்திப்பை எதிர்நோக்கியிருக்கிறார். இந்தச் சந்திப்பு கிம் ஜாங் உன்னுக்கு புதிய கதவுகளைத் திறக்கக்கூடும்.


https://www.youtube.com/watch?v=kfpqKnaYy6k&ab_channel=WallStreetJournal

https://www.facebook.com/watch/?ref=saved&v=210741430784144

அதிபர் டிரம்ப்புடனும் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள கிம் முயற்சி மேற்கொண்டார். 2018 ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது. வட கொரியாவில் அணுசக்திப் பரிசோதனைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அந்த சந்திப்பு நடைபெற்றது.

டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜோங்-உன் - பகைமை மாறி நட்பு
படக்குறிப்பு,

டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் - பகைமை மாறி நட்பு

அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்தி வைப்பதாக அப்போது திரு. கிம் கூறினார். ``அணுகுண்டு தயாரிக்கும்'' முயற்சியில் வெற்றி அடைந்துவிட்டதால், அணுகுண்டு பரிசோதனை வளாகத்தை மூடிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்புகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்புகள் இருந்தன. ஆனால் கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிப்பது என்ற உத்தரவாதத்தை வடகொரியா அளிக்கவில்லை என்று நிபுணர்கள் கூறினர். அணுசக்தி சோதனைகளை நிறுத்துவதாக ஏற்கெனவே வாக்குறுதிகள் அளித்தபோது அவற்றை கடைபிடிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதற்கு அடுத்த ஆண்டில் இந்த இரு தலைவர்களும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் சேர்ந்து சாதாரண முறையில் - ஆனால் பெரிதும் முக்கியத்துவமான - வகையில் சந்தித்தனர். வடக்கு மற்றும் தென் கொரியா இடையில் ராணுவம் இல்லாத இடைநிலப் பகுதியில் அந்தச் சந்திப்பு நடைபெற்றது.

கிம் ஜாங்-உன்னும் மூன் ஜேவும்

இருந்தபோதிலும், அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவு பின்னர் மோசமானது. வட கொரியா தன் அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடாத வரையில், தடைகளை நீக்க முடியாது என டிரம்ப் மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

பிறகு 2020 ஜனவரி மாதத்தில், அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது நீண்டதூர ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்தி வைப்பதாக வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக கிம் அறிவித்தார். ``இந்த உலகம் புதிய ராணுவ ஆயுதத்தைப் பார்க்கப் போகிறது'' என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.


ஆட்சி நிர்வாகத்தில் பாதுகாப்பு அமைச்சர்களை கிம் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார். 2011ல் இருந்து ஆறு ஆண்கள் இந்தப் பதவியை வகித்துள்ளனர். ராணுவப் படைகளின் விசுவாசத்தின் மீது அவருடைய நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக இது உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிம் -ன் சகோதரி கிம் யோ-ஜாங் கொரியா தொழிலாளர் கட்சியில் உயர் பொறுப்பில் இருக்கிறார்.

வட கொரியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு 2013ல் தீவிர முயற்சி நடைபெற்றதாகக் கூறப்பட்டது. அப்போது தான் தன் சகோதரியின் கணவர் சாங் சோங்-தயீக்கிற்கு அவர் மரண தண்டனை நிறைவேற்றினார். அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டில் தங்கியிருந்த பெரியம்மா மகன் கிம் ஜோங்-நாம் பிப்ரவரி 2017ல் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கொல்லப்பட்டதற்கும், கிம் தான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.

கிம் ஜாங் உன்: "நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா" - யார் இவர்?

கிம் உடன் சில நிகழ்ச்சிகளில், முந்தைய அறிமுகம் இல்லாத ஒரு பெண் பங்கேற்ற காட்சிகளை தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யும் வரையில், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் தெரியாமல் இருந்தது. திரு கிம் ``காம்ரேட் ரி சோல்-ஜு'' என்பவரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக 2012 ஜூலையில் அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது.

திரு. கிம் மற்றும் திருமதி ரி ஆகியோருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
படக்குறிப்பு,

திரு. கிம் மற்றும் திருமதி ரி ஆகியோருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கிம்- இன் மனைவி ரி பற்றி அதிகம் தகவல்கள் கிடையாது. ஆனால் அவருடைய மிடுக்கான தோற்றத்தைப் பார்த்து, அவர் உயர்ந்த அந்தஸ்துள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரி ஒரு பாடகராக இருக்கலாம் என்றும், அதனால் கிம் கவனத்தை பெற்றிருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தத் தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக தென் கொரியா புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரிய தொழிலாளர் கட்சியில் உயர் பொறுப்பில் இருக்கும் கிம் யோ-ஜோங், தென் கொரியாவில் ஒலிம்பிக் போட்டியில் கிம் சார்பில் கலந்து கொண்ட போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கிம் -இன் மூத்த சகோதரர் கிம் ஜோங்-ச்சோல் அதிகாரப்பூர்வ பதவி எதிலும் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

https://www.youtube.com/watch?v=NnG0HB5Jg3E&ab_channel=News7Tamil

https://www.youtube.com/watch?v=NnG0HB5Jg3E&ab_channel=News7Tamil

https://www.youtube.com/watch?v=33waoauq01w&ab_channel=criminalsandcrimefighters

https://www.facebook.com/watch/?ref=saved&v=210741430784144

https://www.facebook.com/watch/?ref=saved&v=210741430784144