Thursday 7 January 2021

தேன் தமிழ் தடாகத்தின் சர்வதேச செய்திகள், முதலில் புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்

 புலம்பெயர் தமிழர்களின் செய்திகள் 

                                                            09 Saturday January

இந்த வார இறுதியில் இன்றும் நாளையும் நோர்வே முழுவதும், குறிப்பாக பேர்கன் நகரிலும், கடுமை யான பனிப்பொழிவு நிகழும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


நோர்வே நாடுமுழுவதும், கொரோண தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது, முதலில் 84 வயதுக்கு மேற்பட்ட, முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் ஏற்றப்படும் என பேர்கன் கொம்யூன் அறிவித்துள்ளது.


லண்டன்: ஆக்ஸ்போர்டு கொரானா தடுப்பூசிக்கு, பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அந்த நிறுவனம் தயாரிக்கும் கோவி ஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் மார்டனா ஆகிய நிறுவனங்களின், தடுப்பூசியை தொடர்ந்து இந்த தடுப்பூசியும் இங்கிலாந்தில் களமிறங்குகிறது. பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு, பிரிட்டனில் இப்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

கனடா தமிழர்களை சிறிலங்கா நாடாளுமன்றில் காட்டிக்கொடுத்த தமிழ் கல்விமான்?

கடும் கோபத்தில் உலகத் தமிழர்கள். வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும்,

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன்,

சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின்

கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

No comments:

Post a Comment