Tuesday 19 January 2021

அமெரிக்க அதிபர்கள்

அமெரிக்க ஐக்கிய இராட்சியத்தின் அதிபராக நாளைய தினம், ஜோ பைடன் அவர்கள் தனது பதவியை பொறுப்பேற்கின்றார். இந்த பின்னனியில் நடந்து முடிந்த அமெரிக்க நாட்டின் ஜனநாயகத்தேர்தலில் பல சிக்கல்கள் குளறுபடிகள் நடந்தன, அப்படி என்னதான் நடந்துவிட்டது என்பதை விபரிக்கும் ஒரு ஆவண செய்தியாக தேன் தமிழ் ஓசையின், தடாகம் தொலைக்காட்சி உங்களுக்காக அதனைகாட்சிப்படுத்துகின்றது. தேன் தமிழ் தடாகம் தொலைக்காட்சிக்காக ஆவணப்ப்டுத்துபவர் தேன் தமிழ் ஓசை தேவதாஸ்!

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில்தான் அதிகாரப்பூர்வமாகப் புதிய அதிபர் பொறுப்பேற்க முடியும். அதற்கு, தலைநகர் வாஷிங்டன் டி சி-யில் பதவியேற்பு விழா நடத்தப்படும், அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார். 

இதன்படி, 2021ஆம் ஆண்டு ஜனவரி 20 இன்று ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்பார்கள். தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து, புதிய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடங்குவதற்கான நேரம், அதாவது ஜனவரி 20 வரையிலுமான காலம், ப்ரெசிடென்ஷியல் ட்ரான்சிஷன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், ஒரு இடைநிலைக் குழுவை உருவாக்குகிறார். இது பதவியேற்றவுடனேயே பணியைத் தொடங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறது. அதன் படி ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பொறூப்பை ஏற்றுக்கொள்வார்.


புதிய அமெரிக்க அதிபர், ஜோ பைடன்: தன் சொந்த வாழ்வில் சோகங் களை சந்தித்த மனிதர், சோகங்கள் தாளாமல் தற்கொலைக்கு  துணிந்த ஒரு சோக மனிதன், நடத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் போராட்டம். மூன்று தடவைகள் அதிபராகும் போட்டியில் ஈடுபட்டு, இறுதியாக அவர் வென்று இன்று அதிபராக பதவி ஏற்கின்றார். அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி, அதிபர் பதவியை பிடிக்கிறார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்.

ஜோ பைடனின் சொந்த வாழ்க்கை போலவே, தற்போது நடந்த, தேர்தல் களமும், மிக சிக்கல் வாய்த்ததும், போராட்டம் மிக்கதாகவும் அமைந்தது.

ஆனால், தமது தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளமாட்டார் என்பதை டிரம்ப் பிரசாரக் குழு குறிப்பாக உணர்த்தியது.

மில்லியன் கணக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்படாத நிலையிலேயே தேர்தல் நாளன்று இரவே தாம் வெற்றி பெற்றுவிட்டதாக தவறாக கூறினார் அதிபர் டொனால்டு டிரம்ப். பிறகு, தேர்தலில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக ஆதாரம் ஏதுமில்லாமல் கூறினார் டிரம்ப்.

கொரோனா வைரசால் உலகிலேயே அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா ஆன நிலையில், புதிய தொற்றுகளும், மரணங்களும் அதிகரித்துக் கொண்டிருந்தபோது இந்த தேர்தல் நடந்தது. பைடன் அதிபரானால், பொது முடக்கங் களை அறிவிப்பார், இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் எனறு டிரம்ப் வாதிட்டார். மறுவலத்தில்,

கோவிட் 19 பரவாமல் தடுப்பதற்குத் தேவையான, போதுமான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார் ஜோ பைடன். இவ்வாறான தேர்தல் பரப்புரைகளின் பின்னனியில் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.

இந்த பவி ஏற்பு விடயத்தில் சட்டசிக்கல் வரக்கூடுமா என்று உங்களில் சிலர் நினைக்க கூடும். ஆம். நிச்சயமாக. எந்தெந்த மாகாணங்களில் பைடன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறதோ, அங்கெல்லாம் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை.

அவரின் ஆதரவு அதிகாரிகள் நாட்டின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சில அஞ்சல் வாக்குகளை எண்ணிக்கைக்குள் கொண்டு வராமல் இருப்பதே இவரின் நோக்கம். இது முதலில் அந்தந்த மாகாணங்களின் நீதிமன்றங்களிலும் பின்னர் உச்ச நீதி மன்றத்திலும் விசாரணைக்கு வரும்.

ஆனால், இது போன்ற விவகாரங்களால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படாது என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் மேற்கொள்ளப்படலாம் என்றும், ஆனால் இது முடிவுகளைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். அவர் தனது முயற்சிகளில் வெற்றிபெறவில்லை என்றால், தோல்வியை ஏற்க அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும்.ஈது இவ்வாறு இருக்க,  டரம்பின் ஆதரவாளர்கள் ட்ரம்பின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் வாசிங்டன் னகரில் கலவரங்களை ஏற்படுத்தினார்கள், வாசிங்டனில் உள்ள ஹபிடல் ஹில்ல் என்ற அரச அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து க்லவரங்களில் ஈடுபட்டார்கள். இதனால் வரலாற்றில் ஒரு மோசமான ஜனாதிபதி என்ற வரலாற்று வடுவையும் ட்ரம் அவர்கள் பெற்றதோடு மட்டுமல்ல, அமெரிக்காவின் கரி நாளாகவும் இது வர்ணிக்கப்பட்டது;

ஒரு சிலர் இந்த கேள்வியை மனதுக்குள் எழுப்பக்கூடும் அதாவது டொனால்ட் ட்ரம் பதவி ஏற்பில் கலந்து கொள்வாரா என்பதே அது!  ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்கவோ அல்லது பைடெனின் பதவியேற்பு விழாவில் புன்னகையுடன் பங்கேற்கவோ எந்தக் கட்டாயமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவருக்குச் சில சட்டப் பொறுப்புகள் உள்ளன. பைடெனின் குழு பொறுப்பை ஏற்கத் தொடங்க, அவர் தனது நிர்வாகத்துக்கு அனுமதியளிக்க வேண்டும். அதேவேளை தற்போதைய அதிபர் என்றவகையில் தனது பொறுப்பை அவர் கன்னியமாக னேராக கையளிக்கவேண்டும். இது கொஞ்சம் உணர்வு பூர்வமான னிலையும் சங்கடமான் னிலையுமாகும். எனவே அவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு தன் தோவியை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இந்த வெற்றியின் மூலம் 1990க்குப் பிறகு ஒரே ஒருமுறை மட்டும் பதவி வகிக்கிற முதல் அதிபராகிறார் டிரம்ப்.

1900ம் ஆண்டுக்குப் பிறகு அதிக சதவீத வாக்காளர்கள் இந்த முறை வாக்களித்துள் ளனர். இதுவரை பைடன் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். இது வரலாற் றில் இதுவரை எந்த அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இது.

8 ஆண்டு காலம் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபராக தாம் பணியாற்றிய வெள்ளை மாளிகைக்கு தற்போது அதிபராக திரும்பி வருக்கிறார் பைடன்.

78 வயதாகும் பைடன், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபராகவும் இருக்கின்றார்.

ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபரையும் தம்முடன் வெற்றிப்பாதையில் அழைத்து வந்திருக்கிறார்  பல்லின பின்புலம் குறிப்பாக இந்தியாவின் தமிழகத்தில் உள்ள ஒரு பெண்மணியை தாயாகவும், பிறேசில் நாட்டு குடிமகனை தந்தயாகவும் கொண்ட பெண்மனி உப ஜனாதிபதியாகின்றார். இவர் வேறு பலவகைகளில் முதலாவது என்று சொல்லத் தக்க பெருமைகளையும் தன்னோடு கொண்டுவருகிறார்

உபஜனாதிபதி தமிழ் பின்னனியை கொண்ட பெண் என்பதால், எமது ஈழத்து உறவு  களுக்கு மிகுந்த உட்சாகம். தமது இனப்பிரச்சினயில் கமலா ஹரிஸ் காத்திரமான சில நகர்வுகளை கையாளக்கூடும் என்பதே அந்த உட்சாகத்துக்கான காரனமாகும். ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவயில் இருந்து ட்ரம் நிர்வாகம் விலகிக் கொண்ட அதேவேளை பைடனின் நிர்வாகம் மனித உரிமை பேரவயில் இணன்ந்து கொள்ளும், அதேவேளை மார்ச் மாததில் நடக இருக்கும் மனித உரிமை பேரவிக்கு தலமை தாங்கும் நாடாக பிரித்தானிய அமைகின்றது என்பதானால் எமது இழத்து உறவுகளூகு இந்த பதவி ஏற்பு மகிழ்ச்சியாக்வே அமைகின்றது.

புதிய ஜனாதிபதியாகும் பைடன் அவர்கள்,  புதிய நிர்வாகத்தை கட்டமைக்கிற கடுமையான பணியை உடனடியாக  தொடங்கவேண்டும்,  சீர்குலைந்து போயுள்ள வெளியுறவு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். இதைவிட  மூன்று மாதங்களுக்கு உள்ளாக அவர் ஓர் அமைச்சரவையை அமைக்கவேண்டும், முன்னுரிமை கொள்கைகளை முடிவு செய்யவேண்டும், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிற, கூர்மையாகப் பிளவுபட்டுள்ள நாட்டை ஆள்வதற்குத் தயாராக வேண்டும் இப்படியான பல்வேறுவிதமான அவசர அவசிய பொறுப்புகளை பைடன் அவர்கள் விரைந்து செயலாற்றவேண்டும்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில்தான் அதிகாரப்பூர்வமாகப் புதிய அதிபர் பொறுப்பேற்க முடியும். அதற்கு, தலைநகர் வாஷிங்டன் டி சி-யில் பதவியேற்பு விழா நடத்தப்படும், அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார். 

தேன் தமிழ் ஓசையின் தாடாகம் தொலைக்கட்சிக்காக தொகுத்து வழங்கியவர் தேன் தமிழஸோசை தேவதாஸ்




Thursday 7 January 2021

தேன் தமிழ் தடாகத்தின் சர்வதேச செய்திகள், முதலில் புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்

 புலம்பெயர் தமிழர்களின் செய்திகள் 

                                                            09 Saturday January

இந்த வார இறுதியில் இன்றும் நாளையும் நோர்வே முழுவதும், குறிப்பாக பேர்கன் நகரிலும், கடுமை யான பனிப்பொழிவு நிகழும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


நோர்வே நாடுமுழுவதும், கொரோண தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது, முதலில் 84 வயதுக்கு மேற்பட்ட, முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் ஏற்றப்படும் என பேர்கன் கொம்யூன் அறிவித்துள்ளது.


லண்டன்: ஆக்ஸ்போர்டு கொரானா தடுப்பூசிக்கு, பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அந்த நிறுவனம் தயாரிக்கும் கோவி ஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் மார்டனா ஆகிய நிறுவனங்களின், தடுப்பூசியை தொடர்ந்து இந்த தடுப்பூசியும் இங்கிலாந்தில் களமிறங்குகிறது. பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு, பிரிட்டனில் இப்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

கனடா தமிழர்களை சிறிலங்கா நாடாளுமன்றில் காட்டிக்கொடுத்த தமிழ் கல்விமான்?

கடும் கோபத்தில் உலகத் தமிழர்கள். வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும்,

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன்,

சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின்

கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது.