Friday 31 May 2019

Thursday 30 May 2019

பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை

பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு தயவு செய்து எவரும் இடமளிக்கக்கூடாது என கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “கெகிராவை, மடாடுகம பிரதேசத்தில் தௌஹீத் பள்ளிவாசலை முஸ்லிம் சகோதரர்களே சென்று உடைத்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் மதரீதியான, கோட்பாடுரீதியான பல்வேறுபட்ட பிரிவுகள் இருக்கலாம்.

அவைகளை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பள்ளிவாசல்களை உடைப்பது தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வது மிகமோசமான ஒரு பயங்கரமான செயலாகும்.

இவ்வாறான செயல்களினூடாக முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு தாங்களே அழிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இன்று இச்சம்பவங்களை ஏற்படுத்தியிருக்கின்ற பயங்கரவாதிகளின் குறிக்கோள்களாகும்.

ஆகவே தயவு செய்து எவரும் அதற்கு இடமளிக்கக்கூடாது. தௌஹீத் பள்ளிவாசல்களை உடைப்பதோ தப்லீக், தௌஹீத், சூபிஸம் வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வதன் ஊடாக ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

எனவே இதுதொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையில் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்படவேண்டிய தீர்மானங்களாகும்.

இதைவிடுத்து இப்பிரச்சினை தொடர்பில் மார்க்கத்திற்கு முரண்பாடான செயற்பாடுகள் எங்காவது நடைபெறுமாக இருந்தால் இந்த விடயங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் தலைமைகள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சு ஆகியவற்றினால் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.

தவிர ஊர்களில் நினைத்தவர்கள் எல்லாம் தங்களின் சொந்த விருப்பத்திற்கு பள்ளிவாசலை உடைக்கின்ற நிலைமையினை ஏற்படுத்திவிடக்கூடாது.

இவ்வாறான செயற்பாடுகள் மிகமோசமான நிலைமையினை ஏற்படுத்துவதோடு கடந்த யுத்தகாலங்களிலே சகோதர இனம் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டதினூடாக எவ்வாறான விளைவுகளை சந்தித்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.

ஆகவே தயவு செய்து அவ்வாறு தமது இனத்துக்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்துவதற்கு நீங்கள் முன் உதாரணமாக இருந்து விடாமல் உடனடியாக இச்சம்பவத்தினை கண்டிப்பதுடன் இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுக்க வேண்டும்.

அத்துடன், தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்ற வேறுபாடுகள் வித்தியாசங்களை உருவாக்கிக்கொள்ளாமல் ஒற்றுமையாக மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதுடன் நாம் அனைவரும் முஸ்லிம்கள் "லாயிலாஹ இல்லழ்ழாஹ்" எனும் கலிமாவை சொன்னவர்கள் எங்களுக்குள் பலவேறுபாடுகள் இருக்கலாம்.

எனவே இந் சூழ்நிலையில் மிகக்கவனமாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ளவேண்டும்.

குறிப்பாக பள்ளிவாசல்களை உடைப்பது, இன்னும் ஒரு குழுவுக்கு எதிராக அறிக்கைகளை விடுவது, காட்டிக்கொடுப்பது, சந்தர்பத்தினை பயன்படுத்தி அரசியல் ரீதியாக பழிவாங்க முனைவது, சந்தர்பத்தினை பயன்படுத்தி மார்க்கரீதியான பிளவுகளை தூண்ட முனைவதெல்லாம் மிகமோசமான பாதகமான அல்லாஹ்வினால் மன்னிக்கமுடியாத குற்றங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இது ஒரு முனாபிக்தனமான செயற்பாடாகும். எனவே தயவு செய்து தீவிரவாதிகளுக்கும், எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நீங்கள் எவரும் துணைபோய்விடக்கூடாது என மிக அன்புடன் புனித மக்காவில் இருந்து மிக உருக்கமாக இந்த கோரிக்கையினை” விடுப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Monday 27 May 2019

ஒரு அருமையான மகாபாரதப் பதிவு…

Jaffna Metronews
ஒரு அருமையான மகாபாரதப் பதிவு…
பஞ்சப் பாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். ஒரு அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று அவரிடம் கேட்டான். குதிரையின் உரிமையாளரோ, "ஐயா! இந்தக் குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், இந்தக் குதிரையை நான் இலவசமாகவே கொடுப்பேன்" என்றார்.
சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான். குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்! ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறியக் கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்தப் பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்துப் பதில் சொல்லுங்கள்" என்றார்.
சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.
சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக் கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலைக் கேட்டான். குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லி விட்டு, இந்தக் குதிரையை நீங்கள் இலவசமாகவே பெற்றுக் கொள்ளுங்கள். துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானைப் புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.
நகுலனால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.
அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலையைக் கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார். "ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலி எல்லாம் போட்டுப் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? பதில் சொல்லி விட்டு, இந்தக் குதிரையைக் கொண்டு செல்லுங்கள்" என்றார்.
அர்ஜுனனால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.
பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும்,"அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார். அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான். அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.
"அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக அப்படி என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள். தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்... "தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத் தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்..." என்று விரிவாகக் கூறினார். "
உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன்.
அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத் தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறியக் கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரைக் காப்பாற்ற மாட்டார்கள். இதைத் தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரியக் கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது. அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.
ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத் தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார். அடுத்து மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள் தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத் தான் இருப்பார்கள். இதைத் தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்கின்ற கேள்விக் குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்...
கதையின் நீதி : இந்தக் கதை தான் தற்போது தமிழக மக்களாகிய நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற வாழ்க்கை

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா?

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா?
இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார், அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும். எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார், சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார். அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது. ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா??
உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா, உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா??
சிந்திப்பீர் மனிதர்களே!!!
ஏழைகளின் தோழ்
படித்ததில் பிடித்தது👍

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர்

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டேலா கூறியது;
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் ஜனாதிபதியான பின் ஒருநாள் நான் எனது முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன்.
அங்கு ஒரு உணவகத்தில் எல்லோரும் அமர்ந்தோம். அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது எனக்கு எதிர் மேசையை கவனித்தேன்.
ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார்.. எனது படைவீரனை அனுப்பி, அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன். அவரும் தனது உணவுடன் எமது வட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.. எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்.
எனது படை வீரன் என்னிடம் சொன்னான்..... அந்த மனிதர் பார்ப்பதற்கு மிகவும் நோய்வாய்ப் பட்டவராகத் தெரிகிறார். அவர் உண்ணும் போது கைகள் மிகவும் நடுங்கின என்றான்..
நான் குறுக்கிட்டேன்..... அது அல்ல உண்மை. வீரனே....!!
உண்மை என்ன தெரியுமா......!!
நான் முன்னர் சிறையில் இருந்த போது, இந்த மனிதர்தான் எனக்கு சிறைக் காவலராக இருந்தார்.என்னை அடிக்கடி கொடுமைப் படுத்திக் கஷ்டப்படுத்தும் போதெல்லாம்....
நான் கூக்குரலிட்டு , களைத்து, இறுதியில் கொஞ்சம் நீர் அருந்தக் கேட்பேன்..
இதே அந்த மனிதர், அவ்வேளை என்னிடம் வந்து நேராக என் தலை மேல் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார்.
இப்போது அவர் என்னை இனம் கண்டு கொண்டார். நான் இப்போ தென் ஆப்பிரிக்க அதிபராக இருப்பதால், அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று நடுக்கத்துடன் எதிர்பார்த்தார்....
ஆனால் இது எனது பழக்கமல்ல. இப்படிப்பட்ட குணம் எனதுமல்ல..
பழிக்குப் பழி வாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதரையோ தட்டி யெழுப்பாது. அழித்து விடும்.
அதே நேரம் சில விஷயங்களில் மனதின் சகிப்புத் தன்மை, பெரிய சாம்ராஜ்யங்களையே உருவாக்கும்...... என்றார் மண்டேலா..