Wednesday 6 March 2019

ஒரு ஏழையின் மதத்திற்கும்

ஒரு ஏழையின் மதத்திற்கும், ஒரு பணக்காரனின் மதத்திற்கும்
அடிப்படையில் ஒரு வித்தியாசம் உண்டு. ஒரு ஏழை, மதத்தில்
ஆர்வமுள்ளவனாக இருந்தால், அது வெறும் மாற்றுதான்
(Substitute). அவன் கடவுளைப் பிரார்த்தித்தால், அது தன்
பொருளாதார மேம்பாட்டிற்காகவே இருக்கும். ஒரு மனிதனின்
உண்மையான அடிப்படைத் தேவை, இன்னும் அவனிடம்
ஏற்படவில்லை. ஏழைகளைப் பொறுத்தவரையில், மார்க்ஸ்
மிகவும் சரியே. மதம், மக்களுக்கு போதைப்பொருள் போன்றது
என்று அவர் சொன்னது ஒரு வகையில் சரியே. ஏனெனில்
அவர்களால் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படைத்
தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை.
ஆகவே, அதற்கு மாற்றாக பிரார்த்தனை, தியானம், யோகா
மற்றும் மதம் முதலானவற்றைக் கையாளுகிறார்கள். ஆனால்,
பணக்காரனைப் பொறுத்தவரையில், அவனிடம் அடிப்படை
மாற்றம் இருக்கிறது. அவன் இப்பொழுது பொருளாதார
மேம்பாட்டைக் கேட்கவில்லை. அவன் இப்பொழுது வாழ்வின்
அர்த்தத்தைக் கேட்கிறான்.
கிருஷ்ணர், மஹாவீரர், புத்தர் மற்றும் சமண மதத்தின் 24
தீர்த்தங்கரர்கள், இந்து மதத்தின் 24 அவதாரங்கள் அனைவரும்
பணக்கார மக்களே. அவர்கள் எல்லாம் அரச குடும்ப
பிறந்தவர்கள், ராஜ குமாரர்கள். இந்தியா கண்ட இந்த
அவாதரங்களில், ஒருவர் கூட ஏழை இல்லை, இயேசு மாத்திரம்தான் ஏழ்மையில் இருந்தார்; ஆகவேதான் அவர் சிலுவையில் அறையப்பட்டார்
. ஒரு ஏழையின் மைந்தனை
சுலபமாக சிலுவையில் அறைய முடியும்.

No comments:

Post a Comment