Friday 18 January 2019

தனிமனித மரணமும், ஒஸ்லோ தமிழ் கத்தோலிக்க ஆன்மீக சபையின் அலட்சியமும்!

தனிமனித மரணமும், ஒஸ்லோ தமிழ் கத்தோலிக்க ஆன்மீக சபையின் அலட்சியமும்!


                                                                                          அன்பர்களே கடந்த மூன்றாம் திகதி தை மாதம் 2019 ஒஸ்லோ நகரில், நாவாந்துறையை சார்ந்த  புலம் பெயர் தமிழ் கத்தோலிக்கர் ஒருவர் மரணமடைந்தார், அவர் தன்னை ஒஸ்லோ   பங்கில் அங்கத்துவராக பதிவு செய்துகொள்ளவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு, அவரின் இறுதி திருப்பலிப்  பூசை ஒப்புக் கொடுக்கப்ப‌டவில்லை, இதனால் ஒஸ்லோ நகரசபையானது, அவருக்கு நெருங்கிய உறவுகள் யாரும் இல்லை என்பதாக எண்ணிக்கொண்டு, அவரின் நல்லடக்கத்தை தாமே செய்துகொண்டனர், அவரது நல்லடக்கத்    துக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது துயரமான சம்பவம்!

                                                                                                        இறந்த நபரோ, தாயகத்தில் நடந்த துயர சம்பவங்களினால், மன அழுத்தத்திற்கு ஆளாகி, ஒருவித தனிமை வாழ்வை வாழ்ந்திருக்கின்றார், இப்படி மன அழுத்தங்களுக்கு ஆளானவர் புலம் பெயர் மக்களில் நிறையவே உண்டு. பொதுவாக நாவாந்துறை மக்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், தாமாகவே முன் வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு, திருப்பலியை ஒப்புக்கொடுப்பா ர்கள், அவ்வாறு பேர்கன் மற்றும்  பல இடங்களில் இருந்து, ஒஸ்லோ நோக்கி ஓடிச்சென்றனர், இறந்த நபர் தன்னை  பங்கிலே பதிவு செய்யவில்லை, எனவே இவரை ஆலயத்துக்கு கொண்டுவருவதோ, அல்லது திருப்பலி நிறைவேற்றுவதோ முடியாத காரியம் என்று சட்டத்தை தூக்கி நிறுத்தி னார்கள், ஒஸ்லோ ஆலைய பரிபாலனம்!

                                                                                                           ஒஸ்லோவில் இருக்கும், நோர்வேஜிய ஆலய பரிபாலனத்துக்கு, நமது பங்கிலே இருக்கும் நடைமுறை தெரிய வாய்ப்பு இருக்காது, நமது பங்கிலேயேயும், யாரும் தன்னைத்தானே முன்வந்து பதிவு செய்துகொள்வதில்லை, ஆனால் பிறப்பில் இருந்தே நாம், ஆலையத்தில் பதிவுசெய்யப்பட்டுவிடு கின்றோம், ஞானஸ்நானம் என்ற அருட்சாதனம் வழியாக நாம், திருச்சபையோடும் அந்த பங்கோடும் இணைக்கப் படுகின்றோம். புலம் பெயர்ந்துவந்த மக்கள், தாம் புலம் பெயர்ந்துவந்த இடத்தில், தம்மைதாமே பதிவு செய்வத ற்கான வாய்ப்புகள் மிக மிக அரிதாகவே இருக்கின்றது.

                                                                                                   கோவிலுக்கு சந்தா கட்டுவதன் மூலமாக, அங்கத்தவர்கள் பங்கிலே பதிவு செய்யப்படுகின்றா ர்கள். அந்த பொறுப்பை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக சபையே செய்கின்றது, இறந்த நபர் ஆலயத்துக்கு வருபவர் ஆனால் கோவிலுக்கு சந்தா கட்டவி ல்லை, அதாவது தன்னை பதிவு செய்யவில்லை, இதன் அர்த்தம் குறித்த நபருக்கு, பங்கிற்கு சந்தாப்பணம் கட்டவேண்டும் என்ற அவசியம் தெரிந்திருக்காது, அல்லது தமிழ் ஆன்மீக சபை அவரை அணுகி இருக்காது, ஆன்மீக சபை அவரை அணுகியதா? என்ற குறுக்கு விசாரனைக்கு மாண்டவர் மீண்டும் வரவேண்டும்!

                                                                                 ஒஸ்லோ தமிழ் ஆன்மீக சபையானது, இறந்தவர் தமிழ் கத்தோலிக்கர் என்று தெரிந்திருந்தால், அவரைபற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொண்டு, அவரின் பதிவை ஒருவிடயமாக கருதா மல், மனிதாபிமான ரீதியில் அவருக்குரிய இறுதி ஆன்மீக விடய ங்களை செய்திருக்கவேண்டும், முற்றிலும் இது ஒஸ்லோ தமிழ் ஆன்மீக சபையின் அலட்சியம் என்றே கருத இடமுண்டு.  ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொள்வோம், இறந்த ஒருவர் ஒரு மனோவியாதி கொண்டவர், அவருக்கு உறவுகள் யாரும் இல்லாத தனிநபர் என்று வைத்துக் கொள்வோம், அவர் பிறப்பிலே கத்தோலிக்கர் என்று தெரிந்து இருந்தும், அந்த நபர் இறந்துவிட்டால், பரிசேயர் சதுசேயர்கள் போல, பதிவு என்னும் சட்டத்தை தூக்கி பிடிப்பீர்களா? அல்லது மனிதாபிமானத்தோடு கிறிஸ்துவின் பிள்ளையாக ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு விடை எதிர்பார்த்து, இந்த விடயத்தை இத்தோடு முடிக்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment