Tuesday 31 July 2018

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


அகவை அறுபதுக்கு வந்துவிட்ட தேவா அண்ணன் (பேசாலைதாஸ்) உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்! எங்கள் ஊரில் பிறந்து, எங்கேயோ ஒரு நாட்டில் அடைக்கலம் தேடி வாழ்ந்தாலும், எங்கள் ஊரையும், எங்களையும் நீங்கள் மறந்து வாழ்ந்ததில்லை, உங்கள் எழுத்துக்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் இவை வழியாக எங்களை நினைவு கூறுகின்றீர்கள். நீங்கள், பேசாலையில், இளைஞர் மன்ற உறுப்பிணராக இருந்த போது, மேடையேற்றிய புதுமை நாடகங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றது. வெளிநாடு சென்று, பலவருடங்கள் கழித்து, கற்பிட்டி கடல்வழியாக, பேசாலை வந்தபோது, என்போன்ற பலகலைக்கழக மாணவர்கள், படிப்பை தொடர முடியாமல், வறுமையால் வாடியதைக்கண்டு, அமரர் துரம் மாஸ்டர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலமாக, எங்களுக்கு காசோலைகள், அனுப்பி உதவி செய்ததை மறக்கமுடியுமா அண்ணா! துரம் மாஸ்டர் அறக்கட்டளை பின்னர் தவிர்க்கமுடியா காரனத்தால் நீங்கள் கைவிட்டீர்கள், அதற்கு பேசாலை மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போனதாக அதன் ஆலோசகர் நேசம் பச்சேக் ஆசிரியர் சொல்லக்கேள்விப்பட்டோம். பேசாலை கலைஞர்களை கெளரவிக்க பெரும் பணச்செலவில், வாழும் போது வாழ்த்துவோம் என்ற கலைவிழா இன்னும் உங்களை  ஞாபகமூட்டுகின்றது.  அதைத்தொடர்ந்து, குருக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விழா எடுக்கப்படும் என அறிவித்தீர்கள். அதனை இன்னும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்! வெகுவிரவில் அதனை செய்து எமது ஊரின் குருக்கள், கன்னியாஸ்திரிகள், ஆசிரியர்களை கெளரவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் பிறந்த நாளான இன்று உங்களின் பரிசாக கேட்கின்றோம்! உங்கள் சிந்தனை மிக்க கதைகள், கவிதைகள், துணிச்சலான அரசியல் கடுரைகளால் எங்கள் சிந்தனைகளை தூண்டும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து சொல்லிவிடைபெறுகின்றோம்.  
                                                                                அண்ணனின் விழுதுகள்!.

No comments:

Post a Comment