Saturday 6 January 2024

அன்னை பூபதி கலைக்கூடமா? அல்லது ஊழல் கொட்டகையா?

அன்னை பூபதி கலைக்கூடமா? அல்லது ஊழல் கொட்டகையா? தேன் தமிழ் ஓசை

தமிழ்தீ என்ற இணையத்தளத்தில் வெளியாகிய அன்னை பூபதியின் கணக்கு விபரங்கள் பற்றிய ஒரு பதிவை நாம் இங்கு மீண்டும் பதிவு ஏற்றுகின்றோம். இதில் உள்ள உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.  ஐயங்கள் சந்தேகங்கள் சமூக ஊடக ங்களில் வெளிவருவது தவிர்க்கமுடையா அம்சம், பொது விடய ங்களில் ஈடுபடும் அமைப்புகள், தனிநபர்கள் வெளிப்படை தன் மையாக நடந்து கொண்டால்,  இப்படிப்பட்ட வீண் விவாதஙள் தவிர்க்கபட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆர்வமுள்ளவர்கள் இதன் உண்மைத்தன்மையினை அறியவேண்டும் என நாம் விரும்புகி ன்றோம்.  இதோ அந்த பதிவு

நிதிநிர்வாகம் தொடர்பான ஐயம் – வீண்விரயம் – வெளிப்படைத்தன்மையின்மை!

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத் தலைமை நிர்வாகி நிர்மலன் செல்வராஜாவின் பதவி விலகலையும்; றொம்மன் வளாக நிர்வாக மாற்றத்தையும் கோரி கடந்த சில மாதங்களாகப் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் குரல்கொடுத்து வருகின்றனர். அதற்கான காரணிகளில் கலைக்கூடத்தின் ஐயத்திற்குரிய நிதிநிர்வாகவும் முக்கியமான ஒன்றாகும்.

அங்கத்தவர்களைக் கொண்ட தன்னார்வ நிறுவனங்களுக்கான நோர்வே அரச உதவித்தொகை மற்றும் தமிழ் கற்பித்தல், கலைப் பாடங்கள் மற்றும் இன்னபிற சேவைகளுக்காகப் பெற்றோர்களிடமிருந்து ( அங்கத்தவர்களிடமிருந்து) அறவிடப்படும் வெவ்வேறு கட்டணங்கள் எனப் பல மில்லியன் கணக்கான நிதி கலைக் கூடத்திற் புழங்குகின்றது.

இந்நிலையில் வரவு – செலவு தொடர்பான தகவல்கள் உரிய வெளிப்படைத்தன்மையுடன் அங்கத்தவர்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுவருகின்றன. அத்தோடு நிதிக்கையாளுகை தொடர்பான பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, கலைக்கூட நிதிவளங்கள் வீண்விரயம் செய்யப்படுகின்றமை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

தலைமை நிர்வாகியே நிதிப்பொறுப்பினையும் பல ஆண்டுகளாகத் தன்வசம் வைத்துள்ளார்.  நிர்வாகத்தின் கணக்காளர் என்போர் வெறுமனே கணக்குப் பதிவுகளைச் செய்வோராக இயங்குவதாகவே அறியப்படுகின்றது. நிதிநிர்வாகம் தொடர்பான பரிசோதகர் குழு, கண்காணிப்புக் குழு, மீளாய்வுக் குழு என எதுவும் இயங்கவில்லை என அறியமுடிகின்றது. நோர்வே முழுவதும் கிளைகளைக் கொண்ட - பெருந்தொகை நிதி புழங்கும் ஒரு நிறுவனத்தின் நிதிமுகாமைத்துவம் தனியொரு நபரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை அனுமதிக்க முடியாது.

அதாவது தலைமை நிர்வாகி தவிர்ந்த ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு நிதி வரவுகள் அரச உதவித்தொகை,செலவுகள் உட்பட்ட நிதி  நடவடிக்கைகள் பற்றிய தவகல்களும் அறிதல்களும் இல்லாமல் அல்லது போதாமையாக உள்ளது. கல்விக்கூடத்தின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான தகவல்களையும் அறிதல்களையும் கொண்டிராது- தனியொருவரின் மேலாதிக்கத்திற்குள் நிதிக்கையாளுகை முற்றிலும் சென்றடைய அனுமதித்ததால் ஏனைய நிர்வாகிகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களாவர். இதிலுள்ள கூட்டுப்பொறுப்பினை அவர்கள் தட்டிக்கழிக்க முடியாது. கணக்குப்பதிவும் தலைமை நிர்வாகியின் வழிநடத்திலிலேயே மேற்கொள்ளப்படுகிறது.   நிதி தொடர்பாக நிர்வாக உறுப்பினர்களுடமும் மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதனை நிர்வாக உறுப்பினர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

தமிழர் வள ஆலோசனை மையக் கட்டடக் கொள்வனவிற்காகப் பெறப்பட்ட வங்கிக்கடன் கிட்டத்தட்ட அதேயளவு இன்னும் கடனாகவே உள்ளது. மாதாமாதம் வட்டி மட்டுமே வங்கிக்குச் செலுத்தப்படுவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருத்தமான நிதிநிர்வாக வழிமுறைகளும் பொறிமுறைகளும் கையாளப்பட்டிருப்பின் கட்டடக் கொள்வனவிற்காகப் பெறப்பட்ட வங்கிக்கடனில் கணிசமான தொகையினை இன்றளவில் மீளச் செலுத்தியிருக்க முடியும். இன்றைய சூழலிற் சாதாரண ஒரு குடும்பம் தமது வீட்டுக்கொள்வனவிற்காக வங்கியிற் பெறும் கடன்தொகையினை ஒத்த கடன்தொகையே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டடம் கொள்வனவு செய்யப்பட்டபோது பெறப்பட்ட கடன்தொகையாகும். சாதாரண வீட்டுக்கடன் மீளளிப்பிற்கான அண்ணளவான காலம் என்பது 25 – 30 வருடங்களாகும்.

கலைக்கூடத்திற்குக் கடந்த 3 வருடங்களிற் கிடைக்கப் பெற்ற அரச நிதி உதவித்தொகையின் விபரம் வருமாறு:

• Barne-, ungdoms- og familiedirektoratet:

- 2021: 896 073 kr | 2022: 929 147 kr | 2023: 979 484 kr

• Landsrådet for Norges barne- og ungdomsorganisasjoner:

-  2021: 409 584 kr | 2022: 413 780 kr | 2023: 420 876 kr

• Lotteri- og stiftelsestilsynet:

- 2021:  77 617 kr | 2022: 270960 kr | 2023: 103 180 kr

ஆதார இணைப்பு:

https://tilskudd.dfo.no/mottaker/985315515...

2023இன் தரவின்படி அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்கான ஒரு ஆண்டுக்கான மொத்த அரச உதவித் தொகை ஒன்றரை மில்லியன் குரோணர்கள்.

அத்தோடு குறைந்தது 500 மாணவர்கள் றொம்மன் வளாகத்திற் தமிழ், கலைப்பாடங்கள் உட்பட்ட சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்துகின்றனர். ஆண்டொன்றில் ஆளுக்கு 1500 kr என்று பார்த்தாற்கூட 1500x500 = 750 000 Kr வருகின்றது.

தமிழர் வள ஆலோசனை மையத்திற்கான (TRVS) அரச உதவித் தொகை:

2021 : 611 604 kr

2022 : 203 172 kr

2023 : 53 740 kr

இதைவிட அங்கத்துவக் கட்டணமாக ஒவ்வொரு மாணவரும் வருடாந்தம் 100 kr செலுத்துகின்றனர். றொம்மன், லோறன்ஸ்கூக், வைத்வெத், தொய்யன், மொட்டன்ஸ்ரூட் ஆகிய வளாகங்களில் புதிய பெற்றோர்களிடமிருந்தும் தவனை அடிப்படையில் 5000 Kr கட்டிட நிதியாக அறவிடப்படுகின்றது.

பெற்றோர்களுக்கு (அங்கத்தவர்களுக்கு) இந் நிதி விபரங்கள் தொடர்பனான பொறுப்புக்௯றும் நிறுவனமாக இந் நிருவாக மாற்றம் அமைய வேண்டும்.

அண்ணளவாகப் பார்த்தாற்கூட அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் மற்றும் தமிழர் வள ஆலோசனை மையம் ஆகிய இரு நிறுவனங்களும் ஆண்டொன்றுக்கு இரண்டரை முதல் மூன்று மில்லியன்கள் ( 2 500 000 Kr – 3 000 0000 Kr) நிதி வரவினைக் கொண்டுள்ளன.

நோர்வேஜிய நிறுவனங்களின் வருடாந்தக் கணக்கறிக்கைகளுக்கான (https://www.regnskapstall.no) இணையத்தளத்தில் எவரும் சென்று பார்க்க முடியும். அன்னை பூபதி கலைக்கூடத்திற்கான கணக்கறிக்கை அந்தத் தளத்திற் தேடியபோது கிடைக்கப் பெறவில்லை.

‘ Annai Poopathi Tamilsk Kultursenter Rommen er ikke regnskapspliktig og/eller har ikke levert årsregnskap til Brønnøysundregisteret’

என்ற கூற்றினை அங்கு காணமுடிந்தது.

நிதிநிர்வாகம் தொடர்பான வெளிப்படைத்தன்மையின்மை, ஐயத்திற்கிடமான நிதிக்கையாள்கை, நிதி வளங்களின் வீண்விரயம் தொடர்பான அவதானிப்புகள் புறக்கணிக்கப்பட முடியாதவை.   கணக்காளரின் (Revisor) கணக்கு, உண்மைக் கணக்கு இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. நிதிக்கையாளுகை விபரங்களும் கணக்கறிக்கைகளும்  முமுமையான வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் பெற்றோருக்கு முன்வைக்கப்படவேண்டும்.  அன்புடன் தேன் தமிழ் ஓசை www.theantamiloasai.com

Thursday 4 January 2024

வைரமாளிகை

வைரமாளிகை பேசாலைதாஸ்

1970 அந்த வரமாளிகை பற்றிய  களின் இறுதிக்கால கட்டத்தில், யாழ் பஸ் நிலையத்தில் உங்கள் நினைவுகள் சுழன்று வந்தால், கட்டாயம் இந்த வரைமாளிகை மனிதனைப்பற்றிய உங்கள் நினைவுகளும் ஒட்டிக்கொள்ளும். அவர் ஓர் சுவாரஸ்யமான மனிதர், விளம்பர நாடோடி, உண்மையை உரைத்தால் அவர் ஒரு செய்தி அறிவிப்பாளர் என்று கூட சொல்லலாம், அந்த கதாபாத்திரம் சிந்தனையை கிளறிவிடக்கூடியது, நான் யாழ் பல்கலைக்கழகத்தில், தமிழ் சங்கத்திற்காக, நாளை மறுதினம் Day after Tommorow என்ற நாடகத்தை அரங்கேற்றினேன். அதில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் உரைஞன் (Narator), நான் வேடமேற்று நடித்தேன். அந்த கதாபாத்திரத்தை வைரமாளிகை போலவே நான் ஒப்புவித்தேன். அது ரசிகர் மத்தியில் நன்றாக எடுபட்டது. அந்த வைரமாளிகை மனிதனைப்பற்றிய முகநூல் பதிவு ஒன்று இப்படி விபரக்கின்றது.

வைரமாளிகை என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையைப் பின்புலமாய்க் கொண்ட ஒருவரின் பெரிய நகைக்கடையின் பெயராகும். ஆனால் வைரமாளிகை என்பது அந்த நகைக்கடையைவிட ஒரு மனிதனின் பெயராகவே யாழ்குடாநாடு எங்கும் அறியப்பட்டு இருந்தது. வைரமாளிகை (Diamond House)என்று தனது ஆடைகளில் முன்னும் பின்னுமாகப் பொறிக்கப்பட்ட எழுத்துக்களுடன் சுவிப் டிக்கற், பத்திரிகை விற்பனை என்பவற்றுடன் விளம்பரமும் செய்யும் மனிதரான வைரமாளிகையையே எமது பேசுபொருள். உயர்ந்த கறுத்த தோற்றமுடைய 60 வயதுக்கு மேற்பட்ட வைரமாளிகை "22 கரட் தங்க நகைகள் நயம் நம்பிக்கை நிறைந்தது" என்ற உரத்த குரலோடு இவர் யாழ் பஸ் நிலையத்தைச் சுற்றி வருவார். கஸ்தூரியார் வீதி ஸ்டான்லி வீதி ஆஸ்பத்தியடி என்று காணப்படுவார். கிட்டத்தட்ட 1960 முதல் 1987வரையில் யாழ் மக்களுக்கு மட்டுமல்ல வன்னி உட்பட மற்றைய பிரதேசங்களில் இருந்து வருபவர்களும் பஸ் நிலையத்தில் அவரைக் கட்டாயம் கண்டிருப்பார்கள். நல்லூர்த் திருவிழாவா சென் பற்றிக்ஸ் பெரிய கோவில் விசேடமா அங்கெல்லாம் அந்த நீலநிற வைரமாளிகை விளம்பரம் எழுதப்பட்ட உடையுடன் எங்கும் தென்படுவார். பெரும்பகுதியாக வைரமாளிகை யாழ் பஸ்நிலையத்தையே சுற்றி வருவார். உரத்த குரலில் திடுக்கிடும்படி பேசுவார். சத்தமிட்டு சிரித்து பற்களை நற நற என்று சத்தம் வரும்படி நெருமி நிமிர்ந்து ஆமிக்காரன் போல நடப்பார். ஓடுவார். ஆடுவார். பாடுவார். வெயில் மழைக்கு ஒதுங்காத ஓய்வெடுக்க சற்று குந்தியிருக்க ஒத்துக்கொள்ளாத இடைவிடாத இயக்கமுடையவர் வைரமாளிகை.

தன்னை வியப்புடனும் பயத்துடனும் பார்க்கும் குழந்தைகட்கு அருகே சென்று வைரமாளிகை விளையாட்டுக் காட்டுவார். மேஜிக் காட்டி பொக்கற்றிலிருந்து இனிப்பு வரவழைத்து தருவார். நகருக்குப் புதியவர்களுக்கு போகவேண்டிய இடங்களை விளக்க நேரம் எடுத்துக் கொள்வார். முதியவர்கள், அங்கவீனர்கள், பெண்களுக்கு உதவி செய்வார். தெருக்களைக் கடக்க உதவுவார். வழிகாட்டுவார். யாழ் பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்கள் செல்லும் நேரம் இடம் திசை, எந்தெந்தக் கிராமம் தெருக்கள் ஊடாகச் செல்கிறது என்பதெல்லாம் விளக்கிச் சொல்வார். "பருத்தித்துறை 750 இலக்க பஸ் வெளிக்கிடுகிறது. 577 இலக்க தெல்லிப்பழை பஸ் வெளிக்கிடுகிறது ஏறுகிறவர்கள் எல்லாம் ஏறுங்கள்" என்ற அவரின் குரல் யாரும் வேதனம் தராமலே ஒலிக்கும். யாழ் பஸ்நிலையத்தில் பஸ்ஸிற்குக் காத்திருக்கும் மக்களுக்கு வைரமாளிகை சிறந்த பொழுதுபோக்கு. எல்லோரும் அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். வைரமாளிகை நகைக்கடை விளம்பரத்துடன் சுவிப் டிக்கற் விற்பார். சிலசமயம் பத்திரிகைகள் சஞ்சிகைகள் கொண்டு திரிவார். பத்திரிகைகளில் வரும் செய்திகளை உரக்கச் சத்தமிட்டு சொல்வார். அந்தக் காலத்தில் கோகிலாம்பாள் வழக்கு நடைபெற்ற சமயம் அமிர்தலிங்கம் கோகிலாம்பாளுக்காக வாதாடியபோதும் அவளுக்குத் தண்டனை கிடைத்தது. அப்போது தீப்பொறி பத்திரிகை அமிர்தலிங்கத்தை கோகிலாம்பாள் புகழ் அமிர்தலிங்கம் என்று எழுதியது. ஆங்கில மோகமும் மிதப்பும் கொண்ட ஜீ ஜீ பொன்னம்பலத்தை சீ சீ பொன்னம்பலம் என்று எழுதியது. இச்செய்திகளை வைரமாளிகை சத்தம் போட்டுச் சொல்வார். வைரமாளிகைக்குப் பின்னால் திரிந்தால் பேப்பர் வாசிக்கத் தேவையில்லை என்று பகிடியாய்ச் சொல்லப்படுவதுண்டு.

அக்காலத்தில் தொலைக்காட்சிகள்; வராத காலம். ஒரு பேப்பரை வாங்கிப் பலர் படிப்பார்கள். வாசிக்கும் பழக்கம் வளரத் தொடங்கிய காலம். அக்காலத்தில் வைரமாளிகை ஊர் உலக நடப்புகளையும் தன் சொந்தக்கதைகளையும் ஒன்றுசேரப் பேசும் மனிதராக மக்கள் தொடர்பாளராக இருந்தார். அவர் ஒரு விளம்பரம் செய்யும் ஆளாக பேப்பர் சுவிப் டிக்கற் விற்கும் ஒரு அலைந்து திரியும் வியாபாரியாக இருந்தார் என்பதையும் மீறி அவருள் மனிதர்களிடம் பேசும் உரையாடும் மக்களை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவிட முடியாத பண்பு இருந்தது. தனது வியாபார, விளம்பர விடயங்களுக்கு வெளியேதான் அவர் அதிக விடயங்களைப் பேசுவார். வேடிக்கை, சிரிப்பு, முரட்டுத்தனம் இடையறாப் பேச்சுக் கொண்ட உணர்வுபூர்வமான தீவிரமான மனிதன் வைரமாளிகை. பினாட்டு, கூழ், சிவப்புக் குத்தரிசியின் பெருமை பேசி முருங்கைக்காய் கறியோடு தன் தாயிடம் சோறு தின்ற கதை, சனிக்கிழமை உடம்புக்கு எண்ணை தேய்த்து சீயக்காய் அரப்பு வைத்து குளிக்கும் அவசியம் என்பதெல்லாம் யாரும் கேளாமலே அவரின் விபரிப்புகளில் இடம் பிடிக்கும். நல்லூர் கொடியேறி விட்டது சன்னிதியானின் திருவிழா பாசையூர் அந்தோனியார் திருவிழா சென் பற்றிக்ஸ் பெரிய கோயில் கொண்டாட்டம் எல்லாம் அவரிடம் செய்தியாக மக்களுக்கு வரும்.

அவரின் சொந்த இடம் மானிப்பாய். குடும்பம் எதுவும் கிடையாது. கொஞ்சக்காலம் மறியலிலும் இருந்தவர் என்று சனங்கள் அவரைப்பற்றி பேசிக் கொண்டார்கள். அவருக்கு வைர மாளிகை நகைக்கடையிலிருந்து விளம்பரம் செய்வதற்கு கூலியாக மாதம் 60 ரூபாவும் புதுவருடம் தீபாவளி விசேடங்களுக்கு கொஞ்சக் காசும் கிடைத்து வந்தது. அவர் பகல் பொழுதில் கிடைத்ததைச் சாப்பிட்டு பழைய மாக்கற்றுக்கு அருகில் உள்ள ஒரு கடையில் தானே வாங்கி வைத்திருக்கும் தேயிலை, பால்ரின்னைக் கொண்டு பால் தேத்தண்ணி போட்டுக் குடிப்பார். இரவு படுக்க வைரமாளிகை நகைக்கடைக்குப் போவார். 1980களில் யாழ்ப்பாணம் மாறத் தொடங்கிவிட்டது. பலர் வெளிநாட்டுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். தொலைக்காட்சிகள் விளம்பர சேவைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. வைரமாளிகையின் தொடர்ச்சியாக யாழ் பஸ்நிலையத்தில் மணிக்குரல் விளம்பரச் சேவை தொடங்கிவிட்டது. போர் வந்தபோது வைரமாளிகையினால் பழைய தன் வாழ்வைத் தொடர முடியவில்லை. சுவிப் டிக்கற் பத்திரிகை விற்பனைகள் இல்லை. நகை வாங்குவோர் குறைந்ததுடன் நகைக்கடையான வைரமாளிகையின் ஆதரவும் நெருக்கடியாகிவிட்டது. அவர் 1987ம் ஆண்டில் இந்திய இராணுவத்திடம் உணவுப் பொருட்களை விலைக்கு சிறிய அளவில் வாங்கி விற்பனை செய்து தனது வயிற்றுப்பாட்டைத் தீர்த்துக் கொள்ள முயன்றார்

வைரமாளிகை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத வெளிப்படையான மனிதன். அவரிடம் இரகசியங்கள் இருந்ததில்லை. மனிதர்களுடன் உறவாடி வாழ்ந்த மனிதன். வைரமாளிகை யாழ் பிரதேச மக்களின் விகடகவி. அவர்களின் தெனாலி ராமன். யாழ் பிரதேச மக்களின் நினைவுகளோடு கலந்தவன். யாழ்ப்பாண நகரின் உயிருள்ள பொது அடையாளங்களில் ஒருவன். யாழ் பஸ் நிலையமும் நூல் நிலையமும் திரும்பி விட்டன. ஆனால் வைரமாளிகையையோ உடைத்தெறியப்பட்ட யாழ்ப்பாண கோட்டையைப் போல என்றும் திரும்பாதவன்.