Saturday 17 June 2023

*பரதவர்களும் கத்தோலிக்க திருச்சபையும்*

பரதவர்களும்   கத்தோலிக்க திருச்சபையும்*


முத்து குளித்துறை கிறிஸ்தவம் ( pearl fishery coast ministry) தொடங்கி கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் *கிறிஸ்தவத்திற்கும் பரதவர்களுக்கும் 2000 ஆண்டு உறவு உண்டு. பாண்டிய நாட்டு முத்துக்கள் உலக புகழ் பெற்றவை. இந்த *முத்துக்கள் தான் பரதவர்களை கிறிஸ்தவர்களாக* மாற்றியது .
*"உன்னிடம் உள்ள விலை உயர்ந்த தங்கம் போன்ற பொருட்களை விற்று விலை உயர்ந்த முத்து ஒன்று வாங்கு"* என இயேசு கூறியதாக பைபிள் கூறுகிறது.
உலகம் முழுவதும் பாண்டிய நாடு முத்து வணிகம் செய்து செழிப்புற்று விளங்கியது. *சாலமோன்* காலம் தொட்டு முத்து வணிகம் நடந்துள்ளது. அருகில் உள்ள *ஒபீர் ( உவரி)* மற்றும் *கொற்கை* துறைமுகங்கள் மூலம் பாண்டிய நாட்டுடன் மேலை நாடுகள் வணிகம் செய்துள்ளனர்.
கடலில் மூச்சு அடக்கி, ஆபத்தான சுறா மீனை நீக்கி இந்த முத்துக்களை எடுத்து வணிகம் செய்தவர்கள் இந்த நெய்தல் நிலத்து கடலோடி பரதவ மக்கள்.
1311மாலிக்காபூர் படையெடுப்பின் காரணமாக பரதவ குல பாண்டியர் ஆட்சி மதுரையில் விழ்ச்சி அடைந்தது, அதன் பின்னர் விஜயநகர ஆட்சி, அதன் பிறகு நாயக்க மன்னார் ஆட்சி அமைத்தது. 1532 பிறகு கடலோடி பரதவர் மக்களை அழிக்கும் நோக்கில், அரேபிய மூர்களும், நாயக்க மன்னரும் முத்துகுளித்துறையை கைப்பற்றி கொடுமைகள் நிகழ்த்திய போது பரதவர்கள் எதிர்த்து போரிட்டு பல ஆயிரம் உயிர்களை இழந்தனர்.
பரதவர்களை இன அழிப்பு செய்யும் நோக்கில் *" ஒரு பரதவர் தலைக்கு 5 பணம்"* தருவதாக அறிவித்தார் மதுரை நாயக்கர் மன்னர். இதனால் பரதவர் தலைகள் வெட்டப்பட்டு மலைபோல் குவிந்தன, இதனால் அரசு கஜானாவில் பணம் இல்லாமல் போனதால், ஒரு பரதவர் தலைக்கு ஒரு பணம் என்று அறிவிக்க வேண்டிய நிலைக்கு நாயக்கர் அரசு சென்றது. இவ்வாறு கடலோடி பரதவர்கள் மீது பல கொடுமைகள் நிகழ்த்தபட்டது.
இதனால் மீதி இருந்த பரதவர் மக்களை காப்பாற்றவும், முத்துக்குளித்துறை உரிமையை மீட்கவும், 1532 ஆண்டு கொச்சியில் இருந்த *போர்ச்சுகல் அரசு பிரதிநிதிகளுடன் போர் ஒப்பந்தம்* செய்து கொண்டு, *கிட்டத்தட்ட 30 ஆயிரம் பரதவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்கள்.* கத்தோலிக்க கிறித்தவ வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் மதம் மாறிய வரலாறாக இன்றுவரை இது குறிப்பிடப்படுகிறது. அதன்பின் போர்சுகள் படை உதவியுடன் மூர் கடற்படையையும், நாயக்கர் படையையும் போர் செய்து அழித்து பரதவர்கள் முத்துக்குளித்துறையை மீட்டனர்.
இந்தியாவிலும், இலங்கையிலும் இன்று ஆயிரக்கணக்கான *பரதவர் இரத்த சாட்சிகள் மீது தான் இந்த கத்தோலிக்க திருச்சபை திடமாக நிற்கிறது.*
இதில் *வேதாளை மறை சாட்சிகளையும், மன்னார் மறைசாட்சிகளையும்* மற்றும் *பாண்டியன் தீவு மறைசாட்சிகளை* வணக்கத்துடன் நினைவு கூறுகிறோம்.
மேலும் எங்களுக்காக மறை பணியாற்றி மறித்த *பரதவர்கள் ஞான தந்தை புனித சவேரியார்*, மற்றும் *வேதாளை மறைசாட்சி அந்தோணி கிரிமினாலிசே.ச*, அதிக ஆண்டுகள் பரதவர்களின் பாதுகாவலர் புண்ணக்காயல் *தந்தை ஹென்றி ஹென்றிகில்ஸ்* மற்றும் இந்த மறைமாவட்டத்தை உருவாக்கிய *ரோச் ஆண்டகை* உள்ளிட்ட அனைவரையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறோம்.