Friday 13 August 2021

அப்புக்காத்து

                         அப்புக்காத்து

திரைப்படம், நாவல் இவைகளில் தோன்றும் தலைப்பு போல இருக்கின்றதா? இருக்கலாம், இதுவும் ஒரு கதைபோலவே நீட்சி கொள்கின்றது. நாவாந்துறை எனும் யாழ் குடா நாட்டு, மீன்பிடி கிராமத்தின் ஒரு ஏழை மீனவனின் எண்ணத்தில் கருவானதே இந்த அப்புக்காத்து என்ற கற்பனைப்பாத்திரம். இந்த கற்பனைப் பாத்திரம் அந்த ஏழை மீனவன் இசிதோரின் எண்ணத்தில் ஏன் உதயமாகவேண்டும்? அதற்கும் ஒரு வரலாற்று பின்னணி இருக்கவே இருக்கின்றது.

ஏழை மீனவன் இசிதோர் நிலாக்கால இரவுகளில் குருசடி தீவு என்ற மாட்டிறக்க தீவிலே தங்கி மீன்பிடிப்பது வழக்கம், அவரைப் போல பல மீனவர்கள் அந்த தீவிலே தங்கி இளைப்பாறி மீன்பிடி ப்பது வழக்கம், அந்த தீவிலே இசிதோர் எனும் அந்த மனிதன் ஒரு குருசை நட்டி, தன் அதிகமாக ஆசை கொண்ட அந்தோனியாருக் கென்று ஓலைகுடிசையால் கோவில் கட்டி, கும்பிட்டு வழிபட்டு வந்தார், பின்னளிலே முருகை கற்களினால் சிறு கோவில் கட்டி னார், வந்தது வினை!  

வேலனை கிராமசபைக்கு சொத்தமான இந்துத் தீவிலே ஒரு கிறிஸ்தவ ஆலையமா? விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது, ஏழை மீனவன் இசிதோர் விடுவதாய் இல்லை, யாழில் பெயர் பெற்ற இரத்தின சபாபதி, பொன்னம்பலம் போன்ற வக்கீல்மாரை கொண்டு வாதாடி நாவாந்துறைக்கு சொந்தமான தீவாக குருசடித்தீவை வெற்றி கொண்டார். அன்றில் இருந்து தனது கடைசி ஆண் செல்லக்குட்டி வக்கீலா வரவேண்டும் என்று ஆசைப்பட்டு, மொன்மொலின் ஜெராட் என்றவனை அப்புக்காத்து என்று செல்லமாக கற்பனையோடு அழைத்தார், அந்த கற்பனை உலக பெயர் பெற்ற லண்டன் பல்கழைக்கழகங்களில் ஒன்றான லண்டன் பல்கலைக்கழகத்தில், சட்ட இளம்மானி LLB(Hones) , பின்னர் சட்ட முதுமானி LLM யாக பரிணமித்தது. பெருமாபலன தமிழர்கள் சட்டக்கல்லூரிக்கு சென்று ஒரு சொலிஸிட்டராகாவோ சட்டத்தரணியாகவோ வருவார்கள் ஆனால் பல்கலைக்கழகம் சென்று சட்டத்தில் பட்டம் பெற்று வழக்கறிஞராவது குறைவு. நாவாந்துறை வரலாற்றில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் நபர் அப்புக்காத்து என்று அழைக்கப்படும் மொன்மொலின் ஆவார்.

இந்த அப்புக்காத்தை நான் என் கல்லூரிக்காலத்தில் இருந்து அறிவேன், வழக்கறிஞராகவேண்டும் என்ற அப்பாவின் கனவு ஒரு புறம் இருக்க இவனுக்குள் சமூக சேவை என்ற எண்ணப்புயல் சூழ்ந்து கொண்டது, குருவாக வர ஆசைப்பட்டு குருமடம் வந்தான், ஆனால் குருவாகவரவேண்டும் என்ற எண்ணத்தைவிட, தன் ஊரின் மீது இருந்த தீராக்காதல் அவனை துறவற வாழ்வில் இருந்து ஓரம்கட்டியது, அன்றில் இருந்து அவனுக்கு ஒரே ஊரின் உயர்ச்சி பற்றி எண்ணமே அவனுக்குள் இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் ஊரின் எண்ணமே அவனுக்குள். 

தமிழர்கள் புலம் பெயரும் காலக்கொடுமைக்குள் அகப்பட்ட அப்புக்காத்து காலக்கொடுமைக்குள் அள்ளுப்பட்டு நோர்வே பேர்கன் வந்தான். அங்கும் வந்தும் அவன் சும்ம இருக்கவில்லை, புலம் பெயர் தமிழர்கள் நலம்பெறவேண்டும் என்று அவாக்கொண்டு, பேர்கனில் தமிழ் மாணவர் அமைப்பிலே தீவிரமாக உழைத்தவர். துருவக்குரல் என்ற கையெழுத்து சுவடு களை பேர்கனிலே ஆரம்பித்தார், பின்னர் மாணவர் அமைப்பு சகல் தமிழர்களை உள் வாங்கவேண்டும் என்ற நோக்கில் பேர்கன் தமிழ் சங்கம் உருவாகவேண்டும் என்பதில் முன்னோடியாக செயல்பட்டான் அப்புக்காத்து.

 தமிழ் சங்கம் ம்க கம்பீரமாக செயல்படத்தொடங்கியது, ஐக்கிய நாடுகள் சபையில் துணிந்து, தமிழரின் பிரச்சனைகளை முதன் முதலாக ஓங்கி ஒலிக்கச்செய்த வைகுந்தவாசனை அழைத்து கெளரவித்து பாட்டியது பேர்கன் தமிழ் சங்கம், அப்படிப்பட்ட பேர்கன் தமிழ் சங்கம் இப்போதும் இருக்கின்றதா? சென்று கேட் கும் அளவுக்கு தமிழ் சங்கத்தின் இன்றைய பரிதாப நிலை, அது இருக்கட்டும் அப்புக்காத்து என்ற அலைக்கு மீண்டும் வருகின் றேன்.

தமிழ் சங்கத்தில் தீவிரமாக உழைத்த அப்புக்காத்துகுள் ஒரு எண்ணம் உதயமானது, புலம் பெயர் தமிழருக்கு ஒரு சங்கம் இருப்பதுபோல நாவாந்துறையில் இருந்து உலகமெல்லாம் புலம் பெயர்ந்தவர்களுக்கென ஒரு சங்கம் இருக்கவேண்டும் என்று எண்ணி, நாவாந்துறை சென் மேரிஸ்  சர்வதேச சங்கம் என்ற ஒரு அமைப்பு உருவாக முதன்மை காரணியாக இருந்தான், இந்த கால கட்டங்களில் சங்கம் ஊடாக அன்றி தன் சொந்த முயற்ச்சியால் பல திட்டங்களை முன்னெடுத்தான், நெருக்கமாக பிணைபட்டு வாழும் தன் உறவுகள் வசதியாக வாழவேண்டும் என்ற நோக்கிலே சூரியவெளியில் காணிகளை கைப்பற்றி இருதயபுரம் என்ற ஒரு குடியேற்றத்தை ஆரம்பித்தான். 

பின்னர் நாவாந்துறை கடற்கரை பகுதிகள் அழகுற அமையவேண் டும் என்று எண்ணி, பூங்கா, விளையாட்டு திடல், ஓய்வாக இருக்க அழகிய கடற்கரை, அதோடு கலாசாரமண்டபம் என்பன எல்லாம் அமையவேண்டும் என எண்ணி, அழகிய வரைபடம் ஒன்றை தீட்டி எனக்கு காண்பித்தான் அப்புக்காத்து, ஆண்டிகள் கூடி மடம் கட்டு வதுபோல் உன் எண் ணங்க இருக்கின்றது என்று நான் கிண்டல டிப்பேன், அதனால் அவனுக்கும் எனக்கும் சிற்சில கோபங்கள் ஊடலைபோல. ஆனால் தன் கொண்ட சிந்தையில் தீவிரமானன் அப்புக்காத்து, கடற்கரையில் காலாச்சார மண்டபம், கன்விலும் பிதற்ற தொடங்கினான், தன் கறப்னைக்கு உருக்கொடுக்கொடு க்க செயல்பட தொடங்கினான் அப்புக்காத்து, அதன் விளைவாக வாடிப்பிரச்சனை பூதாகரமாக செயல்பட்டு, கலாச்சர மண்டபம் வேண்டாம் என்ற நிலக்கு தள்ளப்பட்டு, இன்றுவரை அந்த கலாச் சார மண்டம் கற்பனையாகவே இருக்கின்றது, இதற்கான பின்ன ணிகளை அலச எடுத்தால் அதுவே ஒரு மகாபார்தம் போல ஆகி விடும் அதை இதோடு விடுகின்றேன் மீண்டும் அப்புக்காத்தின் செயல்பாடு பற்றி சிலாகிக்க ஆசைப்படுகின்றேன்,,,,,,