Sunday 2 February 2020

காமத்தில் இருந்து கடவுளுக்கு

காமத்தில் இருந்து கடவுளுக்கு 
அன்புள்ள ஓஷோ...
என்னுடை செக்ஸ் ஆசையை என்ன செய்வது ?
ஓஷோ கூறுகிறார்....
எப்பொழுதெல்லாம் செக்ஸ் ஆசை எழுவதை நீங்கள் உணர்கிறீர்களோ, அங்கு மூன்று விதமான வாய்ப்புக்கள் இருக்கின்றன...
ஓன்று - அதை இயல்பாக அனுபவிப்பது.
எல்லோரும் இதைத் தான் செய்கிறார்கள்.
இரண்டு - அதை கட்டுப்படுத்தி அடக்கி வைத்தல். அதனால் அது உங்கள் விழிப்புணர்விலிருந்து இருண்ட பகுதியான விழிப்புணர்வற்ற கீழ் நிலைக்கு செல்லுகிறது.
அது வாழ்வின் அடி நிலைக்கு தூக்கி வீசியெறியப்படுகிறது.
அதைத் தான் அசாதராணமனிதர்கள் என்று உங்களால் அழைக்கப்படும் மாகாத்மாக்கள், ஞானிகள் மற்றும் துறவிகள் செய்கிறார்கள்.
ஆனால் மேற்சொன்ன இருவரும் இயற்கைக்கு எதிரானவர்கள்.
இருவருமே உள்ளார்ந்த அறிவியல் மாற்றத்திற்கு எதிரானவர்கள்.
மூன்றாமவர்கள் - குறைந்த அளவில் வெகுசிலர் மட்டுமே இதை முயற்சிகிறார்கள்....
செக்ஸ் ஆசை தோன்றும்போது கண்களை மூடிக்கொள்ளுங்கள். இது ஒரு மதிப்பு மிக்க கணப்பொழுது.
ஆசை தோன்றுவது என்பது சக்தி தோன்றுவதாகும்.
அது காலைப்பொழுதில் தோன்றும் கதிரவனைப் போன்றது.
கண்களை மூடிக்கொள்ளுங்கள்; தியானம் செய்ய இது தான் சரியான தருணம்.
கீழ் நோக்கி செக்ஸ் மையத்தில் எங்கு உங்கள் கிளர்ச்சியை தூண்டுகின்ற, கிக்கை தருகின்ற பகுதி உள்ளதோ அங்கு ஒரு பார்வையாளரைப் போல் உங்கள் கவனத்தை வைத்து ஆழ்ந்த அமைதியில் கவனியுங்கள்.
சாட்சிபாவமாக இருங்கள்.
அதை கண்டனம் செய்யாதீர்கள். நீங்கள் அதை கண்டனம் செய்தீர்களானால், அந்த சக்தியிலிருந்து வெகு தொலைவில் சென்றுவிடுவீர்கள்.
அதேவேளையில் அந்த சக்தி நிலையை அனுபவிக்காதீர்கள். காரணம் அதை அனுபவிக்க ஆரம்பித்த அந்த நொடியே நீங்கள் விழிப்புணர்வற்ற நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.
இருட்டுவேளையில் எரிகின்ற விளக்கை எப்படி எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் பார்கின்றோமோ அப்படி். உங்கள் விழிப்புணர்வால் நடுங்காமல், சலனமற்று கவனியுங்கள்.
உங்கள் செக்ஸ் மையத்தில் என்ன நடக்கிறதென்று கவனியுங்கள்.
இது என்ன விதமான சக்தி ?
இதற்கு பெயரிடாதீர்கள். ஏனெனில் எல்லா வார்த்தைகளுமே கண்டனம் தெரிவிப்பதாக மாறியுள்ளது.
நீங்கள் அதை செக்ஸ் என்று கூறினால் கூட, உடனடியாக நீங்களே அதனை கண்டனம் செய்யத் துவங்கிவிடுவீர்கள். பெயரிட்டவுடன் அது உடனடியாக கண்டனம் செய்யப்படுகிறது. அல்லது நீங்கள் புதிய ஜெனரேசனைச் சார்ந்தவர்களாக இருந்தால், அந்த புதிய பெயர் பயமுறுத்தும்படி இருக்கும்.
தண்ணுனர்வுப்பாதையில் செல்பவர் அந்த வார்த்தையை உணர்ச்சி கலந்த பெயராக மாறிவிடுவார்கள்.
அதற்கு எந்தப் பெயரும் சூட்டவேண்டாம்.
செக்ஸ் மையத்திற்கு அருகில் ஒரு சக்தி உருவாகும் அந்த உண்மையை கவனியுங்கள். அங்கு கிளர்ச்சி உண்டாவதை கவனியுங்கள். மேலும் கவனித்துக் கொண்டே இருங்கள், முழுமையான ஒரு தரமான புதிய சக்தியை உணருவீர்கள்.
கவனித்துக் கொண்டே இருங்கள், அந்த சக்தி மேல் நோக்கி செல்வதை... அது உனக்குள்ளேயே ஒரு பாதையை கண்டுபிடிப்பதை...
மேலும், அந்த சக்தி மேல் நோக்கி செல்ல ஆரம்பித்ததும், ஒரு குளுமை உங்கள் மீது படர்வதை உணர்வீர்கள், ஒரு அமைதி உங்களை சூழும். ஒரு கருணை, ஒரு அழகு...ஒரு ஆசிர்வாதம், உன்னைச் சுற்றி இருக்கும்.
இனிமேல் எந்த விதமான வலியும் வேதனையும் அங்கிருக்காது.
இனிமேல் அது காயப்படாது, இனி அது உள்ளங்கையை போன்று இனிமையானது.
மேலும் விழிப்புடன் இருக்கையில், அந்த சக்தி உள்ளே மேல்நோக்கி நகரும். அப்படி மேல் நோக்கி இதயம் வரை வரும். அது ஒன்றும் பெரிய கடினமானதல்ல.
தொடர்ந்து விழிப்புணர்வில் கவனித்தாயானால் அது இதயத்தை வந்தடைகிறதை பார்க்க முடியும்.
அந்த சக்தி இதயத்திற்கு வந்தால் தான் அன்பு என்றால் என்னவென்று முதல் முறையாக உன்னால் பார்க்கமுடியும்.
அன்பு என்ற பெயரில் இதுவரைக்கும் போலியான ஒன்றைத் தான் சுமந்து வந்தீர்கள் என்று புரிய ஆரம்பிக்கும்.
சக்தியானது இதய சக்கரத்தை வந்தடைந்ததும், அது அன்பாக உருமாற்றம் அடைகிறது.
ஒரு முறை சக்தியானது அன்பாக உருமாறிவிட்டால், ஒருமுறை நீங்கள் அதை உணர்ந்துவிட்டால், ஒரு முறை உன்னுள் ஊடுருவிவிட்டால், உன்னுடைய முழு இருப்பும் சுத்தமாகியதாக உணரும்.
உன் கன்னித்தன்மையை உணரமுடியும், நீ பரிசுத்தமானவனாக, புனிதமானவனாக உணருவாய்.
சொர்க்கம் வேறெங்கும் இல்லை, உனக்குள்ளேயே உள்ளது என்று உணருவாய், அது உன் இதயத்தில் உள்ளது.
~~ ஓஷோ ~~